தேனி ஐடிஐ ல் டூவீலர் மெக்கானிக், எலெக்ட்ரிசியன் படிப்புகளுக்கு விண்ணப்பிக்கலாம்! கலெக்டர் அறிவிப்பு!
இயக்குநர், வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சித்துறையின் கீழ் இயங்கும் தேனி அரசினர் தொழிற்பயிற்சி நிலையத்தில் Pradhan Mantri kaushal vikas yojana 3.0 (Skill
Hubs) திட்டத்தின் கீழ் இருசக்கர வாகனம் பழுது பார்த்தல் (Two wheeler Service
Technician) மற்றும் எலக்ட்ரிசீயன் டொமஸ்டிக் சொலுசன்ஸ் (Electrician Domestic
Solutions) ஆகிய தொழிற்பிரிவிற்கு 31.03.2022க்குள் விண்ணப்பிக்கலாம்.
மேற்குறிப்பிட்ட தொழிற்பிரிவிற்கு விண்ணப்பிக்க கல்வித்தகுதி 8 மற்றும் 10-ம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். வயது வரம்பு 15 வயது முதல் 45 வயதுக்குள் இருக்க வேண்டும். பயிற்சி காலம் 4 மாதங்கள். விண்ணப்பிக்க விருப்பம் உள்ள நபர்கள் அசல் கல்வி சான்றிதழ்களுடன்; (எட்டாம் வகுப்பு / பத்தாம் வகுப்பு மதிப்பெண் சான்றிதழ்) மாற்றுச் சான்றிதழ்(TC), சாதி சான்றிதழ், ஆதார்கார்டு, அண்மையில் எடுத்த புகைப்படம்-2 மற்றும் வங்கிக் கணக்கு எண் விவரம்) – ஆகியவற்றுடன் 31.03.2022-க்குள் இந்நிலையத்திற்கு நேரில் வந்து விண்ணப்பித்திட வேண்டும். மேலும் தொடர்புக்கு முதல்வர், அரசினர் தொழிற்பயிற்சி நிலையம் தேனி அவர்களை 94990 55765 என்ற கைபேசி எண்ணில் தொடர்பு கொண்டு பயனடையுமாறு தேனி மாவட்ட ஆட்சித்தலைவர் க.வீ.முரளீதரன் தெரிவித்துள்ளார்.



Comments
Post a Comment