கத்தோலிக்க திருச்சபையினர் ஆலயம் கட்ட கூடாது என கொலைவெறி தாக்குதல் நடத்தியவர்களை கைது செய்ய உலக தமிழ் கிறித்தவ சம்மேளனம் தலைமை செய்தி தொடர்பாளர் ஜெபசிங் கோரிக்கை.
கத்தோலிக்க திருச்சபையினர் ஆலயம் கட்ட கூடாது என கொலைவெறி தாக்குதல் நடத்தியவர்களை கைது செய்ய உலக தமிழ் கிறித்தவ சம்மேளனம் தலைமை செய்தி தொடர்பாளர் ஜெபசிங் கோரிக்கை.
தென்காசி மாவட்டம் ஆழ்வார்குறிச்சி அருகே உள்ள பெத்தான் பிள்ளை குடியிருப்பு பகுதியில் உள்ள 3.75 சென்ட் நிலத்தை அற்புதராஜ் குடும்பத்தினர் கத்தோலிக்க திருச்சபைக்கு ஆலயம் கட்ட வழங்க முடிவு செய்திருந்தனர். இதை அறிந்த அருகில் உள்ள செல்லப்பா, சண்முகவேல் சங்கர் கணேஷ் மற்றும் இருவர் இணைந்து நில உரிமையாளர்களான அற்புதராஜ், ராயப்பன் ஆகியோரை நமது ஊரில் கிறித்தவ தேவாலயம் வரக்கூடாது என்று கூறி சரமாரியாக கொலை வெறி தாக்குதல் நடத்தி உள்ளனர். தாக்குதலில் படுகாயம் அடைந்த அற்புதராஜ், ராயப்பன் ஆகியோர் நெல்லை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.
மேலும் ராயப்பன் அளித்த புகாரின் பேரில் செல்லப்பா, சண்முகவேல், சங்கர் கணேஷ் மற்றும் இருவர் என 5 பேர் மீது வழக்கு பதியப்பட்டது. எதிர் தரப்பினர் கொடுத்த பொய் புகாரின் பேரில் அற்புதராஜ், ராயப்பன் மீது வழக்கு பதியப்பட்டு உள்ளது. காவல்துறை உண்மை நிலவரத்தை விசாரித்து கொலைவெறி தாக்குதல் நடத்தியவர்களை விரைந்து கைது செய்ய வேண்டும், அமைதியாக உள்ள தமிழகத்தில் மதக் கலவரத்தை தூண்ட நினைக்கும் சமூக விரோதிகளை இரும்புக் கரம் கொண்டு அடக்க வேண்டும் என தெரிவித்துள்ளார்.
அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெறும் அற்புதராஜ், ராயப்பன் ஆகிய இருவரை உலக தமிழ் கிறித்தவ சம்மேளனம் தலைமை செய்தி தொடர்பாளர் ஜெபசிங், மாவட்ட பொறுப்பாளர் ஹெரால்ட் ஆகியோர் நேரில் சந்தித்து ஆறுதல் கூறினர்.




Comments
Post a Comment