Skip to main content

தமிழ்நாட்டில் மீண்டும் கொரோனா?!!?

தமிழ்நாட்டில் மீண்டும் கொரோனா - மருத்துவர்கள் எழுப்பும் 5 கேள்விகள்


தமிழ்நாட்டில் மீண்டும் கொரோனா தொற்று பரவும் நிலையில் பல்வேறு அறிவுறுத்தல்களை மாநில மக்கள் நல்வாழ்வுத்துறை வழங்கியுள்ளது. `கேரளாவில் 21 வயதுள்ள நபர் ஒருவருக்கு ஒமிக்ரான் கலவையின் (omicron XE) பாதிப்பு உறுதிபடுத்தப்பட்டுள்ளது. தமிழ்நாட்டில் புதுவகையான உருமாற்றம் பெற்ற கொரோனா வைரஸ் கண்டறியப்படவில்லை' என்கின்றனர், மருத்துவ வல்லுநர்கள். என்ன நடக்கிறது?

சென்னை ஐஐடி வளாகத்தில் அண்மையில் 700 பேருக்கு கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. இதில் 12 பேருக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டதாகக் கூறப்பட்டது. வெள்ளிக்கிழமை காலை (ஏப்ரல் 22) வெளியான தகவலின்படி, 29 மாணவர்கள், ஒரு பணியாளர் என ஐ.ஐ.டியை சேர்ந்த 30 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. அவர்கள் தொடர் மருத்துவ சிகிச்சையில் உள்ளதாகவும் உடல்நிலை சீராக இருப்பதாகவும் சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் தெரிவித்தார்.

மேலும், தமிழ்நாட்டிலும் கடந்த இரு நாள்களாக கொரோனா தொற்றின் பாதிப்பு என்பது 30 மற்றும் 39 ஆக உள்ளது. இதில் இறப்பு விகிதம் எதுவும் பதிவு செய்யப்படவில்லை.

சென்னை ஐஐடியில் கொரோனா பாதிப்பு அதிகரித்துள்ளது தொடர்பாக செய்தியாளர்களிடம் பேசிய சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன், 'ஐஐடியில் கொரோனா தொற்று பாதித்தவர்களின் உடல்நிலையில் எந்தவித பாதிப்புகளும் இல்லை. ஒருவருக்கு மட்டுமே காய்ச்சல் உள்ளது. ஆக்சிஜன் அளவும் சீராக உள்ளது. மருத்துவமனையில் கொண்டு போய் சேர்க்கும் அளவுக்கு யாரும் இல்லை. தொற்று பரவுவதால் அனைவரும் முக கவசம் அணிய வேண்டும், பொது இடங்கள், வணிக வளாகங்கள் ஆகியவற்றில் உடல் வெப்ப நிலை பரிசோதனையை மேற்கொள்ள அறிவுறுத்தப்பட்டுள்ளது. மேலும் முக கவசம் கட்டாயம் என்ற விதி தளர்த்தப்படவில்லை. தற்போது முகக்கவசம் அணியாவிட்டால் அபராதம் விதிக்கவும் முடிவு செய்யப்பட்டுள்ளது,' என்றார்.

தொடர்ந்து மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்ரமணியன் அளித்த பேட்டியில், சென்னை ஐஐடியில் வட மாநிலங்களில் இருந்து வந்தவர்கள் மூலம் கொரோனா பரவியதாகக் குறிப்பிட்டார். மேலும், கட்டடப் பணிகளுக்காக வெளிமாநிலங்களில் இருந்து வருகிறவர்கள், கொரோனா பரிசோதனையை மேற்கொள்ள வேண்டும் எனவும் பணியாள்களை அழைத்து வரும் இடைத்தரர்கள் அரசு மருத்துவமனைகளில் பணியாள்களுக்கு கொரோனா பரிசோதனையை செய்ய வேண்டும் எனவும் அவர் தெரிவித்தார்.

தமிழ்நாட்டில் முதல் மற்றும் இரண்டாம் தவணை தடுப்பூசி செலுத்தாதவர்களின் எண்ணிக்கை என்பது 2 கோடியை நெருங்கிவிட்டது. இவர்கள் அனைவரும் தடுப்பூசி செலுத்திக் கொள்ளும் வகையில் மே 8 ஆம் தேதி 1 லட்சம் இடங்களில் சிறப்பு மெகா தடுப்பூசி முகாம் நடத்தப்பட உள்ளது,' என்கிறார் மா. சுப்பிரமணியன்

அமைச்சர் குறிப்பிட்டதைப் போல, டெல்லி, மகாராஷ்டிரா, உத்தர பிரதேசம் என இந்தியாவின் பல்வேறு மாநிலங்களில் கொரோனா தொற்றால் பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கை அதிகமாக உள்ளது. இதன் நீட்சியாக தமிழ்நாட்டிலும் வரக் கூடிய நாள்களில் தொற்றின் வேகம் அதிகரிக்கலாம் என்கின்றனர் சுகாதாரத்துறை வல்லுநர்கள்

இந்தியாவில் அதிக அளவிலும் தமிழ்நாட்டில் குறைந்த அளவிலும் கொரோனா பாதிப்பு அதிகரித்து வருகிறது. அதேநேரம், தமிழ்நாட்டை ஒட்டியுள்ள கேரளாவில் 21 வயது நபருக்கு ஒமிக்ரான் கலவையின் பாதிப்பு (Omicron XE) உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. டெல்லியில் கடந்த இரண்டு நாள்களுக்கு முன் கொரோனா பாதிப்பு என்பது ஆயிரத்தைத் தாண்டிவிட்டது. கடந்த 21 ஆம் தேதி 965 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். அவ்வாறு பாதிக்கப்பட்ட சிலரில் மூலக்கூறுகளை ஆய்வு செய்ததில் உருமாற்றம் அடைந்த கொரோனா (BA.2.12 (52 சதவீதம்), BA.2.10 (11 சதவீதம்) இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. இது தவிர BA.2.12.1 டெல்லியில் இருப்பது உறுதிபடுத்தப்பட்டுள்ளது. இவையெல்லாம் புது வகையான உருமாற்றம் பெற்ற கொரோனா வகைகள்'' என்கிறார், சூழலியலுக்கான மருத்துவர்கள் சங்கத்தைச் சேர்ந்த மருத்துவர் வீ.புகழேந்தி.

தொடர்ந்து பேசியவர், ''ஒமிக்ரானில் தற்போது ஒன்பது வகைகள் கண்டறியப்பட்டுள்ளன. மேற்கூறிய புது வகை ஒமிக்ரான், ஒமிக்ரான் 2ஐ விட 23 முதல் 27 சதவீதம் அளவுக்கு அதிகம் பரவும் தன்மை கொண்டது என்பது ஆரம்ப கட்ட ஆய்வில் தெரிய வந்துள்ளது. எனவே, விரைவாகப் பரவும் உருமாற்றம் அடைந்த கொரோனா வைரஸ் இந்தியாவில் உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. அதேநேரம், தமிழ்நாட்டில் புதுவகையான உருமாற்றம் பெற்ற கொரோனா (ஒமிக்ரான் XE, BA.2.12...)இதுவரை கண்டறியப்படவில்லை,'' என்கிறார்.

மேலும், ''தமிழகத்தில் குழுவாக (Cluster) பாதிப்பது குறைவாக இருந்தாலும்,சென்னை ஐ.ஐ.டியில் குழு பாதிப்பு ஏற்பட்டு 30 பேருக்கு பாதிப்பு ஏற்பட்டுள்ளது. அங்கும் உருமாற்றம் அடைந்த கொரோனா பாதிப்பின் வாய்ப்பை அதிகப்படுத்துவதால் மூலக்கூறு ஆய்வுக்கு ஐ.ஐ.டி மாதிரிகளை அனுப்ப உள்ளதாக சுகாதாரத்துறை செயலாளர் தெரிவித்திருப்பது வரவேற்கத்தக்கது'' என்கிறார் புகழேந்தி.

பரிசோதனைக்கான மாதிரிகள் முறையாக சேகரிக்கப்பட்டு உரிய பாதுகாப்புடன் ஆய்வகத்துக்கு அனுப்பாவிட்டால் அவை கெட்டுப் போய் பரிசோதனை செய்ய முடியா நிலை ஏற்படலாம். சில வாரங்களுக்கு முன்பு தமிழ்நாட்டில் இருந்து நாக்பூருக்கு அனுப்பப்பட்ட 142 மாதிரிகளில் 58 மாதிரிகள் மட்டும் பரிசோதனைக்கு உகந்தவை எனவும் மற்றவை தகுதியற்றவை எனவும் தெரியவந்துள்ளது. தமிழ்நாட்டில் ஆய்வு செய்யும் வசதிகள் இல்லையா, எதற்காக நாக்பூருக்கு அனுப்ப வேண்டும்? ஐ.ஐ.டியில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ள அனைத்து மாணவர்களும் முழு தடுப்பூசிகளை செலுத்திக் கொண்டவர்கள் என்ற விவரமும் வெளியாகியுள்ளது' என்று அவர் கூறுகிறார்.

தற்போது தமிழ்நாட்டில் 232 பேர் மட்டுமே நோய் பாதிப்பில் (Active cases) இருந்து வருவதாகவும் 10 பேர் மட்டுமே மருத்துவமனையில் சிகிச்சை பெறுவதாகவும் ஒருவர்கூட தீவிர சிகிச்சைப் பிரிவில் இல்லை என்ற தகவலும் வெளியாகியுள்ளது. இருப்பினும் சில கேள்விகள் எழத்தான் செய்கின்றன'' என்றவர், ஐந்து கேள்விகளை பட்டியலிட்டார்.

1. தமிழகத்திலேயே மூலக்கூறு ஆய்வு பரிசோதனை செய்யும் ஆய்வகம் இருந்தும் வெளி இடங்களுக்கு ஏன் பரிசோதனைக்காக மாதிரிகளை அனுப்ப வேண்டும்?

2.வெளிநாட்டு பயணிகளை தீவிரமாக கண்காணிப்பது நல்லது என்றாலும் தமிழகத்தில் நீண்ட இடைவெளிக்குப் பிறகு 4 வெளிநாட்டுப் பயணிகளுக்கு கொரோனா தொற்று உறுதிசெய்யப்பட்ட நிலையில் 2 சதவீத பயணிகளுக்கு மட்டுமே பரிசோதனைகள் செய்கின்றனர். இது போதுமானதா?

3. புதுவகை உருமாற்றம் அடைந்த கொரோனா ஒமிக்ரான் வைரஸ் பாதிப்பு அறிகுறிகள் (Symptoms) இல்லையெனில், அதனைக் கையாள மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கைகள் குறித்து அரசிடம் என்ன திட்டம் உள்ளது?

4. ஒமிக்ரான் BA.1 -ல் 33 மாற்றங்களும் BA.2-ல் 29 மாற்றங்களும் கொரோனா ஸ்பைக் புரதத்தில் உள்ளதால், அவை உடம்பின் நோய் எதிர்ப்பு சக்தியின் பாதிப்பிலிருந்து எப்படி தப்பித்துக் கொள்கின்றன என அமெரிக்காவின் ஹுஸ்டன் பல்கலைக்கழக மூலக்கூறு ஆய்வாளர் மருத்துவர் ஜிம்மி கோலிகர் ஆதாரத்துடன் அறிவியல் ஆய்விதழில் கட்டுரை வெளியிட்டுட்டுள்ளார். அதனைத் தீர்ப்பதற்கு புதிய வகை மருந்துகளும், தடுப்பூசிகளும் தேவை என வலியுறுத்தியுள்ளார். தற்போதுள்ள கொரோனா தடுப்பூசியில் மாற்றம் தேவை என்பதை உணர்ந்து அதற்கேற்றவாறு கொரோனா தடுப்பூசியில் மாற்றம் செய்வது குறித்த ஆய்வுகள் இந்தியாவிலும் தமிழகத்திலும் மேற்கொள்ளப்படுமா?

5. கொரோனா தொற்று பாதிப்பை தொடக்கத்திலேயே கண்டறிய மூலக்கூறு ஆய்வுடன் கழிவுநீர் (sewage sampling) ஆய்வும் மேற்கொண்டால் நல்லது. ஐ.ஐ.டியில் இதை உடனே மேற்கொள்வார்களா? மேலும் எத்தனை பேருக்கு எந்தெந்த மாவட்டங்களில் இருந்து மூலக்கூறு ஆய்வுகள் மேற்கொள்ளப்படுகின்றன?என்பதை பொதுவெளியில் வைத்தால் சிறப்பாக இருக்கும்'' என்கிறார்.

இதையடுத்து, பொது சுகாதாரத்துறை வல்லுநர் குழந்தைசாமியிடம் பேசினோம்.

முதல் அலையைவிட இரண்டாவது அலையின் பாதிப்பு என்பது அதிகமாக இருந்தது. மூன்றாவது அலையில் பாதிப்பு என்பது குறைவாக இருந்தது. அடுத்து வரக் கூடிய அலையில் பாதிப்பின் தன்மை என்பது குறைவாக இருக்கும். தமிழ்நாட்டில் தடுப்பூசி செலுத்திக் கொண்டவர்களின் எண்ணிக்கையும் அதிகமாக உள்ளது. ஆனால், தடுப்பூசி போடாதவர்களும் கோவிட் தொற்று பாதிக்காதவர்களும் தடுப்பூசியை செலுத்திக் கொள்ள வேண்டும். தற்போது வரக்கூடிய கொரோனா என்பது சாதாரண சளி, இருமலாக மாறிவிடும். இதுவரையில் ஏழு கொரோனா வகைகள் கண்டறியப்பட்டுள்ளன. நான்கு கொரோனா வகைகள், சாதாரண சளி (common cold) வகைகளாக மாறிவிட்டன,'' என்கிறார்.

ஒமிக்ரான் XE வகை பாதிப்பு கேரளாவைச் சேர்ந்த ஒருவருக்குக் கண்டறியப்பட்டுள்ளதே?'' என்று அவரிடம் கேட்டோம்.

அனைத்து மாநிலங்களிலும் தொற்று வரும். ஆனால், இறப்பு, ஆக்சிஜன் போன்ற பிரச்னைகள் வரவில்லை. இது சாதாரணமாகக் கடந்து சென்றுவிடும்'' என்கிறார்.

தமிழ்நாட்டில் மூலக்கூறு ஆய்வுகள் நடக்கிறதா, எதற்காக வெளி மாநிலங்களுக்கு அனுப்ப வேண்டும்?'' என்றோம்.

தமிழ்நாட்டில் மூலக்கூறு சோதனைகள் நடக்கின்றன. பரிசோதனை மாதிரிகள் அதிகமாக இருந்தால் பெங்களூரு, ஐதராபாத் ஆகிய நகரங்களுக்கு அனுப்புகிறோம். தேனாம்பேட்டையில் உள்ள பொதுசுகாதாரத்துறை அலுவலகத்தில் மூலக்கூறு ஆய்வு சோதனை நடக்கிறது'' என்றார். மேலும், ''வரும் நாள்களில் கொரோனா தொற்றின் பாதிப்பு அதிகமாக இருக்கும். ஆனால், மருத்துவமனைகளில் அனுமதிக்கப்படுகிறவர்களின் எண்ணிக்கை என்பது குறைவாக இருக்கும்,'' என்கிறார் குழந்தைசாமி

தடுப்பூசி செலுத்திக் கொள்வதும் முகக் கவசத்தை முறையாக அணிந்து கொள்வது மட்டுமே ஒரே தீர்வு. தமிழ்நாட்டிலேயே மூலக்கூறு பரிசோதனைகளை நடத்தி வருகிறோம். எந்தத் திரிபாக இருந்தாலும் முகக்கவசம் தடுக்கும். கொரோனா நிலவரத்தை முழுமையாக கண்காணித்து வருகிறோம்'' என பிபிசி தமிழிடம் தெரிவித்தார் தமிழ்நாடு பொது சுகாதாரத்துறை இயக்குநர் மருத்துவர் செல்வவிநாயகம்.

அடுத்து வரக் கூடிய நாள்களில் கொரோனா தொற்றின் வேகம் பரவுவதைக் கணக்கில் கொண்டு கட்டுப்பாடுகள் கடுமையாக்கப்படலாம்'' என்கின்றனர் சுகாதாரத்துறை வல்லுநர்கள்.


✍கோபு ஸ்டாலின்

Comments

Popular posts from this blog

தீண்டாமை கொடுமையில் இருந்து தங்களை காக்க வேண்டும் என்று தேனி கோட்டைப்பட்டி கிராம மக்கள் ஆட்சியரிடம் மனு!

தீண்டாமை கொடுமையில் இருந்து தங்களை காக்க வேண்டும் என்று தேனி கோட்டைப்பட்டி கிராம மக்கள் ஆட்சியரிடம் மனு! தேனி, மார்ச்., 07:  தீண்டாமை கொடுமையிலிருந்து மக்களை காப்பாற்றுங்கள், அரசு திட்டங்களை செயல்படுத்தவிடாமல் சாதிய வன்மத்துடன் தடுக்கும் நபர்கள் மீது நடவடிக்கை எடுங்கள் என்ற கோரிக்கையுடன் அரண்மனைபுதூர் ஊராட்சி கிராம கமிட்டி தலைவர் பாலசுந்தரராஜ் மற்றும் கோட்டைப்பட்டி கிராம பொதுமக்கள் ஆட்சியரிடம் மனு அளித்தனர். அந்த மனுவில் கூறியிருப்பதாவது:  இந்தியா நாடு சுதந்திரம் அடைந்து 75ஆண்டுகளுக்கு மேலாகியும், தீண்டாமை கொடுமை தலைவிரித்தாடுகிறது. தேனி மாவட்டம், தேனி வட்டம், அரண்மனை புதூர் ஊராட்சிக்குட்பட்ட கோட்டைப்பட்டி கிராமத்தில் ஜாதிய தீண்டாமை கொடுமை நடைபெறுகிறது. இங்கு வாழும் பட்டியல் பிரிவிலுள்ள தேவேந்திரகுல வேளாளர் சமூக மக்களுக்கு கிடைக்கக்கூடிய அடிப்படைவசதி திட்டங்களை தடுத்து வருகிறார்கள். கோட்டைப்பட்டி கிராமத்தில் வாழும் ராஜகம்பளத்து நாயக்கர் சமுதாயத்தைச்சேர்ந்த தங்கப்பாண்டி, சுந்தரவடிவேல், செல்வம் உட்பட பத்துபேர்கள் கொண்ட கும்பல் சேர்ந்து தேவேந்திரகுல வேளாளர் மக்கள் பொருளாதார ரீதிய...

காரைக்குடி சம்பவம்; அரசு ஊழியர்கள் கொதிப்பு!

காரைக்குடி சம்பவம்; அரசு ஊழியர்கள் கொதிப்பு! சிவகங்கை மாவட்டம், காரைக்குடி இராமசாமி தமிழ்க்கல்லூரியில் முத்துமாரி என்பவர் அலுவலக உதவியாளராகப் பணிபுரிந்து வருகிறார்.  நேற்று அவரை, கல்லூரி வளாகத்திற்கு உள்ளே வைத்து, கல்லூரியில் பணிபுரியும் தற்காலிக காவலர் பழனியப்பன் ஆபாசமாகப் பேசி, கொலைவெறித் தாக்குதல் நடத்தியதாக கூறப்படுகிறது. படுகாயம் அடைந்த அவர் மருத்துவமனையில் சிகிச்சைக்கு சேர்க்கப்பட்டுள்ளார்.  இதுகுறித்து அரசு ஊழியர்கள் சங்கம் சிவகங்கை மாவட்ட மையம் விடுத்துள்ள கண்டன அறிக்கையில்: சிவகங்கை மாவட்டம், காரைக்குடி ராமசாமி தமிழ்க்கல்லூரியில் அலுவலக உதவியாளராகப் பணிபுரியும் முத்துமாரி என்பவரை, கல்லூரி வளாகத்திற்கு உள்ளே வைத்து, ஆபாசமாகப் பேசி, கொலைவெறித் தாக்குதல் நடத்திய கொடுஞ்செயலை தமிழ்நாடு அரசு ஊழியர்கள் சங்கம் சிவகங்கை மாவட்ட மையம் வன்மையாக கண்டிக்கிறது. இக்கொடுஞ்செயலில் ஈடுபட்ட கல்லூரியில் பணிபுரியும் தற்காலிக காவலர் பழனியப்பன் என்பவரையும்,அதற்கு தூண்டுகோலாய் இருந்த கல்லூரியின் பொறுப்பு முதல்வர் நாகநாதனையும் வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின்கீழ் கொலைமுயற்சி, வழக்குப் பதிவுசெய்த...

தேனி உழவர் சந்தையில் 04-01-2025 இன்றைய காய்கறி பழ வகைகளின் விலை விபரம்:

தேனி உழவர் சந்தையில் 04-01-2025 இன்றைய காய்கறி பழ வகைகளின் விலை விபரம்: கத்தரிக்காய் 46,40 தக்காளி 20,15 வெண்டைக்காய் 46,40 கொத்தவரங்காய் 35,30 சுரைக்காய் 20,18,15 புடலங்காய்  26,24 பாகற்காய் 40,32 பீர்க்கங்காய் 40 முருங்கைக்காய்  -- பூசணிக்காய் 20,14,10 பச்சைமிளகாய் உருட்டு 75,70 அவரைக்காய் (பட்டை) -- தேங்காய் கிலோ 60 சம்பா மிளகாய் -- நைஸ் அவரை -- பெல்ட் அவரை 110 திராட்சை 80 மலை உருளைக்கிழங்கு 45 உருளைக்கிழங்கு பெங்களூர் 35 உருளைக்கிழங்கு ஆக்ரா 35 கருணைக்கிழங்கு 65 சேனை 45 மரவள்ளி கிழங்கு -- வெ.வ.கிழங்கு 55 கறிவேப்பிலை 60 கொத்தமல்லி 30 புதினா 35 சின்னவெங்காயம் 80,75 பெரியவெங்காயம் பழையது -- பெரிய வெங்காயம் புதியது 45,40 இஞ்சி பழையது -- இஞ்சி புதியது 45 வெள்ளைப்பூண்டு 340,300,280 வாழையிலை ஒரு மடி 25,20 வாழைப்பூ ஒன்றுக்கு 10 வாழைத்தண்டு ஒன்றுக்கு 10 வாழைப்பழம் 60,40,30,25 வாழைக்காய் 25 ஆரஞ்சு 260 பீட்ரூட் 65 நூல்கோல் 40 முள்ளங்கி 22,18 முருங்கைபீன்ஸ் 90,70 பட்டர்பீன்ஸ் 170,150 சோயாபீன்ஸ் -- ரிங்பீன்ஸ் 75 முட்டைகோஸ் 28 கேரட் ஊட்டி 66,50 கேரட் கொடைக்கானல் 36,30 டர்னிப் 40 சவ்சவ் ...