உக்ரைனில் கல்வி மற்றும் வேலைக்காகச் சென்ற பிற நாட்டினரும் சிக்கியுள்ளனர். அவர்களை மீட்க அந்தந்த நாடுகள் நடவடிக்கை எடுத்து வருகின்றன. மத்திய அரசு சார்பிலும் தில்லியில் கட்டுப்பாட்டு அறை அமைக்கப்பட்டு உக்ரைனில் உள்ள இந்தியர்களுக்கு உதவி எண்களும் அறிவிக்கப்பட்டுள்ளன.
உக்ரைனில் சிக்கியுள்ள தமிழக மாணவர்கள், பணியாளர்களின் பயணச் செலவை தமிழக அரசே ஏற்கும் என முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவித்து, அவர்கள் தொடர்புகொள்ள 044-28515288, 9600023645, 994025644 ஆகிய எண்கள் வழங்கப்பட்டுள்ளன.
மேலும் www.nrtamil.tn.gov.in என்ற இணையதளம் மூலம் உதவிகள் கோரலாம் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சென்னை எழிலகத்தில் உள்ள கட்டுப்பாட்டு மையத்தில் ஆய்வு செய்த முதல்வர் மு.க.ஸ்டாலின், உக்ரைனில் சிக்கியுள்ள தமிழக மாணவர்களுடன் உரையாடினார்.
உக்ரைனில் உள்ள தமிழக மாணவர்களுடன் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் காணொளி காட்சி மூலம் உரையாடிய வீடியோ காட்சிகளை இங்கு காணலாம்.
இந்நிகழ்வின்போது, உயர் கல்வித் துறை அமைச்சர் க. பொன்முடி, மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன், பொதுத்துறைச் செயலாளர் டி. ஜகந்நாதன், அயலகத் தமிழர் நலன் மற்றும் மறுவாழ்வு ஆணையர் ஜெசிந்தா லாசரஸ், மற்றும் அரசு உயர் அலுவலர்கள் உடனிருந்தனர்.
Comments
Post a Comment