TNPSC குரூப் 4 தேர்வுக்கு மார்ச் 30 முதல் ஏப்ரல் 28-ம் தேதி வரை 10ஆம் வகுப்பு படித்தவர்கள் விண்ணப்பிக்கலாம்..
மார்ச் 30 முதல் ஏப்ரல் 28-ம் தேதி வரை TNPSC குரூப் 4 தேர்வுக்கு விண்ணப்பிக்கலாம்..
7,301 இடங்களை நிரப்ப ஜூலை 24-ல் தேர்வு நடைபெறும்.
TNPSC குரூப் 4 தேர்வு அதிகாரப்பூர்வ அறிவிப்பு.
காலியிடங்கள்: 7382
கல்வி தகுதி: 10 ஆம் வகுப்பு
விண்ணப்பிக்க கடைசி நாள்: 28/04/2022
தேர்வு தேதி: 24 ஜூலை 2022
இதுகுறித்து டிஎன்பிஎஸ்சி தலைவர் பாலச்சந்திரன் வெளியிட்டுள்ள அறிவிப்பில் கூறியிருப்பதாவது:
காலை 9 மணி முதல் 12.30 மணி வரை டி.என்.பி.எஸ்.சி குரூப் 4 தேர்வுகள் நடைபெறும்.
குரூப் 4 தேர்வில் 300 மதிப்பெண்களுக்கு மொத்தம் 200 கேள்விகள் கேட்கப்படும்.
7,352 பணியிடங்களுக்கு நடைபெறும் தேர்வில் 81 இடங்கள் விளையாட்டு கோட்டா மூலம் நிரப்பப்படும். VAO பணியிடம் இதில் 274 ஆகும்.
ஜூலையில் நடைபெறும் தேர்வுக்கான முடிவுகளை அக்டோபர் மாதம் வெளியிட டிஎன்பிஎஸ்சி திட்டம்.
தமிழ் பகுதியில் 150 மதிப்பெண்களுக்கு 40%(60 மதிப்பெண்) பெற்றால் மட்டுமே, அந்த தாள் திருத்தப்படும். மொத்தமாக 90 மதிப்பெண்கள் பெற்றால்தான் அந்த தேர்வர் தரவரிசைக்கு தகுதி பெறுவார்.
TNPSC தேர்வுகளில் முறைகேடு நடப்பதற்கு வாய்ப்பில்லை.
முறைகேடைத் தடுக்க அனைத்து நடவடிக்கைகளையும் எடுத்துள்ளோம்.
இந்தமுறை குரூப் 4 தேர்வுக்கு 25 லட்சத்துக்கும் மேற்பட்டவர்கள் விண்ணப்பிக்கலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது இவ்வாறு கூறியுள்ளார்.
வி.ஏ.ஒ, டைபிஸ்ட், ஸ்டேனோ டைபிஸ்ட், இளநிலை உதவியாளர், பில் கலெக்டர், நில அளவையாளர் ஆகிய பணியிடங்கள் குரூப் 4 தேர்வு மூலம் நிரப்பப்படுகின்றன.
ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்கும் முறைகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளது




Comments
Post a Comment