பல தமிழக மாணவ / மாணவர்களுக்கு மத்திய பல்கலைக்கழக நுழைவுத் தேர்வு அனுமதிச் சீட்டு அனுப்பப்படாததற்கு நடவடிக்கை எடுக்க உலக தமிழ் கிறித்தவ சம்மேளனம் தலைமை செய்தி தொடர்பாளர் ஜெபசிங் கோரிக்கை
மத்திய பல்கலைக்கழக நுழைவுத் தேர்வு. தமிழக மாணவ / மாணவர்களுக்கு பல பேர்க்கு அனுமதிச் சீட்டு அனுப்பப்படவில்லை. தமிழக முதல்வர் உரிய நடவடிக்கை எடுக்க உலக தமிழ் கிறித்தவ சம்மேளனம் தலைமை செய்தி தொடர்பாளர் ஜெபசிங் கோரிக்கை. மத்திய பல்கலைக்கழங்களுக்கு ஒன்றிய அரசு இந்த ஆண்டு முதல் நுழைவுத் தேர்வு மூலம் மாணவ/மாணவிகள் சேர்க்கை என தேசிய தேர்வு முகமை அறிவித்தது, இந்தியாவில் மத்திய பல்கலைக்கழக தேர்வு கடந்த ஜீலை 15 முதல் ஆகஸ்ட் 30 வரை 6 கட்டங்களாக நடைபெற்றன. ஜூலை 15 முதல் ஜூலை 20ந் தேதி வரை முதல் கட்ட தேர்வும், இரண்டாம் கட்ட தேர்வு ஆகஸ்ட் 2 முதல் 6 வரையிலும் , மூன்றாம் கட்ட தேர்வு ஆகஸ்ட் 7 முதல் 13 வரையிலும், 4ம் கட்ட தேர்வு ஆகஸ்ட் 17 முதல் 20 வரையிலும், 5 ம் கட்ட தேர்வு ஆகஸ்ட் 21 முதல் 23 வரையிலும், 6ம் கட்ட தேர்வு ஆகஸ்ட் 24 முதல் 30 வரை நடைபெறும் என அறிவித்தனர். தேர்வு அனைத்தும் கணிணி வழி மூலமே நடைபெற்றது. ஆனால் இந்தியாவில் பல்வேறு பகுதிகளில் தொழில்நுட்ப கோளாறால் பல மையங்களில் தேர்வுகள் ஒத்திவைக்கப்பட்டன. இந்திய அளவில் 14 லட்சத்து 90000 ஆயிரம் மாணவ/ மாணவிகள் விண்ணப்பித்...