Skip to main content

தமிழகத்தில், நெய்வேலி நிலக்கரி நிறுவனத்தில் பொறியியல் படித்தவர்களுக்கான வேலைவாய்ப்பு!

NLC india recruitment 2022 for 300 Graduate Executive Trainee

தமிழகத்தில், நெய்வேலி நிலக்கரி நிறுவனத்தில் பொறியியல் படித்தவர்களுக்கான வேலைவாய்ப்பு. மொத்தம் 300 பணியிடங்கள் நிரப்பட உள்ளன.

இந்திய பொதுத்துறை நிறுவனமான என்.எல்.சியில், பட்டதாரி நிர்வாக பயிற்சியாளர் (Graduate Executive Trainee) பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன. இந்த பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் 11.04.2022க்குள் விண்ணப்பிக்கலாம்

Graduate Executive Trainee

காலியிடங்களின் எண்ணிக்கை: 300

Mechanical Engineering – 117

Electrical & Electronics Engineering – 87

Civil Engineering – 28

Mining Engineering – 38

Geology Engineering – 6

Control & Instrumentation Engineering – 5

Chemical Engineering – 3

Computer Science and Engineering – 12

Industrial Engineering – 4

கல்வித் தகுதி: 

சம்பந்தப்பட்ட பாடப்பிரிவுகளில் Degree in Engineering or Technology முடித்திருக்க வேண்டும். மேலும் 2022 ஆம் ஆண்டின் GATE தேர்வில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

சம்பளம்: ரூ. 50,000 – 1,60,000

வயதுத்தகுதி: 01.03.2022 அன்று 30 வயதிற்குள் இருக்க  வேண்டும். இருப்பினும், OBC பிரிவுகளுக்கு 3 ஆண்டுகளும், SC/ST பிரிவுகளுக்கு 5 ஆண்டுகளும் வயது வரம்பில் தளர்வு உண்டு.

தேர்வு செய்யப்படும் முறை

இந்த பயிற்சி பணியிடங்களுக்கு GATE தேர்வில் பெற்ற மதிப்பெண்களின் அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.

விண்ணப்பிக்கும் முறை:

விண்ணப்பிக்க  https://web.nlcindia.in/rec022022/ இணையதளப் பக்கம் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும்.

விண்ணப்பக் கட்டணம்: பொதுப் பிரிவினருக்கு ரூ.854, SC/ST, மாற்றுதிறனாளிகள் மற்றும் முன்னாள் ராணுவத்தினர் பிரிவினருக்கு ரூ. 354

விண்ணப்பிக்க கடைசி தேதி 11.04.2022

இந்த அறிவிப்பு தொடர்பாக மேலும் விவரங்கள் அறிய  கீழ்க்கண்ட  ஆவணங்களைப் பார்வையிடவும்.


















Comments

Popular posts from this blog

தீண்டாமை கொடுமையில் இருந்து தங்களை காக்க வேண்டும் என்று தேனி கோட்டைப்பட்டி கிராம மக்கள் ஆட்சியரிடம் மனு!

தீண்டாமை கொடுமையில் இருந்து தங்களை காக்க வேண்டும் என்று தேனி கோட்டைப்பட்டி கிராம மக்கள் ஆட்சியரிடம் மனு! தேனி, மார்ச்., 07:  தீண்டாமை கொடுமையிலிருந்து மக்களை காப்பாற்றுங்கள், அரசு திட்டங்களை செயல்படுத்தவிடாமல் சாதிய வன்மத்துடன் தடுக்கும் நபர்கள் மீது நடவடிக்கை எடுங்கள் என்ற கோரிக்கையுடன் அரண்மனைபுதூர் ஊராட்சி கிராம கமிட்டி தலைவர் பாலசுந்தரராஜ் மற்றும் கோட்டைப்பட்டி கிராம பொதுமக்கள் ஆட்சியரிடம் மனு அளித்தனர். அந்த மனுவில் கூறியிருப்பதாவது:  இந்தியா நாடு சுதந்திரம் அடைந்து 75ஆண்டுகளுக்கு மேலாகியும், தீண்டாமை கொடுமை தலைவிரித்தாடுகிறது. தேனி மாவட்டம், தேனி வட்டம், அரண்மனை புதூர் ஊராட்சிக்குட்பட்ட கோட்டைப்பட்டி கிராமத்தில் ஜாதிய தீண்டாமை கொடுமை நடைபெறுகிறது. இங்கு வாழும் பட்டியல் பிரிவிலுள்ள தேவேந்திரகுல வேளாளர் சமூக மக்களுக்கு கிடைக்கக்கூடிய அடிப்படைவசதி திட்டங்களை தடுத்து வருகிறார்கள். கோட்டைப்பட்டி கிராமத்தில் வாழும் ராஜகம்பளத்து நாயக்கர் சமுதாயத்தைச்சேர்ந்த தங்கப்பாண்டி, சுந்தரவடிவேல், செல்வம் உட்பட பத்துபேர்கள் கொண்ட கும்பல் சேர்ந்து தேவேந்திரகுல வேளாளர் மக்கள் பொருளாதார ரீதிய...

காரைக்குடி சம்பவம்; அரசு ஊழியர்கள் கொதிப்பு!

காரைக்குடி சம்பவம்; அரசு ஊழியர்கள் கொதிப்பு! சிவகங்கை மாவட்டம், காரைக்குடி இராமசாமி தமிழ்க்கல்லூரியில் முத்துமாரி என்பவர் அலுவலக உதவியாளராகப் பணிபுரிந்து வருகிறார்.  நேற்று அவரை, கல்லூரி வளாகத்திற்கு உள்ளே வைத்து, கல்லூரியில் பணிபுரியும் தற்காலிக காவலர் பழனியப்பன் ஆபாசமாகப் பேசி, கொலைவெறித் தாக்குதல் நடத்தியதாக கூறப்படுகிறது. படுகாயம் அடைந்த அவர் மருத்துவமனையில் சிகிச்சைக்கு சேர்க்கப்பட்டுள்ளார்.  இதுகுறித்து அரசு ஊழியர்கள் சங்கம் சிவகங்கை மாவட்ட மையம் விடுத்துள்ள கண்டன அறிக்கையில்: சிவகங்கை மாவட்டம், காரைக்குடி ராமசாமி தமிழ்க்கல்லூரியில் அலுவலக உதவியாளராகப் பணிபுரியும் முத்துமாரி என்பவரை, கல்லூரி வளாகத்திற்கு உள்ளே வைத்து, ஆபாசமாகப் பேசி, கொலைவெறித் தாக்குதல் நடத்திய கொடுஞ்செயலை தமிழ்நாடு அரசு ஊழியர்கள் சங்கம் சிவகங்கை மாவட்ட மையம் வன்மையாக கண்டிக்கிறது. இக்கொடுஞ்செயலில் ஈடுபட்ட கல்லூரியில் பணிபுரியும் தற்காலிக காவலர் பழனியப்பன் என்பவரையும்,அதற்கு தூண்டுகோலாய் இருந்த கல்லூரியின் பொறுப்பு முதல்வர் நாகநாதனையும் வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின்கீழ் கொலைமுயற்சி, வழக்குப் பதிவுசெய்த...

தேனி உழவர் சந்தையில் 04-01-2025 இன்றைய காய்கறி பழ வகைகளின் விலை விபரம்:

தேனி உழவர் சந்தையில் 04-01-2025 இன்றைய காய்கறி பழ வகைகளின் விலை விபரம்: கத்தரிக்காய் 46,40 தக்காளி 20,15 வெண்டைக்காய் 46,40 கொத்தவரங்காய் 35,30 சுரைக்காய் 20,18,15 புடலங்காய்  26,24 பாகற்காய் 40,32 பீர்க்கங்காய் 40 முருங்கைக்காய்  -- பூசணிக்காய் 20,14,10 பச்சைமிளகாய் உருட்டு 75,70 அவரைக்காய் (பட்டை) -- தேங்காய் கிலோ 60 சம்பா மிளகாய் -- நைஸ் அவரை -- பெல்ட் அவரை 110 திராட்சை 80 மலை உருளைக்கிழங்கு 45 உருளைக்கிழங்கு பெங்களூர் 35 உருளைக்கிழங்கு ஆக்ரா 35 கருணைக்கிழங்கு 65 சேனை 45 மரவள்ளி கிழங்கு -- வெ.வ.கிழங்கு 55 கறிவேப்பிலை 60 கொத்தமல்லி 30 புதினா 35 சின்னவெங்காயம் 80,75 பெரியவெங்காயம் பழையது -- பெரிய வெங்காயம் புதியது 45,40 இஞ்சி பழையது -- இஞ்சி புதியது 45 வெள்ளைப்பூண்டு 340,300,280 வாழையிலை ஒரு மடி 25,20 வாழைப்பூ ஒன்றுக்கு 10 வாழைத்தண்டு ஒன்றுக்கு 10 வாழைப்பழம் 60,40,30,25 வாழைக்காய் 25 ஆரஞ்சு 260 பீட்ரூட் 65 நூல்கோல் 40 முள்ளங்கி 22,18 முருங்கைபீன்ஸ் 90,70 பட்டர்பீன்ஸ் 170,150 சோயாபீன்ஸ் -- ரிங்பீன்ஸ் 75 முட்டைகோஸ் 28 கேரட் ஊட்டி 66,50 கேரட் கொடைக்கானல் 36,30 டர்னிப் 40 சவ்சவ் ...