நன்றி முரசொலி... எல்லாம் தெரிந்த கால்டுவெல்லும் எதுவும் தெரியாத ஆர்.என்.ரவியும்! “கால்டுவெல்லும் ஜி.யு.போப்பும் பள்ளிப் படிப்பே படிக்கவில்லை” என்று 200 ஆண்டுகளுக்குப் பிறகு கண்டுபிடித்திருக்கிறார் ஆர்.என்.ரவி. அவர் கால்மேல் கால் போட்டு உட்கார்ந்திருப்பதாகவும், அவர் காலடியில் கால்டுவெல்லும் போப்பும் நின்று கொண்டிருப்பதாகவும் ஒரு நாளிதழ் கார்ட்டூன் போட்டுள்ளது. கிறிஸ்தவ நல்லெண்ண இயக்க இயக்கம், இனிக்கோ இருதயராஜின் விளக்கம் ஏழு மொழிகளைக் கற்றும் 15 மொழிகளில் வேர்ச்சொல் காட்டியும் சொல்லாய்வு செய்த திராவிட மொழி நூல் ஞாயிறு தேவநேயப் பாவாணர் எழுதினார். “தமிழர் தொன்மையை உலகிற்கு அறிவித்தார் கால்டுவெல் பெருமகனார். தனித்தமிழுக்கு வித்திட்டவர் பரிதிமாற் கலைஞர்! செடியாகத் தழைக்கச் செய்தவர் நிறைதமிழ் மலையாம் மறைமலையடிகள்! நானோ அதனை மரமாக வளர்த்து வருகிறேன்’’ -–- என்பார் பாவாணர். இதெல்லாம் ஆரியக் கூட்டத்துக்கு எப்படித் தெரியும்? ஏன் இவர்களுக்கு கால்டுவெல் மீது கோபம்? எல்லா மொழிகளும் சமஸ்கிருதத்தில் இருந்து வந்தவை என்று ஆரியக் கும்பல் புரூடா விட்டுக் கொண்டிருந்தபோது, ‘இதில் இருந்து தனித்த அடையாளம...
உலகம் முழுவதும் உள்ள தமிழ் செய்திகளை தெரிந்து கொள்ள