Skip to main content

பிப்-27 ஞாயிறு தமிழ்நாடு முழுவதும் போலியோ சொட்டு மருந்து முகாம்! தமிழ்நாடு அரசு அறிவிப்பு!!

 


எதிர்வரும் ஞாயிற்றுக் கிழமை (பிப்ரவரி-27) அன்று தமிழ்நாடு முழுவதும் போலியோ சொட்டு மருந்து முகாம் நடைபெறும் என தமிழ்நாடு அரசு அறிவித்துள்ளது. அரசின் செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது:

போலியோ சொட்டு மருந்து முகாம் 27.02.2022 (ஞாயிற்றுக்கிழமை) அன்று தமிழகம் முழுவதும் நடைபெறும்

தமிழ் நாட்டில் உள்ள அரசு ஆரம்ப சுகாதார நிலையங்கள், அரசு மருத்துவமனைகள். அங்கன்வாடி மையங்கள், சத்துணவு மையங்கள், பள்ளிகள் மற்றும் முக்கிய இடங்கள் என மொத்தம் 43051 மையங்களில் நடைபெறும்.

இம்மையங்களில் 47.36 இலட்சம் குழந்தைகளுக்கு போலியோ சொட்டு மருந்து வழங்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டு அனைத்து ஏற்பாடுகளும் விரிவாக செய்யப்பட்டுள்ளன.

யுனிசெஃப், உலக சுகாதார நிறுவனம் மற்றும் பன்னாட்டு ரோட்டரி சங்கங்கள் போலியோ முகாம் பணிகளுக்கு உறுதுணையாக உள்ளன.

முக்கிய அம்சங்கள்

1. சொட்டு மருந்து வழங்கும் மையங்கள் காலை 7.00 மணி முதல் மாலை 5.00 மணி வரை செயல்படும்.

2.  5 வயதிற்குட்பட்ட அனைத்து குழந்தைகளுக்கும் 27.02.2022 (ஞாயிற்றுக்கிழமை) அன்று போலியோ சொட்டு மருந்து வழங்கப்படும். 

3. போலியோ சொட்டு மருந்து முகாம் பாதுகாப்பான முறையில் நடைபெற தகுந்த
கோவிட்-19 நெறிமுறைகள் மற்றும் வழிகாட்டுதலை பின்பற்ற வேண்டும். 

4. சமூக இடைவெளி கடைப்பிடித்தல், முகக்கவசம் அணிதல் மற்றும் கை கழுவதல் கட்டாயமாகும்.

5. தடுப்பு மருந்து கொடுக்கும் முன் சோப்பு கொண்டு கை கழுவது /Sanitizer உபயோகப்படுத்துவது கட்டாயமாகும். 

6. பெரியவர்கள் மற்றும் குழந்தைகளுக்கு காய்ச்சல்/இருமல் அல்லது மற்ற தொற்று கோவிட் தொடர்பாக இருந்தால் மையங்களுக்கு அனுமதிக்கக்கூடாது.

7. மையங்களில் கூட்டமாக இருப்பதை தவிர்க்க வேண்டும், சொட்டு மருந்து கொடுக்கும் குழந்தைகளுடன் ஒரு நபர் மட்டுமே அனுமதிக்கப்பட வேண்டும்.

8. தேசிய தடுப்பூசி அட்டவணைப்படி ஓரிரு நாட்களுக்கு முன் போலியோ சொட்டு மருந்து வழங்கப்பட்டிருந்தாலும் முகாம் நாளில் மீண்டும் சொட்டு மருந்து வழங்கப்பட வேண்டும்.

9. அண்மையில் பிறந்த குழந்தைகளுக்கும் முகாம் அன்று சொட்டு மருந்து கொடுப்பது அவசியமாகும்.

இவ்வாறு அரசாங்க செய்திக் குறிப்பில் கூறப்பட்டுள்ளது.

Comments

Popular posts from this blog

தீண்டாமை கொடுமையில் இருந்து தங்களை காக்க வேண்டும் என்று தேனி கோட்டைப்பட்டி கிராம மக்கள் ஆட்சியரிடம் மனு!

தீண்டாமை கொடுமையில் இருந்து தங்களை காக்க வேண்டும் என்று தேனி கோட்டைப்பட்டி கிராம மக்கள் ஆட்சியரிடம் மனு! தேனி, மார்ச்., 07:  தீண்டாமை கொடுமையிலிருந்து மக்களை காப்பாற்றுங்கள், அரசு திட்டங்களை செயல்படுத்தவிடாமல் சாதிய வன்மத்துடன் தடுக்கும் நபர்கள் மீது நடவடிக்கை எடுங்கள் என்ற கோரிக்கையுடன் அரண்மனைபுதூர் ஊராட்சி கிராம கமிட்டி தலைவர் பாலசுந்தரராஜ் மற்றும் கோட்டைப்பட்டி கிராம பொதுமக்கள் ஆட்சியரிடம் மனு அளித்தனர். அந்த மனுவில் கூறியிருப்பதாவது:  இந்தியா நாடு சுதந்திரம் அடைந்து 75ஆண்டுகளுக்கு மேலாகியும், தீண்டாமை கொடுமை தலைவிரித்தாடுகிறது. தேனி மாவட்டம், தேனி வட்டம், அரண்மனை புதூர் ஊராட்சிக்குட்பட்ட கோட்டைப்பட்டி கிராமத்தில் ஜாதிய தீண்டாமை கொடுமை நடைபெறுகிறது. இங்கு வாழும் பட்டியல் பிரிவிலுள்ள தேவேந்திரகுல வேளாளர் சமூக மக்களுக்கு கிடைக்கக்கூடிய அடிப்படைவசதி திட்டங்களை தடுத்து வருகிறார்கள். கோட்டைப்பட்டி கிராமத்தில் வாழும் ராஜகம்பளத்து நாயக்கர் சமுதாயத்தைச்சேர்ந்த தங்கப்பாண்டி, சுந்தரவடிவேல், செல்வம் உட்பட பத்துபேர்கள் கொண்ட கும்பல் சேர்ந்து தேவேந்திரகுல வேளாளர் மக்கள் பொருளாதார ரீதிய...

காரைக்குடி சம்பவம்; அரசு ஊழியர்கள் கொதிப்பு!

காரைக்குடி சம்பவம்; அரசு ஊழியர்கள் கொதிப்பு! சிவகங்கை மாவட்டம், காரைக்குடி இராமசாமி தமிழ்க்கல்லூரியில் முத்துமாரி என்பவர் அலுவலக உதவியாளராகப் பணிபுரிந்து வருகிறார்.  நேற்று அவரை, கல்லூரி வளாகத்திற்கு உள்ளே வைத்து, கல்லூரியில் பணிபுரியும் தற்காலிக காவலர் பழனியப்பன் ஆபாசமாகப் பேசி, கொலைவெறித் தாக்குதல் நடத்தியதாக கூறப்படுகிறது. படுகாயம் அடைந்த அவர் மருத்துவமனையில் சிகிச்சைக்கு சேர்க்கப்பட்டுள்ளார்.  இதுகுறித்து அரசு ஊழியர்கள் சங்கம் சிவகங்கை மாவட்ட மையம் விடுத்துள்ள கண்டன அறிக்கையில்: சிவகங்கை மாவட்டம், காரைக்குடி ராமசாமி தமிழ்க்கல்லூரியில் அலுவலக உதவியாளராகப் பணிபுரியும் முத்துமாரி என்பவரை, கல்லூரி வளாகத்திற்கு உள்ளே வைத்து, ஆபாசமாகப் பேசி, கொலைவெறித் தாக்குதல் நடத்திய கொடுஞ்செயலை தமிழ்நாடு அரசு ஊழியர்கள் சங்கம் சிவகங்கை மாவட்ட மையம் வன்மையாக கண்டிக்கிறது. இக்கொடுஞ்செயலில் ஈடுபட்ட கல்லூரியில் பணிபுரியும் தற்காலிக காவலர் பழனியப்பன் என்பவரையும்,அதற்கு தூண்டுகோலாய் இருந்த கல்லூரியின் பொறுப்பு முதல்வர் நாகநாதனையும் வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின்கீழ் கொலைமுயற்சி, வழக்குப் பதிவுசெய்த...

தனித்தன்மையை இழந்து புள்ளி விபரம் கோரும் துறையாக மாறி வரும் கருவூலத்துறை!

தனித்தன்மையை இழந்து புள்ளி விபரம் கோரும் துறையாக மாறி வரும் கருவூலத்துறை!  தமிழ்நாடு கருவூல கணக்குத்துறை அலுவலர் சங்கம் வேதனை!! சென்னை: தமிழ்நாடு கருவூல கணக்குத்துறை அலுவலர் சங்க மாநிலத்தலைவர் ஜெ.மூர்த்தி மற்றும் பொதுச் செயலாளர் வெ.லெனின் ஆகியோர் கூட்டாக வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:               கருவூலத்துறையில் தற்போது கிட்டத்தட்ட 1600 க்கும் மேற்பட்ட பணியிடங்கள் காலியாக இருக்கும் சூழ்நிலையில் குறிப்பாக இந்த காலிப்பணியிடங்கள் மாவட்ட மற்றும் சார்நிலைக்கருவூலங்களில் அதிகமாக இருக்கும் நிலையில் தொடர்ச்சியாக தலைமை அலுவலகத்தின் வெவ்வேறு பிரிவுகளில் இருந்து பல்வேறு வகையான புள்ளி விபரங்கள் கோரப்படுவதோடு IFHRMSல் தரவுகளை மீண்டும் மீண்டும் பதிவேற்றம் செய்யவும் உயர் அலுவலர்களால் நெருக்கடி தரப்படுகிறது. கோரப்படுகின்ற புள்ளி விவரங்கள் அனைத்தும் 100% பணம் பெற்று வழங்கும் அலுவலர்களிடம் இருந்து பெறவேண்டிய தகவல்களாகும். ஒரு விபரம் முழுமை பெறுவதற்குள் அடுத்தடுத்த புள்ளி விபரங்கள் கோரப்படுவதால் பணம் பெற்று வழங்கும் அலுவலர்களுக்கும் கருவூல ஊழியர்கள...