01.08.2022 முதல் வாக்காளர் அடையாள அட்டையுடன் ஆதார் இணைப்பு நடவடிக்கைகள் தொடங்கும்.. அரசு அறிவிப்பு!
இணைக்கும் வழிமுறைகள்👇
இந்திய தேர்தல் ஆணையத்தால் வாக்காளர் பட்டியலுடன் ஆதார் எண் இணைப்பது தொடர்பாக வாக்காளர் பதிவு விதிகள் 1960 -இல் பிரிவு 23 உப விதி (5)-ல் திருத்தங்கள் மேற்கொள்ளப்பட்டுள்ளது. அதன்படி "வாக்காளர் பட்டியலில் இடம் பெற்றுள்ள ஒவ்வொருவரும் தங்களுடைய ஆதார் அட்டை குறித்த விவரங்களை வாக்காளர் பதிவு அலுவலருக்கு படிவம் 6பி -இல் தெரிவிக்க வேண்டும்” என்பதாகும். மேற்படி திருத்தச்சட்டம் 01.08.2022 முதல் நடைமுறைக்கு வர இருக்கிறது.
வாக்காளர் பட்டியலில் இடம் பெற்றுள்ள வாக்காளர்களின் ஆதார் எண்ணை பெறுவதன் நோக்கம் என்பது வாக்காளரின் அடையாளத்தை மேம்படுத்தவும், வாக்காளர்பட்டியலில் உள்ள பதிவுகளை அங்கீகரிக்கவும் மற்றும் ஒரு வாக்காளரின் பெயர் ஒன்றுக்கு மேற்பட்ட தொகுதிகளில் அல்லது ஒரே தொகுதியில் ஒன்றுக்கு மேற்பட்ட பதிவுகள் மேற்கொள்ளப்பட்டிருப்பதை அடையாளம் காணவும் உதவும்.
ஆதார் எண்ணை தெரிவிப்பது என்பது வாக்காளர் தானே முன்வந்து செய்கின்ற (அல்லது) நிர்பந்தப்படுத்தப்படாத சுயவிருப்பமான செயல் தொடர்பானது. (It is made clear that submission of Aadhaar number is voluntary on the part of electors) வாக்காளர்கள் கீழ்க்கண்ட வழிமுறைகளின்படி ஆதார் எண்ணை இணைக்கலாம்.
1) வாக்காளர் பட்டியலில் இடம்பெற்றுள்ள வாக்காளர்களின் ஆதார் எண் இணைப்பது தொடர்பான படிவம் 6பி -ஐ National Voters Services Portal (NVSP)- அல்லது Voter Helpline App (VHA) ஆகியவைகளின் மூலம் நிகழ்நிலையில் (Online) பதிவு செய்யலாம்.
(அல்லது)
2) 01.08.2022 முதல் வீடு தேடிவரும் வாக்குச்சாவடி நிலை அலுவலர்களிடம் வாக்காளர்கள் தங்களது சுயவிருப்பத்துடன் ஆதார் எண்ணை தெரிவித்து கருடா (Guruda) செயலி மூலம் பதிவு செய்து கொள்ளலாம் (அல்லது) படிவம் 6பி-இல் பூர்த்தி செய்து சமர்ப்பிக்கலாம்.
(அல்லது)
3) சிறப்பு சுருக்கத் திருத்தத்தின் போது (Special Summary Revision) சிறப்பு முகாம் நடைபெறும் வாக்குச்சாவடி மையங்களில் தானாக முன்வந்து சுயவிருப்பத்துடன் ஆதார் எண்களை படிவம் 6பி-யில் சமர்ப்பிக்கலாம். மேலும், அனைத்து வேலை நாட்களிலும் வாக்காளர் பதிவு அலுவலர் /உதவி வாக்காளர் பதிவு அலுவலர் ஆகியோரிடம் நேரில் சமர்ப்பிக்கலாம்.
வாக்காளர்கள் தங்கள் ஆதார் எண்ணை தர விருப்பம் இல்லாத போது படிவம் 6பி -இல் தெரிவிக்கப்பட்டுள்ள 1) MGNREGA job card, 2) Pass Books with Photograph issued by Bank/Post office 3) Health Insurance smart card issued under the scheme of Ministry of Labour 4) Driving License 5)PAN Card 6) Smart Card issued by RGI under NPR 7) Indian Passport 8) Pension document with photograph 9)Service Identity card with photograph issued to employees by Central /State Govt/ PSUs/ Public Limited Companies 10)Official identity Card issued to MPs / MLAs/ MLCs, 11)Unique identity ID (UDID) Card, Issued by M/o Social Justice and Empowerment, Government of India உள்ளிட்ட 11 ஆவணங்களில் ஏதேனும் ஒன்றினை காட்டி தங்களது பதிவினை உறுதி செய்து கொள்ளலாம்.
எனவே, அனைத்து வாக்காளர்களும் இச்சேவையை பயன்படுத்தி தங்களது பதிவினை அங்கீகரித்துக் கொள்ளுமாறு தேனி மாவட்ட தேர்தல் அலுவலர் / மாவட்ட ஆட்சித்தலைவர் க.வீ.முரளீதரன், தெரிவித்துள்ளார்.
இதே முறை தமிழ்நாடு முழுவதும் பொருந்தும்


Comments
Post a Comment