தேனியில் 75-வது ”சுதந்திர திருநாள் - அமுதப் பெருவிழா” பல்துறை பணி விளக்க கண்காட்சி! 7 நாட்கள் நடைபெறும்.
75-வது ”சுதந்திர திருநாள் - அமுதப் பெருவிழா” பல்துறை பணி விளக்க கண்காட்சியினை மாவட்ட ஆட்சித்தலைவர் க.வீ.முரளீதரன் துவக்கி வைத்து பார்வையிட்டார்.
தேனி மாவட்டம், பழனிசெட்டிபட்டி பேரூராட்சியில், செய்தி மக்கள் தொடர்புத்துறையின் சார்பில் அமைக்கப்பட்டிருந்த, 75-வது ”சுதந்திர திருநாள் - அமுதப் பெருவிழா” பல்துறை பணி விளக்க கண்காட்சியினை இன்று (27.03.2022) மாவட்ட ஆட்சித்தலைவர் க.வீ.முரளீதரன், சட்டமன்ற உறுப்பினர்கள் என்.இராமகிருஷ்ணன் (கம்பம்), ஆ.மகாராஜன் (ஆண்டிபட்டி), கே.எஸ்.சரவணக்குமார் (பெரியகுளம்), ஆகியோர் முன்னிலையில் துவக்கி வைத்து, பள்ளி மாணவ, மாணவியர்களின் கலைநிகழ்ச்சியினை பார்வையிட்டார்.
மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் உத்தரவின்படி, 75-வது சுதந்திரவிழாவினை முன்னிட்டு, சுதந்திரத்திருநாள் - அமுதப்பெருவிழா தமிழகம் முழுவதும் அனைத்து அரசுத்துறைகளின் சார்பில் பல்வேறு நிகழ்ச்சிகளின் வாயிலாக கொண்டாடப்பட்டு வருகிறது. அதனடிப்படையில், செய்திமக்கள் தொடர்புத்துறையின் சார்பில் 75-வது சுதந்திரவிழாவினை முன்னிட்டு, சுதந்திரத்திருநாள் - அமுதப்பெருவிழாவினை முன்னிட்டு, பல்துறை பணி விளக்க கண்காட்சி நடத்தப்பட்டு வருகிறது.
இக்கண்காட்சியில் இந்திய விடுதலைக்காக பாடுபட்ட தேசத் தலைவர்களை போற்றும் வகையில், “விடுதலைப் போரில் தமிழகம்” என்ற தலைப்பில் சுதந்திரப் போராட்ட வீரர்கள் குறித்த அறிந்த / அறியப்படாத வீரர்கள் புகைப்படங்கள் மற்றும் தேனி மாவட்டத்தைச் சார்ந்த சுதந்திரப் போராட்ட வீரர்கள் குறித்த அறிந்த / அறியப்படாத வீரர்கள் புகைப்படங்கள் இடம் பெற்றுள்ளது.
மேலும், இக்கண்காட்சியில் தமிழக அரசின் திட்டங்கள், சாதனைகள் குறித்து வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத்துறை, நகராட்சி, பேரூராட்சி, ஊரக வளர்ச்சித்துறை, காவல் துறை, மக்கள் நல்வாழ்வு மற்றும் குடும்ப நலத்துறை, சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை, வேளாண்மைத்துறை உள்ளிட்ட அனைத்து அரசுத்துறைகளின் சார்பில் அரங்குகள் அமைக்கப்பட்டு, பொதுமக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்துகின்ற வகையில், காட்சிபடுத்தப்பட்டுள்ளது.
இன்றைய தினம் (27.03.2022) துவக்கி வைக்கப்பட்டுள்ள இக்கண்காட்சி 02.04.2022 மாலை 5.00 மணி முதல் இரவு 9.00 மணி வரை ஒரு வார காலம் நடைபெறவுள்ளது. மேலும், 29.03.2022 அன்று காலை 7.00 மணயளவில் விழாத்திடல் வளாகத்திலிருந்து, மாவட்ட விளையாட்டு மைதானம் வரையிலான மாரத்தான் ஓட்டம் நடைபெறவுள்ளது.
மேலும், பள்ளி மற்றும் கல்லூரி மாணவ, மாணவியர்களிடையே சுதந்திர போராட்ட வரலாறு குறித்து மாவட்ட அளவிலான கட்டுரை மற்றும் ஓவியப் போட்டிகள் நடத்தி 02.04.2022 அன்று நிறைவு விழாவில் பல்வேறு போட்டிகளில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுகள் மற்றும் பாராட்டுச்சான்றிதழ்கள் வழங்கப்பட உள்ளது. ஒரு வார காலம் நடைபெறவுள்ள இக்கண்காட்சியில், பல்வேறு கலை நிகழ்ச்சிகள் நடைபெறவுள்ளது.
எனவே, இந்திய விடுதலைக்காக பாடுபட்ட தேசத் தலைவர்களை போற்றும் வகையில், ஒரு வார காலம் நடைபெறவுள்ள 75-வது ”சுதந்திர திருநாள் அமுதப் பெருவிழா” பல்துறை பணி விளக்க கண்காட்சியில் இடம் பெற்றுள்ள சுதந்திரப் போராட்ட வீரர்கள் குறித்த அறிந்த / அறியப்படாத வீரர்கள் புகைப்படங்கள் மற்றும் தமிழக அரசின் திட்டங்கள், சாதனைகள் குறித்து அரங்குகளை பள்ளி மற்றும் கல்லூரி மாணவ, மாணவியர்கள், பொதுமக்கள் பார்வையிட்டு, பயனடைய வேண்டும்.
இக்கண்காட்சியில், முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் தங்க தமிழ்செல்வன், மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பிரவிண் உமேஷ் டோங்கரே, இ.கா.ப., மாவட்ட வன அலுவலர் ச.வித்யா, இ.வ.ப., மாவட்ட வருவாய் அலுவலர் தி.சுப்பிரமணியன், மாவட்ட ஊரக வளர்ச்சி முகமையின் திட்ட இயக்குநர் ஆர்.தண்டபாணி, செய்தி மக்கள் தொடர்பு அலுவலர் இரா.சண்முகசுந்தரம், தேனி ஊராட்சி ஒன்றியக்குழுத்தலைவர் எஸ்.சக்கரவர்த்தி, பழனிசெட்டிபட்டி பேரூராட்சித்தலைவர் மிதுன்சக்கரவர்த்தி, உதவி மக்கள் தொடர்பு அலுவலர் (செய்தி) நா.விஜயகுமார், அனைத்துத்துறை அரசு அலுவலர்கள், பள்ளி, கல்லூரி மாணவ, மாணவியர்கள், பொதுமக்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.
தேனி மாவட்ட செய்தி மக்கள் தொடர்பு துறை அலுவலர் இரா.சண்முகசுந்தரம் அவர்களும், உதவி மக்கள் தொடர்பு அலுவலர் நா.விஜயகுமார் அவர்களும், செய்தி மக்கள் தொடர்புத்துறை அலுவலக பணியாளர்கள் அனைவரும் சேர்ந்து மிக நல்ல முறையில் கண்காட்சிக்கான ஏற்பாடுகளை செய்திருந்தனர்.
தேனி மாவட்ட கல்வித் துறையினர் பள்ளி மாணவிகளை நேர்த்தியாக தயார்படுத்தி, கலை நிகழ்ச்சிகளை கண்கொள்ளாக் காட்சியாக்கினர்.

Comments
Post a Comment