ஐ.டி.ஐ சர்டிபிகேட்டில் திருத்தம் இருந்தால் சரிசெய்து கொள்ளலாம்.
தேனி கலெக்டர் அறிவிப்பு.
தேனி, பிப்., 17:
தொழிற்பயிற்சி சான்றிதழ்களில் உள்ள திருத்தங்களை திருத்த வாய்ப்பு கொடுக்கப் பட்டுள்ளது குறித்து தேனி மாவட்ட கலெக்டர் அறிக்கை வெளியிட்டுள்ளார். அதில் கூறியிருப்பதாவது:
இயக்குநர், வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சித்துறை அவர்களின் குறிப்பாணையில் 2014. ஆண்டு வரையில் பயிற்சியாளர்களுக்கு வழங்கப்பட்டுள்ள தேசிய தொழிற்பிரிவின் சான்றிதழ்களில் உள்ள திருத்தங்களை அதாவது பயிற்சியாளரின் பெயர். புகைப்பட மாற்றம் மற்றும் பயிற்சியாளரின் தாய், தந்தை பெயர் திருத்தங்கள். பயிற்சி பெற்ற தொழிற் பெயரில் உள்ள திருத்தம் ஆகியவற்றை சரி செய்துகொள்ள 02.03.2022 தேதி வரையில் grievance portalல் விண்ணப்பிக்க கால் அவகாசம் அளிக்கப்பட்டுள்ளது. நேரடியாக விண்ணப்பிக்க இதுவே கடைசி வாய்ப்பாகும்
இதனை தொடர்ந்து வேறு ஏதும் வாய்ப்பு வழங்கப்படமாட்டது எனவே தேசிய தொழிற் சான்றிதழில் திருத்தம் கோரும் முன்னாள் அசல் பயிற்சியாளர்கள் அசல் கல்வி சான்றிதழ்கள் (பத்தாம் வகுப்பு / பண்ணிரெண்டாம் வகுப்பு மதிப்பெண் சான்றிதழ்) தொழிற்பயிற்சி நிலையத்திலிருந்து பெற்ற மாற்று சான்றிதழ் (TC), ஆதார்கார்டு, அண்மையில் எடுத்த புகைப்படம் மற்றும் (Affidavit - புகைப்படம் திருத்தம் கோரும் பயிற்சியாளர்கள் மட்டும்) ஆகியவற்றுடன் 02.03.2022 வரை இந்நிலையத்திற்கு நேரில் வந்து விண்ணப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.
மேலும் தொடர்புக்கு முதல்வர், அரசினர் தொழிற்பயிற்சி நிலையம். தேனி தொலைபேசி எண் 9499055765, தொடர்பு கொண்டு பயனடையுமாறு தேனி மாவட்ட ஆட்சித்தலைவர் க.வீ.முரளீதரன் தொவித்துள்ளார்.
Comments
Post a Comment