எல்லையை பார்வையிட சென்ற போது குண்டுவீச்சு தாக்குதல் - தப்பியோடிய உள்துறை மந்திரி: பரபரப்பு வீடியோ
போர் பதற்றம் அதிகரித்து வரும் கிளர்ச்சியாளர்கள் கட்டுப்பாட்டில் உள்ள பகுதிக்கு மிக அருகே உள்ள எல்லைப்பகுதியை உக்ரைன் உள்துறை மந்திரி டெனிஸ் மொனஸ்டிஸ்கை, ராணுவத்தின் மூத்த அதிகாரிகள் மற்றும் பத்திரிக்கையாளர்களுடன் நேற்று நேரில் சென்று பார்வையிட்டார்.
அப்போது, கிளர்ச்சியாளர்கள் தங்கள் கட்டுப்பாட்டில் உள்ள பகுதியில் இருந்து உள்துறை மந்திரி டெனிஸ், உக்ரைன் ராணுவத்தினர், பத்திரிக்கையாளர்களை குறிவைத்து குண்டு வீச்சு தாக்குதல் நடத்தினர்.
இந்த தாக்குதலால் அதிர்ச்சியடைந்த உள்துறை மந்திரி, பத்திரிக்கையாளர்கள், ராணுவத்தினர் தங்கள் உயிரை காப்பாற்றிக்கொள்ள எல்லையில் இருந்து சிதறியடித்து ஒடினர். கிளர்ச்சியாளர்கள் தொடர்ந்து குண்டுகளை வீசியும், துப்பாக்கிச்சூடு நடத்தியும் உக்ரைன் மந்திரி, ராணுவத்தினரை விரட்டியடித்தனர்.
கிளர்ச்சியாளர்கள் தாக்குதல் நடத்துவதையும், உள்துறை மந்திரி, ராணுவத்தினர் சிதறியடித்து ஓடுவதையும் பத்திரிக்கையாளர்கள் வீடியோவாக பதிவு செய்துள்ளனர். இவர்கள் தங்கள் உயிரை காப்பாற்றிக்கொள்ள ஓடும்போது சுமார் 300 மீட்டர் இடைவெளியில் ஒரு குண்டு விழுந்தது.
Comments
Post a Comment