அமராவதி அணை முதல் மூணாறு வரை... என்ன யோக்கியதையில் கேரளாவிற்கு தூக்கிக் கொடுக்கப்பட்டது?! (டிஜிட்டல் ரீ சர்வே எனும் பயங்கரவாதம்) டிஜிட்டல் ரீ சர்வேயால் தமிழர்களுக்கு ஏற்படும் பாதிப்புகள் குறித்து பெரியாறு வைகை பாசன விவசாயிகள் சங்க ஒருங்கிணைப்பாளர் அன்வர் பாலசிங்கம் தொடர்ந்து அறிக்கை வெளியிட்டு வருகிறார் இந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது: 1956 மொழிவழி பிரிவினை எத்தனை மோசடியானது என்பதற்கு, உடுமலைப்பேட்டையில் இருந்து மூணாறு செல்லும் சாலையில் உள்ள அமராவதி அணை முதல், மூணாறு வரை இருக்கும் ஊர்களே சாட்சியாகும். தமிழகத்தில் அன்றைக்கு எத்தனை தாராள மனம் படைத்த ஆட்சியாளர்கள் இருந்திருக்கிறார்கள் என்பதை இதன் மூலம் நாம் புரிந்து கொள்ள முடியும்.ஒரு சின்னஞ்சிறு மாநிலத்தை எத்தனை ஓவியமாக மலையாளிகள் கட்டமைத்திருக்கிறார்கள் என்பதை பார்க்கும் போது, நம்மவர்கள் மீது வெறுப்பு மட்டுமல்ல, வெறியும் ஏற்படுகிறது. அமராவதி அணையில் இருந்து மூணாறு செல்லும் சாலையில் இரண்டு மாநில எல்லைகளை பிரிக்கும் சின்னாறு சோதனை சாவடி முதலில் வரும். சோதனைச் சாவடியின் மேற்கு புறத்தில் சற்று உள்ளடங்கி இருக்கும் மஞ்சம்பட்டி பள்ளதாக்...
உலகம் முழுவதும் உள்ள தமிழ் செய்திகளை தெரிந்து கொள்ள