தேனி மாவட்டம் கொடுவிலார்பட்டி அருகே அமைந்துள்ள தீபம் சிலம்பாட்ட பயிற்சி மையத்தின் சார்பாக மாணவ மாணவியருக்கு சிலம்பாட்டம் பயிற்சி அளிக்கப்பட்டு வருகிறது.
நேபாளத்தில் மார்ச் 27முதல் 31வரை நடைபெற்ற, பல்வேறு மாநில மாணவர்கள் கலந்து கொண்ட சிலம்பாட்டப் போட்டியில் தமிழ் நாட்டில், தேனி மாவட்ட தீபம் சிலம்பாட்ட பயிற்சி மையத்தின் சார்பாக சென்று கலந்து கொண்ட 12 மாணவ மாணவிகள் பதக்கம் வென்று தமிழகம் திரும்பியுள்ளனர்.
அவர்களுக்கு அரண்மனை புதூர், கோட்டைப்பட்டி, சத்திரப்பட்டி ஆகிய ஊர் பொதுமக்கள் சிறப்பான வரவேற்பு அளித்தனர்.
கலந்துகொண்ட மாணவர்கள் ஸ்ரீ சக்திவர்மன், தேவஹி, கோகுல்ராமசாமி, அக்ஷய்குமர், தீபக், அதியமான், ராகுல், சுந்தரபாண்டியன், தீபக் ராஜா ஆகிய மாணவ மாணவிகளும் கலந்து கொண்டு 9 தங்கப்பதக்கமும் 3 வெள்ளிப் பதக்கமும் வென்றனர்.
சொந்த ஊர் திரும்பிய மாணவ மாணவியர்க்கு சிறப்பான வரவேற்ப்பு அளிக்கப்பட்டது.
செய்தி, புகைப்படம் & வீடியோ:
விண்- சரவணன், தேனி...




Supper sir
ReplyDelete