Skip to main content

தேனி சமூக நலத்துறை அலுவலகத்தில் பட்டப்பகலில் பெண் அதிகாரிக்கு அரிவாள் வெட்டு!

தேனி சமூக நலத்துறை அலுவலகத்தில் பட்டப்பகலில் பெண் அதிகாரிக்கு அரிவாள் வெட்டு!


தேனி மாவட்ட ஆட்சியர் அலுவலக பெருந்திட்ட வளாகத்தில் அமைந்துள்ள, ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சித் திட்ட அலுவலகத்தில், திட்ட அலுவலராக  ராஜராஜேஸ்வரி வயது 52 என்பவர் பணியாற்றி வருகிறார். 


2015ம் ஆண்டு உமாசங்கர் 56 என்பவர் இதே அலுவலகத்தில் இளநிலை உதவியாளராக பணியாற்றி வந்த நேரத்தில், அலுவல் பணி கோப்புகள் மறுசீரமைப்பு போன்றவற்றில் செய்த தில்லுமுல்லுக்காக  ஒழுங்கு நடவடிக்கை எடுக்கும் வண்ணம் 70b விதிமுறையின் கீழ் நடவடிக்கைக்கு உள்ளானார். மேலும் ஒழுங்கு நடவடிக்கையாக  ஈரோடு மாவட்டம் வெள்ளக்கோவில் அலுவலகத்திற்கு இடம் மாறுதலாக அனுப்பப்பட்டார். 


இதன் தொடர்ச்சியாக, உமாசங்கர் அதிகாரி ராஜராஜேஸ்வரியை பழிவாங்கும் எண்ணத்தோடு ஐந்தாண்டு காலம் காத்திருந்து 30.05.22 அன்று மதியம் ஒரு மணி அளவில் ராஜராஜேஸ்வரி  அலுவலகத்திற்கு சென்று முகம் மற்றும் கை தோள்பட்டை போன்ற இடங்களில் சரமாரியாக அரிவாளால் வெட்டி தப்ப முனைந்தார். 


இரத்த வெள்ளத்தில் கிடந்த பெண் அதிகாரியை அங்கு பணிபுரிந்த அலுவலர்கள் மீட்டு தனியார் ஆம்புலன்ஸ் மூலம் தேனி மருத்துவக் கல்லூரி மருத்துவ மனையில் சிகிச்சைக்கு சேர்த்தனர். 


அருகில் நடைபெற்ற தீர்ப்பாயத்திற்கு பாதுகாப்பிற்காக வந்திருந்த பெண் காவலர் அய்யம்மாள் சம்பவம் அறிந்து விரைந்து வந்து உமாசங்கரை தப்பவிடாமல் பிடித்து வெட்ட பயன்படுத்திய ஆயுதத்தையும் கைப்பற்றி மேலதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்தார். 


தகவல் அறிந்ததும் மாவட்ட திட்ட அலுவலர் தண்டபாணி மற்றும் மாவட்ட ஆட்சியர் க.வீ. முரளீதரன், மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பிரவீன் உமேஷ் டோங்ரே, துணை கண்காணிப்பாளர் பால் சுதர் ஆகியோர் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து விசாரணை செய்து குற்றவாளியை கைது செய்து தேனி காவல் நிலையத்திற்கு விசாரணைக்கு அழைத்துச் சென்றனர். 




பெண் அதிகாரி தேனி மருத்துவக் கல்லூரி மருத்துவ மனையில் தீவிர சிகிட்சை பிரிவில் சிகிச்சை பெற்று வருகிறார். இந்த சம்பவம் தேனியில் மிகுந்த பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.







Comments

Popular posts from this blog

தீண்டாமை கொடுமையில் இருந்து தங்களை காக்க வேண்டும் என்று தேனி கோட்டைப்பட்டி கிராம மக்கள் ஆட்சியரிடம் மனு!

தீண்டாமை கொடுமையில் இருந்து தங்களை காக்க வேண்டும் என்று தேனி கோட்டைப்பட்டி கிராம மக்கள் ஆட்சியரிடம் மனு! தேனி, மார்ச்., 07:  தீண்டாமை கொடுமையிலிருந்து மக்களை காப்பாற்றுங்கள், அரசு திட்டங்களை செயல்படுத்தவிடாமல் சாதிய வன்மத்துடன் தடுக்கும் நபர்கள் மீது நடவடிக்கை எடுங்கள் என்ற கோரிக்கையுடன் அரண்மனைபுதூர் ஊராட்சி கிராம கமிட்டி தலைவர் பாலசுந்தரராஜ் மற்றும் கோட்டைப்பட்டி கிராம பொதுமக்கள் ஆட்சியரிடம் மனு அளித்தனர். அந்த மனுவில் கூறியிருப்பதாவது:  இந்தியா நாடு சுதந்திரம் அடைந்து 75ஆண்டுகளுக்கு மேலாகியும், தீண்டாமை கொடுமை தலைவிரித்தாடுகிறது. தேனி மாவட்டம், தேனி வட்டம், அரண்மனை புதூர் ஊராட்சிக்குட்பட்ட கோட்டைப்பட்டி கிராமத்தில் ஜாதிய தீண்டாமை கொடுமை நடைபெறுகிறது. இங்கு வாழும் பட்டியல் பிரிவிலுள்ள தேவேந்திரகுல வேளாளர் சமூக மக்களுக்கு கிடைக்கக்கூடிய அடிப்படைவசதி திட்டங்களை தடுத்து வருகிறார்கள். கோட்டைப்பட்டி கிராமத்தில் வாழும் ராஜகம்பளத்து நாயக்கர் சமுதாயத்தைச்சேர்ந்த தங்கப்பாண்டி, சுந்தரவடிவேல், செல்வம் உட்பட பத்துபேர்கள் கொண்ட கும்பல் சேர்ந்து தேவேந்திரகுல வேளாளர் மக்கள் பொருளாதார ரீதிய...

காரைக்குடி சம்பவம்; அரசு ஊழியர்கள் கொதிப்பு!

காரைக்குடி சம்பவம்; அரசு ஊழியர்கள் கொதிப்பு! சிவகங்கை மாவட்டம், காரைக்குடி இராமசாமி தமிழ்க்கல்லூரியில் முத்துமாரி என்பவர் அலுவலக உதவியாளராகப் பணிபுரிந்து வருகிறார்.  நேற்று அவரை, கல்லூரி வளாகத்திற்கு உள்ளே வைத்து, கல்லூரியில் பணிபுரியும் தற்காலிக காவலர் பழனியப்பன் ஆபாசமாகப் பேசி, கொலைவெறித் தாக்குதல் நடத்தியதாக கூறப்படுகிறது. படுகாயம் அடைந்த அவர் மருத்துவமனையில் சிகிச்சைக்கு சேர்க்கப்பட்டுள்ளார்.  இதுகுறித்து அரசு ஊழியர்கள் சங்கம் சிவகங்கை மாவட்ட மையம் விடுத்துள்ள கண்டன அறிக்கையில்: சிவகங்கை மாவட்டம், காரைக்குடி ராமசாமி தமிழ்க்கல்லூரியில் அலுவலக உதவியாளராகப் பணிபுரியும் முத்துமாரி என்பவரை, கல்லூரி வளாகத்திற்கு உள்ளே வைத்து, ஆபாசமாகப் பேசி, கொலைவெறித் தாக்குதல் நடத்திய கொடுஞ்செயலை தமிழ்நாடு அரசு ஊழியர்கள் சங்கம் சிவகங்கை மாவட்ட மையம் வன்மையாக கண்டிக்கிறது. இக்கொடுஞ்செயலில் ஈடுபட்ட கல்லூரியில் பணிபுரியும் தற்காலிக காவலர் பழனியப்பன் என்பவரையும்,அதற்கு தூண்டுகோலாய் இருந்த கல்லூரியின் பொறுப்பு முதல்வர் நாகநாதனையும் வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின்கீழ் கொலைமுயற்சி, வழக்குப் பதிவுசெய்த...

தனித்தன்மையை இழந்து புள்ளி விபரம் கோரும் துறையாக மாறி வரும் கருவூலத்துறை!

தனித்தன்மையை இழந்து புள்ளி விபரம் கோரும் துறையாக மாறி வரும் கருவூலத்துறை!  தமிழ்நாடு கருவூல கணக்குத்துறை அலுவலர் சங்கம் வேதனை!! சென்னை: தமிழ்நாடு கருவூல கணக்குத்துறை அலுவலர் சங்க மாநிலத்தலைவர் ஜெ.மூர்த்தி மற்றும் பொதுச் செயலாளர் வெ.லெனின் ஆகியோர் கூட்டாக வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:               கருவூலத்துறையில் தற்போது கிட்டத்தட்ட 1600 க்கும் மேற்பட்ட பணியிடங்கள் காலியாக இருக்கும் சூழ்நிலையில் குறிப்பாக இந்த காலிப்பணியிடங்கள் மாவட்ட மற்றும் சார்நிலைக்கருவூலங்களில் அதிகமாக இருக்கும் நிலையில் தொடர்ச்சியாக தலைமை அலுவலகத்தின் வெவ்வேறு பிரிவுகளில் இருந்து பல்வேறு வகையான புள்ளி விபரங்கள் கோரப்படுவதோடு IFHRMSல் தரவுகளை மீண்டும் மீண்டும் பதிவேற்றம் செய்யவும் உயர் அலுவலர்களால் நெருக்கடி தரப்படுகிறது. கோரப்படுகின்ற புள்ளி விவரங்கள் அனைத்தும் 100% பணம் பெற்று வழங்கும் அலுவலர்களிடம் இருந்து பெறவேண்டிய தகவல்களாகும். ஒரு விபரம் முழுமை பெறுவதற்குள் அடுத்தடுத்த புள்ளி விபரங்கள் கோரப்படுவதால் பணம் பெற்று வழங்கும் அலுவலர்களுக்கும் கருவூல ஊழியர்கள...