வேட்பாளர்கள் ஊடக சான்றளிப்பு மற்றும் கண்காணிப்பு குழுவிடம் முன் அனுமதி பெற்று விளம்பரம் வெளியிட வேண்டும்.
வேட்பாளர்கள் ஊடக சான்றளிப்பு மற்றும் கண்காணிப்பு குழுவிடம் முன் அனுமதி பெற்று விளம்பரம் வெளியிட வேண்டும்.
நாமக்கல் மாவட்டம் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலுக்காக ஊடகங்களில் வெளியிடப்படும் விளம்பரங்களுக்கு அனுமதி தொடர்பான தகவலை மாவட்ட ஆட்சித் தலைவர் ஸ்ரேயா பி. சிங் அறிவித்துள்ளார். அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:
நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலை முன்னிட்டு, அரசியல் கட்சியினர், வேட்பாளர்களின் விளம்பரங்களுக்கு அனுமதி வழங்கவும் நாளிதழ்கள், தொலைக்காட்சிகளில்வெளியிடப்படும் தேர்தல் குறித்த செய்திகளை கண்காணிக்கவும், மாவட்ட தேர்தல் அலுவலர் மற்றும் மாவட்ட ஆட்சித்தலைவர் அலுவலகத்தில் ஊடகச்சான்று மற்றும் கண்காணிப்பு குழு (Media Certification and Monitoring Committee) அமைக்கப்பட்டு செயல்பட்டு வருகிறது.
ஊடகச்சான்று மற்றும் கண்காணிப்பு குழுவினர் மூலம் வழங்கப்பட்ட சான்று எண்ணுடன் கூடிய தேர்தல் விளம்பரங்களை மட்டுமே ஊடகங்கள் வெளியிட வேண்டும். இக்குழுவின் அனுமதி இல்லாத தேர்தல் விளம்பரங்களை நாளிதழ்கள், தொலைக்காட்சி நிறுவனங்கள் எக்காரணம் கொண்டும் வெளியிடவோ, ஒளிபரப்பவோ கூடாது. இக்குழுவிடம் அனுமதி பெற அரசியல் கட்சியினர், போட்டியிடும் வேட்பாளர்கள் 2 நாட்களுக்கு முன்பாக விண்ணப்பிக்க வேண்டும். தேர்தல் குறித்த விளம்பரங்களை வெளியிட அனுமதிகோரி நாளிதழ்கள், தொலைக்காட்சியினர் நேரடியாக விண்ணப்பிக்கக் கூடாது.
தனிப்பட்ட பிற நபர்கள், கட்சிகள், பிற வேட்பாளர்களின் வாழ்க்கையை விமர்சிக்கும் வகையிலோ விளம்பரங்கள் இருக்கக் தனிப்பட்ட கூடாது. விளம்பரம் தயாரிக்க செலவிடப்பட்ட கட்டணத்துடன், அதன் அளவு உள்ளிட்ட செலவினப் பட்டியலுடன் விண்ணப்பிக்க வேண்டும். அரசு நிர்ணயித்தபடி, விளம்பரத்துக்கான கட்டணம் கணக்கிடப்படும். அனுமதி கோரும் விண்ணப்பத்துடன் விளம்பர வடிவமைப்பு இணைக்க வேண்டும்.
விண்ணப்பிக்கும் வேட்பாளரின் பெயர், மற்றும் முகவரி, விளம்பரம் தயாரிப்பதற்கான செலவு, விளம்பரப்படுத்த ஆகும் செலவு விவரம், விளம்பரத்தில் உள்ள வாசக விவரம், விளம்பரத்தின் இரண்டு பிரதிகளுடன் வழங்கவேண்டும். அதன் அடிப்படையில் ஊடக சான்றளிப்பு மற்றும் கண்காணிப்பு குழுவினர் விளம்பரத்தை பார்வையிட்டு அனுமதி வழங்கப்படும். இவ்வாறு மாவட்ட ஆட்சித்தலைவர் அறிக்கையில் தெரிவித்துள்ளார்.
Comments
Post a Comment