Skip to main content

பாளை பல் சமய பணிக்குழு சார்பில் கிறிஸ்து பிறப்பு விழா!

பாளை பல் சமய பணிக்குழு சார்பில் கிறிஸ்து பிறப்பு விழா!

50 குடும்பங்களுக்கு நலத்திட்ட உதவிகள்!!


பாளையங்கோட்டை கத்தோலிக்க மறை மாவட்டம் பல் சமய பணிக்குழு சார்பில் கிறிஸ்து பிறப்பு விழா பாளை கிறிஸ்து ராஜா பள்ளி லாரன்ஸ் கலையரங்கத்தில் நடைபெற்றது.

பாளை கத்தோலிக்க திருச்சபை ஆயர் அந்தோணிசாமி, முஸ்லிம் அனாதைகள் இல்லம் தலைவர் எம்.கே.எம்.கபீர், நெல்லை சர்வ சமய கூட்டமைப்பு தலைவர் பி.டி.சிதம்பரம், பிரம்மா குமாரி புவனேஸ்வரி, ஆகியோர் தலைமை தாங்கினர்.

பல் சமய பணிக்குழு செயலாளர் பாதிரியார் மை.பா.ஜேசுராஜ் வரவேற்புரை ஆற்றினார்.

நிகழ்ச்சியில் வேலை வாய்ப்பற்ற பொருளாதாரத்தில் பின்தங்கிய நிலையில் உள்ள 50 குடும்பங்களை தேர்ந்தெடுத்து அவர்கள் சுயமாக தொழில் செய்து வாழ்வாதாரத்தை உயர்த்தும் பொருட்டு 14 குடும்பங்களுக்கு 2 ஆட்டு குட்டிகள் வீதம் 28 ஆடுகள், 28 குடும்பங்களுக்கு தலா 10 நாட்டுக் கோழிகள் வீதம் 280 நாட்டுக் கோழிகள், 2 குடும்பங்களுக்கு மாவு அரவை இயந்திரம், 2 குடும்பங்களுக்கு தையல் இயந்திரம், 3 குடும்பங்களுக்கு இஸ்திரி பெட்டி, ஒரு குடும்பத்திற்கு இட்லி வியாபாரம் செய்ய தள்ளுவண்டி வழங்கப்பட்டது.

விழாவில் ஆயர் அந்தோணிசாமி பேசியதாவது.

டிசம்பர் மாதம் முழுவதும் மாவட்டத்தில் அனைத்து பகுதியிலும் கிறிஸ்து பிறப்பு விழா நடைபெற்று வருவது வழக்கம். நான் தினமும் 2 முதல் 3 கிறிஸ்து பிறப்பு விழா நிகழ்ச்சியில் கலந்து கொண்டு வருகிறேன். 

பல் சமய பணிக்குழு சார்பில் நடத்தப்படும் இந்த கிறிஸ்து பிறப்பு விழா வித்தியாசமான முறையில் ஏற்பாடு செய்து உள்ளது என்னை வியக்க வைக்கிறது. இந்த நிகழ்ச்சியில் கிறிஸ்து பிறப்பு குடில் வைக்கபடவில்லை. கிறிஸ்மஸ் தாத்தா வேடம் போட்டு யாரும் வரவில்லை, கிறிஸ்மஸ் பாடல்கள் பாடபடவில்லை . ஆனால் வழக்கம் போல் கிறிஸ்து பிறப்பு நிகழ்ச்சியில் செய்யப்படும் எந்த ஒரு நிகழ்வும் இங்கு காணப்படவில்லை. கிறிஸ்து பிறக்கும் போதும் மேற்கண்ட நிகழ்வுகள் ஏதுவுமே செய்யப்படவில்லை. ஏனென்றால் கிறிஸ்து அனைவர்க்கும்மானவர் என்று விவிலியத்தில் கூறப்பட்டுள்ளது. அதே போல் கிறிஸ்து எதற்காக இந்த பூவுலகில் அவதரித்தாரோ அதை நிறைவேற்றும் பொருட்டு இந்த விழா ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது மகிழ்ச்சி அளிக்கிறது, 

அனைத்து மதம், சமூகத்தை ஒருங்கிணைத்து சமூகத்தில் பின்தங்கிய நிலையில் உள்ள அனைத்து தரப்பு மக்களை உள்ளடக்கிய 50 குடும்பங்களை தேர்தெடுத்து அவர்களின் வாழ்வாதார முன்னேற்றத்திற்கு தேவைப்படும் ஆடு, நாட்டுக்கோழி, மாவு அரவை இயந்திரம், தையல் மிஷின், தள்ளுவண்டி, இஸ்திரி பெட்டி வழங்கி உள்ளது மிகவும் பாராட்டுக்குரியது,

கிறிஸ்து பிறப்பு விழாவில் இப்படி ஒரு சிறப்பான நலத்திட்டங்களை வழங்கிய பல் சமய பணிக்குழு நிர்வாகிகள் அனைவருக்கும் எனது மனமார்ந்த பாராட்டுக்களை தெரிவித்துக் கொள்கிறேன். இதே போல் கிறிஸ்து பிறப்பு விழா கொண்டாட நாம் அனைவரும் முயலுவோம் .

விழாவில் கலந்து கொண்ட அனைத்து சகோதர/சகோதிரிகளுக்கும் எனது அன்பான கிறிஸ்து பிறப்பு நல்வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன் என பேசினார். 

கூட்டத்தில் முஸ்லிம் அனாதைகள் இல்லம் தலைவர் எம்.கே.எம்.கபீர், சர்வ சமய கூட்டமைப்பு தலைவர் பி.டி.சிதம்பரம், இரட்சணிய சேனை கிறிஸ்டோபர், நெல்லை பெந்தேகோஸ்தே ஐக்கியம் பொறுப்பாளர் போதகர். ஜோயல், நெல்லை மத்திய கூட்டுறவு வங்கி இயக்குநர் ஜெரால்ட், இயேசு சபை கலைமனைகள் அதிபர் பாதிரியார் ஹென்றி ஜெரோம் ஆகியோர் வாழ்த்துரை வழங்கினர்.

கூட்டத்தில் பாதிரியார் போஸ்கோ குணசீலன், பாதிரியார் ஸ்டீபன் ஆரோக்கியசாமி, பிரிட்டோ, லில்லி , செல்வி, இருதய மேரி, கால்நடை மருத்துவர். பாரதி, 41வது வட்ட திமுக செயலாளர் கிங் பாலா உட்பட பாதிரியார்கள், கன்னியாஸ்திரிகள் மற்றும் 200க்கும் மேற்ப்பட்ட பொது மக்கள் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.

விழாவில் விவேகானந்தா மெட்ரிக் பள்ளி, அப்துல் ரஹ்மான் மேல்நிலைப் பள்ளி, எஸ்.ஏ.வி.மகளிர் கல்லூரி ஆகிய கல்வி நிறுவனங்கள் சார்பில் கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றது.

நிகழ்ச்சியை முனைவர் ஜெயமேரி நெறியாளுகை செய்தார்.

நிகழ்ச்சி ஏற்பாடுகளை செ.சா. ஜெபசிங், நல்லாசிரியர் கணபதி சுப்பிரமணியன், வழக்கறிஞர் கந்தசாமி ஆகியோர் சிறப்பாக செய்திருந்தனர்.

முடிவில் முகம்மது ஜமால் ஈஸா நன்றி கூறினார்.








Comments

Popular posts from this blog

தீண்டாமை கொடுமையில் இருந்து தங்களை காக்க வேண்டும் என்று தேனி கோட்டைப்பட்டி கிராம மக்கள் ஆட்சியரிடம் மனு!

தீண்டாமை கொடுமையில் இருந்து தங்களை காக்க வேண்டும் என்று தேனி கோட்டைப்பட்டி கிராம மக்கள் ஆட்சியரிடம் மனு! தேனி, மார்ச்., 07:  தீண்டாமை கொடுமையிலிருந்து மக்களை காப்பாற்றுங்கள், அரசு திட்டங்களை செயல்படுத்தவிடாமல் சாதிய வன்மத்துடன் தடுக்கும் நபர்கள் மீது நடவடிக்கை எடுங்கள் என்ற கோரிக்கையுடன் அரண்மனைபுதூர் ஊராட்சி கிராம கமிட்டி தலைவர் பாலசுந்தரராஜ் மற்றும் கோட்டைப்பட்டி கிராம பொதுமக்கள் ஆட்சியரிடம் மனு அளித்தனர். அந்த மனுவில் கூறியிருப்பதாவது:  இந்தியா நாடு சுதந்திரம் அடைந்து 75ஆண்டுகளுக்கு மேலாகியும், தீண்டாமை கொடுமை தலைவிரித்தாடுகிறது. தேனி மாவட்டம், தேனி வட்டம், அரண்மனை புதூர் ஊராட்சிக்குட்பட்ட கோட்டைப்பட்டி கிராமத்தில் ஜாதிய தீண்டாமை கொடுமை நடைபெறுகிறது. இங்கு வாழும் பட்டியல் பிரிவிலுள்ள தேவேந்திரகுல வேளாளர் சமூக மக்களுக்கு கிடைக்கக்கூடிய அடிப்படைவசதி திட்டங்களை தடுத்து வருகிறார்கள். கோட்டைப்பட்டி கிராமத்தில் வாழும் ராஜகம்பளத்து நாயக்கர் சமுதாயத்தைச்சேர்ந்த தங்கப்பாண்டி, சுந்தரவடிவேல், செல்வம் உட்பட பத்துபேர்கள் கொண்ட கும்பல் சேர்ந்து தேவேந்திரகுல வேளாளர் மக்கள் பொருளாதார ரீதிய...

காரைக்குடி சம்பவம்; அரசு ஊழியர்கள் கொதிப்பு!

காரைக்குடி சம்பவம்; அரசு ஊழியர்கள் கொதிப்பு! சிவகங்கை மாவட்டம், காரைக்குடி இராமசாமி தமிழ்க்கல்லூரியில் முத்துமாரி என்பவர் அலுவலக உதவியாளராகப் பணிபுரிந்து வருகிறார்.  நேற்று அவரை, கல்லூரி வளாகத்திற்கு உள்ளே வைத்து, கல்லூரியில் பணிபுரியும் தற்காலிக காவலர் பழனியப்பன் ஆபாசமாகப் பேசி, கொலைவெறித் தாக்குதல் நடத்தியதாக கூறப்படுகிறது. படுகாயம் அடைந்த அவர் மருத்துவமனையில் சிகிச்சைக்கு சேர்க்கப்பட்டுள்ளார்.  இதுகுறித்து அரசு ஊழியர்கள் சங்கம் சிவகங்கை மாவட்ட மையம் விடுத்துள்ள கண்டன அறிக்கையில்: சிவகங்கை மாவட்டம், காரைக்குடி ராமசாமி தமிழ்க்கல்லூரியில் அலுவலக உதவியாளராகப் பணிபுரியும் முத்துமாரி என்பவரை, கல்லூரி வளாகத்திற்கு உள்ளே வைத்து, ஆபாசமாகப் பேசி, கொலைவெறித் தாக்குதல் நடத்திய கொடுஞ்செயலை தமிழ்நாடு அரசு ஊழியர்கள் சங்கம் சிவகங்கை மாவட்ட மையம் வன்மையாக கண்டிக்கிறது. இக்கொடுஞ்செயலில் ஈடுபட்ட கல்லூரியில் பணிபுரியும் தற்காலிக காவலர் பழனியப்பன் என்பவரையும்,அதற்கு தூண்டுகோலாய் இருந்த கல்லூரியின் பொறுப்பு முதல்வர் நாகநாதனையும் வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின்கீழ் கொலைமுயற்சி, வழக்குப் பதிவுசெய்த...

தேனி உழவர் சந்தையில் 04-01-2025 இன்றைய காய்கறி பழ வகைகளின் விலை விபரம்:

தேனி உழவர் சந்தையில் 04-01-2025 இன்றைய காய்கறி பழ வகைகளின் விலை விபரம்: கத்தரிக்காய் 46,40 தக்காளி 20,15 வெண்டைக்காய் 46,40 கொத்தவரங்காய் 35,30 சுரைக்காய் 20,18,15 புடலங்காய்  26,24 பாகற்காய் 40,32 பீர்க்கங்காய் 40 முருங்கைக்காய்  -- பூசணிக்காய் 20,14,10 பச்சைமிளகாய் உருட்டு 75,70 அவரைக்காய் (பட்டை) -- தேங்காய் கிலோ 60 சம்பா மிளகாய் -- நைஸ் அவரை -- பெல்ட் அவரை 110 திராட்சை 80 மலை உருளைக்கிழங்கு 45 உருளைக்கிழங்கு பெங்களூர் 35 உருளைக்கிழங்கு ஆக்ரா 35 கருணைக்கிழங்கு 65 சேனை 45 மரவள்ளி கிழங்கு -- வெ.வ.கிழங்கு 55 கறிவேப்பிலை 60 கொத்தமல்லி 30 புதினா 35 சின்னவெங்காயம் 80,75 பெரியவெங்காயம் பழையது -- பெரிய வெங்காயம் புதியது 45,40 இஞ்சி பழையது -- இஞ்சி புதியது 45 வெள்ளைப்பூண்டு 340,300,280 வாழையிலை ஒரு மடி 25,20 வாழைப்பூ ஒன்றுக்கு 10 வாழைத்தண்டு ஒன்றுக்கு 10 வாழைப்பழம் 60,40,30,25 வாழைக்காய் 25 ஆரஞ்சு 260 பீட்ரூட் 65 நூல்கோல் 40 முள்ளங்கி 22,18 முருங்கைபீன்ஸ் 90,70 பட்டர்பீன்ஸ் 170,150 சோயாபீன்ஸ் -- ரிங்பீன்ஸ் 75 முட்டைகோஸ் 28 கேரட் ஊட்டி 66,50 கேரட் கொடைக்கானல் 36,30 டர்னிப் 40 சவ்சவ் ...