Skip to main content

வேளாண்மைப் படிப்புகள் படிக்க விரும்பும் பிளஸ்டூ முடித்த மாணவர்களுக்கு!

வேளாண்மைப் படிப்புகள் படிக்க விரும்பும் பிளஸ்டூ முடித்த மாணவர்களுக்கு!


B Sc., Agriculture படிக்க விரும்பும் அனைவரும் அவசியம் முழுவதுமாக படிக்க வேண்டிய பதிவு

இந்திய அளவிலும், உலகளாவிய நிலையிலும் வேளாண்மைக் கல்வியில் முதன்மைக் கல்வி நிறுவனமான கோயம்புத்தூரில் உள்ள ‘‘தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகம்’’ 


படிப்புகள் :

1. இளம் அறிவியல் (வேளாண்மை) - B.Sc. (Agriculture)

2. இளம் அறிவியல் (தோட்டக்கலை) - B.Sc. (Horticulture)

3. இளம் அறிவியல் (வனவியல்) - B.Sc. (Forestry)

4. இளம் அறிவியல் (உணவு, ஊட்டச்சத்தியல், உணவு முறையியல்) - B.Sc. (Food, Nutrition, Food Systems)

5. இளம் அறிவியல் (பட்டு வளர்ப்பு) - B.Sc. (Sericulture)

6. இளம் தொழில்நுட்பம் (வேளாண்மை பொறியியல்) - B.Tech. (Agricultural Engineering)

7. இளம் தொழில்நுட்பம் (தோட்டக்கலை) - B.Tech. (Horticulture)

8. இளம் தொழில்நுட்பம் (உயிர் தொழில்நுட்பவியல்) - B.Tech. (Bio Industrial Technology)

9. இளம் தொழில்நுட்பம் (ஆற்றல் மற்றும் சுற்றுப்புறச் சூழலியல்) - B.Tech. (Energy and Environment)

10. இளம் தொழில்நுட்பம் (உணவு பதன் செய் பொறியியல்) - B.Tech. (Food Processing Engineering)

11. இளம் அறிவியல் (வேளாண் வணிக மேலாண்மை) - B.Sc. (Agriculture Business Management)

12. இளம் தொழில்நுட்பம் (வேளாண்மை தொழில்நுட்பம்) - B.Tech. (Agricultural Industrial Technology)


யார் விண்ணப்பிக்கலாம்?

இளம் அறிவியல் படிப்புகளுக்கு விண்ணப்பிக்க கணிதம், இயற்பியல், வேதியியல், உயிரியல் அல்லது இயற்பியல், வேதியியல், தாவரவியல், விலங்கியல் பாடங்களில் பிளஸ்டூவில் தேர்ச்சி தேவை. தொழில்நுட்பப் படிப்புகளுக்கு விண்ணப்பிக்க, அறிவியல் பிரிவுகளில் கணிதம் ஒரு பாடமாக இருக்க வேண்டும்.

இப்படிப்புகளுக்குத் தமிழ்நாட்டைச் சேர்ந்தவர்கள் விண்ணப்பிக்கலாம். பத்தாம் வகுப்பு, பதினொன்றாம் வகுப்பு, பன்னி ரெண்டாம் வகுப்பு. வேறு மாநிலங்களில் பயின்றவர்களாக இருப்பின், இவர்கள் நிரந்தர இருப்பிடச் சான்றிதழை சம்பந்தப்பட்ட அலுவலகத்தில் பெற்று சமர்ப்பிக்க வேண்டும். விண்ணப்பிப்பவர்கள் 1/7/2022 அன்றைய நிலவரப்படி 21 வயதுக்குள் இருக்க வேண்டும். தாழ்த்தப்பட்டவர்கள் மற்றும் பழங்குடியினர்களுக்கு வயது வரம்பில்லை. 


எவ்வாறு விண்ணப்பிக்க வேண்டும்?

இப்படிப்புகளுக்கு விண்ணப்பிக்க, பொதுப்பிரிவினர், பிற பிற்படுத்தப்பட்ட பிரிவினர் ரூ. 600, ஆதிதிராவிடர், ஆதிதிராவிட அருந்ததியர்,பழங்குடியினர் ரூ. 300 செலுத்த வேண்டும்.

www.tnau.ac.in/admission.html என்ற இணையதளம் வழியாக ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும்.

எங்குக் கல்லூரிகள் உள்ளன?

கோயம்புத்தூர் வளாகம்:

1. வேளாண்மைக் கல்லூரி மற்றும் ஆய்வு நிறுவனம்.

2. தோட்டக்கலைக் கல்லூரி மற்றும் ஆய்வு நிறுவனம்.

3. வேளாண்மைப் பொறியியல் கல்லூரி மற்றும் ஆய்வு நிறுவனம்.

மதுரை வளாகம்:

1. வேளாண்மைப் கல்லூரி மற்றும் ஆய்வு நிறுவனம்.

2. ஹோம் சயின்ஸ் கல்லூரி அண்ட் ரிசர்ச் இன்ஸ்ட்டியூட்.

திருச்சி வளாகம்:

1. வேளாண்மைப் பொறியியல் கல்லூரி மற்றும் ஆய்வு நிறுனவம் குமுலூர், திருச்சி.

2. அன்பில் தர்மலிங்கம் வேளாண்மைக் கல்லூரி மற்றும் ஆய்வு நிறுவனம்.

3. பெண்களுக்கான தோட்டக்கலைக் கல்லூரி மற்றும் ஆய்வு நிறுவனம்.

கிள்ளிக்குளம் வளாகம்:

வேளாண்மைக் கல்லூரி மற்றும் ஆய்வு நிறுவனம் கிள்ளிக்குளம், திருநெல்வேலி.

பெரியகுளம் வளாகம்:

தோட்டக்கலைக் கல்லூரி மற்றும் ஆய்வு நிறுவனம், பெரியக் குளம், தேனி.

மேட்டுப்பாளையம் வளாகம்:

வனவியல் கல்லூரி மற்றும் ஆய்வு நிறுவனம் மேட்டுப்பாளையம்.

ஈச்சங்கோட்டை வளாகம்:

வேளாண்மைக் கல்லூரி மற்றும் ஆய்வு நிறுவனம் ஈச்சங்கோட்டை, தஞ்சாவூர்.

குடுமியான்மலை வளாகம்:

வேளாண்மைக் கல்லூரி மற்றும் ஆய்வு நிறுவனம் குடுமியான்மலை, புதுக்கோட்டை.

வாழவச்சனூர் வளாகம்:

வேளாண்மைக்கல்லூரி மற்றும் ஆய்வு நிறுவனம் வாழவச்சனூர், திருவண்ணாமலை.

ஜீனூர் வளாகம்: 

ஜீனூர் அரசு தோட்டக்கலைக் கல்லுாரி மற்றும் ஆராய்ச்சி நிலையம், ஜீனூர், கிருஷ்ணகிரி 

மொத்த இடங்கள்:

B.Sc. Agriculture - 600

B.Sc. Horticulture - 125

B.Sc. Forestry - 45

B.Sc. Food & Nutrition - 45

B.Tech. (Agri. Engg) - 70

B.Sc. (Sericulture) - 30

B.Tech. (Horticulture) - 30

B.Tech. (Food Process Engineering) - 55

B.Tech. (Energy & Environment Engg.) - 55

B.Tech. (Bio Technology) - 55

B.Tech. (Bio Informatics) - 35

B.Sc. (Agri Business Management) - 45

B.Tech. (Agri Information Tech) - 30

வேளாண் பல்கலைக்கழகம் அங்கீகாரம் உள்ள தனியார் கல்லூரிகள் :

கலவை (வேலூர்), பெரம்பலூர், பொள்ளாச்சி, கண்ணனூர் (திருச்சி), நாமக்கல், தஞ்சை, குள்ளபுரம் (தேனி), சக்தி நகர் (ஈரோடு), டி.என்.பாளையம் (ஈரோடு), தக்கோலம் (அரக்கோணம்), செம்பட்டி (திண்டுக்கல்), மா.பொடையூர் (கடலூர்), வேடச்சந்தூர் (திண்டுக்கல்), வாசுதேவ நல்லூர் (திருநெல்வேலி), சன்னாவனம் (காரைக்குடி), பேரையூர் (கமுதி), ஓசூர், உசிலம்பட்டி, ராதாபுரம் (திருநெல்வேலி), நெடுஞ்கூர் (திருச்சி) என்ற இடங்களில் உள்ள கல்லூரிகளின் 65% இடங்கள் பல்கலைக்கழகத்தின் கலந்தாய்வு வழியாக நிரப்பப்படும்.


எவ்வாறு மாணவர் சேர்க்கை நடைபெறும்?

XII மதிப்பெண் அடிப்படையில் மாணவர் சேர்க்கை நடைபெறும்

Aggregate Mark = Sum of [(Marks got in each subject / Maximum marks of that subject) ? 50]

ஒருவருக்கு மேல் ஒரே மதிப்பெண் இருப்பின்,

1. 50 மதிப்பெண்ணிற்குக் கணிதம் மதிப்பெண். கணிதம் இல்லாவிடில் உயிரியல் அல்லது (தாவரவியல் + விலங்கியல்)

2. 50 மதிப்பெண்ணிற்கு இயற்பியல்

3. 50 மதிப்பெண்ணிற்கு வேதியியல்

4. வயதில் மூத்தவர் என்ற வரிசையில் முன்னுரிமை தரப்படும்.

விண்ணப்பத்திற்கு​--- குறைந்த பட்சத்தகுதி பொதுப்பிரிவினர்க்கு 55%, பிற்படுத்தப்பட்டவர், முஸ்லீம் பிற்படுத்தப்பட்டவர் 50%, பிற மிகவும் பிற்படுத்தப்பட்டவர் 45% என்றும், ஆதிதிராவிடர், ஆதிதிராவிடர்  அருந்ததியர், பழங்குடியினர்க்கு குறைந்தபட்ச தேர்ச்சி என்று நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

வேளாண் கல்லூரியில் தங்களுக்கு இடம் கிடைத்து படித்து பட்டம் பெற A to Z குழுமம் அன்புடன் வாழ்த்துகிறது..

Comments

Popular posts from this blog

தீண்டாமை கொடுமையில் இருந்து தங்களை காக்க வேண்டும் என்று தேனி கோட்டைப்பட்டி கிராம மக்கள் ஆட்சியரிடம் மனு!

தீண்டாமை கொடுமையில் இருந்து தங்களை காக்க வேண்டும் என்று தேனி கோட்டைப்பட்டி கிராம மக்கள் ஆட்சியரிடம் மனு! தேனி, மார்ச்., 07:  தீண்டாமை கொடுமையிலிருந்து மக்களை காப்பாற்றுங்கள், அரசு திட்டங்களை செயல்படுத்தவிடாமல் சாதிய வன்மத்துடன் தடுக்கும் நபர்கள் மீது நடவடிக்கை எடுங்கள் என்ற கோரிக்கையுடன் அரண்மனைபுதூர் ஊராட்சி கிராம கமிட்டி தலைவர் பாலசுந்தரராஜ் மற்றும் கோட்டைப்பட்டி கிராம பொதுமக்கள் ஆட்சியரிடம் மனு அளித்தனர். அந்த மனுவில் கூறியிருப்பதாவது:  இந்தியா நாடு சுதந்திரம் அடைந்து 75ஆண்டுகளுக்கு மேலாகியும், தீண்டாமை கொடுமை தலைவிரித்தாடுகிறது. தேனி மாவட்டம், தேனி வட்டம், அரண்மனை புதூர் ஊராட்சிக்குட்பட்ட கோட்டைப்பட்டி கிராமத்தில் ஜாதிய தீண்டாமை கொடுமை நடைபெறுகிறது. இங்கு வாழும் பட்டியல் பிரிவிலுள்ள தேவேந்திரகுல வேளாளர் சமூக மக்களுக்கு கிடைக்கக்கூடிய அடிப்படைவசதி திட்டங்களை தடுத்து வருகிறார்கள். கோட்டைப்பட்டி கிராமத்தில் வாழும் ராஜகம்பளத்து நாயக்கர் சமுதாயத்தைச்சேர்ந்த தங்கப்பாண்டி, சுந்தரவடிவேல், செல்வம் உட்பட பத்துபேர்கள் கொண்ட கும்பல் சேர்ந்து தேவேந்திரகுல வேளாளர் மக்கள் பொருளாதார ரீதிய...

காரைக்குடி சம்பவம்; அரசு ஊழியர்கள் கொதிப்பு!

காரைக்குடி சம்பவம்; அரசு ஊழியர்கள் கொதிப்பு! சிவகங்கை மாவட்டம், காரைக்குடி இராமசாமி தமிழ்க்கல்லூரியில் முத்துமாரி என்பவர் அலுவலக உதவியாளராகப் பணிபுரிந்து வருகிறார்.  நேற்று அவரை, கல்லூரி வளாகத்திற்கு உள்ளே வைத்து, கல்லூரியில் பணிபுரியும் தற்காலிக காவலர் பழனியப்பன் ஆபாசமாகப் பேசி, கொலைவெறித் தாக்குதல் நடத்தியதாக கூறப்படுகிறது. படுகாயம் அடைந்த அவர் மருத்துவமனையில் சிகிச்சைக்கு சேர்க்கப்பட்டுள்ளார்.  இதுகுறித்து அரசு ஊழியர்கள் சங்கம் சிவகங்கை மாவட்ட மையம் விடுத்துள்ள கண்டன அறிக்கையில்: சிவகங்கை மாவட்டம், காரைக்குடி ராமசாமி தமிழ்க்கல்லூரியில் அலுவலக உதவியாளராகப் பணிபுரியும் முத்துமாரி என்பவரை, கல்லூரி வளாகத்திற்கு உள்ளே வைத்து, ஆபாசமாகப் பேசி, கொலைவெறித் தாக்குதல் நடத்திய கொடுஞ்செயலை தமிழ்நாடு அரசு ஊழியர்கள் சங்கம் சிவகங்கை மாவட்ட மையம் வன்மையாக கண்டிக்கிறது. இக்கொடுஞ்செயலில் ஈடுபட்ட கல்லூரியில் பணிபுரியும் தற்காலிக காவலர் பழனியப்பன் என்பவரையும்,அதற்கு தூண்டுகோலாய் இருந்த கல்லூரியின் பொறுப்பு முதல்வர் நாகநாதனையும் வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின்கீழ் கொலைமுயற்சி, வழக்குப் பதிவுசெய்த...

தனித்தன்மையை இழந்து புள்ளி விபரம் கோரும் துறையாக மாறி வரும் கருவூலத்துறை!

தனித்தன்மையை இழந்து புள்ளி விபரம் கோரும் துறையாக மாறி வரும் கருவூலத்துறை!  தமிழ்நாடு கருவூல கணக்குத்துறை அலுவலர் சங்கம் வேதனை!! சென்னை: தமிழ்நாடு கருவூல கணக்குத்துறை அலுவலர் சங்க மாநிலத்தலைவர் ஜெ.மூர்த்தி மற்றும் பொதுச் செயலாளர் வெ.லெனின் ஆகியோர் கூட்டாக வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:               கருவூலத்துறையில் தற்போது கிட்டத்தட்ட 1600 க்கும் மேற்பட்ட பணியிடங்கள் காலியாக இருக்கும் சூழ்நிலையில் குறிப்பாக இந்த காலிப்பணியிடங்கள் மாவட்ட மற்றும் சார்நிலைக்கருவூலங்களில் அதிகமாக இருக்கும் நிலையில் தொடர்ச்சியாக தலைமை அலுவலகத்தின் வெவ்வேறு பிரிவுகளில் இருந்து பல்வேறு வகையான புள்ளி விபரங்கள் கோரப்படுவதோடு IFHRMSல் தரவுகளை மீண்டும் மீண்டும் பதிவேற்றம் செய்யவும் உயர் அலுவலர்களால் நெருக்கடி தரப்படுகிறது. கோரப்படுகின்ற புள்ளி விவரங்கள் அனைத்தும் 100% பணம் பெற்று வழங்கும் அலுவலர்களிடம் இருந்து பெறவேண்டிய தகவல்களாகும். ஒரு விபரம் முழுமை பெறுவதற்குள் அடுத்தடுத்த புள்ளி விபரங்கள் கோரப்படுவதால் பணம் பெற்று வழங்கும் அலுவலர்களுக்கும் கருவூல ஊழியர்கள...