தேனி மாவட்டம் வைகை அணையில் மூன்றாம் கட்ட வெள்ள அபாய எச்சரிக்கை விடப்பட்டு உபரி நீர் திறக்கப்பட்டது. 71 அடி மொத்த உயரம் உள்ள வைகை அணையின் நீர்மட்டம் 6.11.21 அன்று 66 அடியாக உயர்ந்ததை தொடர்ந்து முதல் கட்ட வெள்ள அபாய எச்சரிக்கை விடப்பட்டது. 9.11.21 அன்று காலை 9 மணி அளவில் நீர்மட்டம் 68.50 அடியாக உயர்ந்தது. தொடர்ந்து இரண்டாம் கட்ட வெள்ள அபாய எச்சரிக்கை விடப்பட்டது. வைகை அணைக்கு தொடர்ந்து நீர்வரத்து அதிகமாக உள்ள காரணத்தால் வைகை அணையின் நீர்மட்டம் நேற்று இரவு 10 மணிக்கு 69 அடியாக உயர்ந்த உடன் மூன்றாம் கட்ட வெள்ள அபாய எச்சரிக்கை விடப்பட்டு அணைக்கு வரும் நீரில் வினாடிக்கு ஆயிரம் கன அடி வீதம் தண்ணீர் திறந்து விடப்பட்டுள்ளது. ஆகவே வைகை ஆற்றின் கரையோரம் உள்ள மக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு செல்வதற்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. ஆற்றில் குளிப்பதற்கும் துவைப்பதற்கும் யாரும் செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது.
உலகம் முழுவதும் உள்ள தமிழ் செய்திகளை தெரிந்து கொள்ள