Skip to main content

புஞ்சைபுளியம்பட்டியில் 75வது சுதந்திர தின பவள விழாவை முன்னிட்டு 2000 மீட்டர் நீளமுள்ள இந்திய தேசிய கொடி கையில் ஏந்தி மாணவ மாணவியர்கள் அணிவகுப்பு

புஞ்சைபுளியம்பட்டியில் 75 வது சுதந்திர தின பவள விழாவை முன்னிட்டு 2000 மீட்டர் நீளமுள்ள இந்திய தேசிய கொடி கையில் ஏந்தி மாணவ மாணவியர்கள் அணிவகுப்பு!

ஈரோடு மாவட்டம் புஞ்சை புளியம்பட்டியில் விடியல் சமூக நல அறக்கட்டளை மற்றும் அனைத்து கல்வி நிறுவனங்கள் சார்பில் இந்திய தாய் திருநாட்டின் 75 வது சுதந்திர தின பவள விழாவை முன்னிட்டு இரண்டு கிலோமீட்டர் தொலைவிற்கு 2000 மீட்டர் நீளம் கொண்ட இந்திய தேசிய கொடியை கையில் ஏந்தி மாணவ மாணவியர்கள் அணிவகுத்தனர்.

2000 மீட்டர் நீளம் கொண்ட மூவர்ண இந்திய தேசிய கொடியை ஸ்ரீ தேனு சாரீஸ் அண்ட் சில்க்ஸ் நிறுவனத்தினர் வடிவமைத்தனர். இந்நிகழ்ச்சிக்கு அம்மா மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி செயலாளர் ராணி லட்சுமி  அன்பு தலைமை தாங்கினார். விடியல் அறக்கட்டளை நிர்வாகிகள் வாணி தர்மராசு, லோகநாதன், சதீஷ்குமார், ரமேஷ் குமார், பவானிசாகர் வட்டார ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சி திட்ட தலைவர் உஷாராணி, புஞ்சைபுளியம்பட்டி போட்டோ மற்றும் வீடியோ ஒளிப்பதிவாளர்கள் சங்கத்தின் தலைவர் வேலு, செயலாளர் கணேஷ்,  இளந்தென்றல் ஆம்புலன்ஸ் டிரஸ்ட் கதிர், புஞ்சை ஸ்போர்ட்ஸ் ஸ்கேட்டிங் அகாடமி நிறுவனர் பிரபு, காந்தி கலை அறிவியல் கல்லூரி பேராசிரியர் கார்த்திகேயன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

முதல் நிகழ்வாக 75 வது சுதந்திர தின பவள விழா ஜோதியை கையில் ஏந்தி மராத்தான் ஓட்டம் நடைபெற்றது.  மராத்தான் நிகழ்வை விடியல் சமூகநல அறக்கட்டளை செயலாளர் ஜெயகாந்தன் துவக்கி வைத்தார். இந்நிகழ்ச்சியில் கெ.ஓ.ம.அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளியில் பயின்ற முதல்வர் கோப்பை வென்ற ஹாக்கி வீராங்கனைகள், மாவட்ட, மாநில அளவில் ஸ்கேட்டிங் போட்டியில் வெற்றி பெற்ற மாணவ மாணவியர்கள் மற்றும் ஒவ்வொரு கல்வி நிறுவனத்திலும் பொதுத்தேர்வு, அறிவியல் கண்காட்சி , தனித்திறன் உள்பட பல துறைகளில் சாதனை படைத்த மாணவ மாணவியர்கள்  சுதந்திர தின ஜோதியை கையில் ஏந்தி  தொடர் ஓட்டத்தில் பங்கேற்றனர். மராத்தான் ஓட்டம்  ஸ்ரீதேவி திரையரங்கம் அருகில் துவங்கி சத்தி மெயின் ரோடு, அண்ணாமலையார் கோவில் சென்று மீண்டும் பேருந்து நிலையம் வந்து முடிவடைந்து.

அதனைத் தொடர்ந்து 75 ஆவது சுதந்திர தின விழாவை சிறப்பிக்கும் வகையிலும் மாணவ மாணவர்களிடையே தேசப்பற்று, ஒருமைப்பாடு, மத நல்லிணக்கம் ஆகியவற்றை வலியுறுத்தும் வகையில் புஞ்சை புளியம்பட்டி ஸ்ரீதேவி திரையரங்கம் முதல் அண்ணாமலையார் கோவில் வரை சுமார் இரண்டு கிலோ மீட்டர் தொலைவிற்கு 2000 மீட்டர் நீளம் கொண்ட மூவர்ண இந்திய தேசிய கொடியை கையில் ஏந்தி மாணவ மாணவியர்கள் பொதுமக்கள் அணிவகுத்தனர். இந்நிகழ்ச்சியில் புஞ்சைப் புளியம்பட்டி அம்மா மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி, எஸ் ஆர் சி நினைவு மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி, மாமகரிஷி ஈஸ்வராய குருகுலம் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி, எஸ் என் ஆர் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி, சாணக்யா இன்டர்நேஷனல் பள்ளி, ஸ்பிரிங்டல்  பப்ளிக் பள்ளி, சிந்தாமணி வித்யாலயா நர்சரி & பிரைமரி பள்ளி, ஸ்ரீ அகிலா வித்யாலயா  நர்சரி & பிரைமரி பள்ளி, சிவசக்தி பிளே ஸ்கூல், காந்தி கலை மற்றும் அறிவியல் கல்லூரி காந்தி பாலிடெக்னிக் கல்லூரி ஆகியவற்றின் நிர்வாகிகள் ஆசிரியர்கள் மாணவ மாணவியர்கள், அங்கன்வாடி பணியாளர்கள், புஞ்சைபுளியம்பட்டி போட்டோ மற்றும் வீடியோ ஒளிப்பதிவாளர் நல சங்க உறுப்பினர்கள், இளந்தென்றல் ஆம்புலன்ஸ் டிரஸ்ட் உறுப்பினர்கள், புஞ்சைபுளியம்பட்டி ஸ்போர்ட்ஸ் ஸ்கேட்டிங் அகாடமி மாணவ மாணவிகள் மற்றும் பொதுமக்கள் சமூக நல ஆர்வலர்கள் உள்பட சுமார் 1500 பேர் நிகழ்ச்சியில் பங்கேற்றனர்.


சிறப்பு வாய்ந்த 75 ஆவது சுதந்திர தின விழாவை முன்னிட்டு மிக நீண்ட இந்திய தேசியக் கொடியை கையில் ஏந்தியது பெருமை மிக்க தருணம் என்றும் இந்தியன் என்பதில் பெருமிதம் கொள்வதாகவும் நிகழ்ச்சியில் பங்கேற்ற மாணவ மாணவியர்கள் மகிழ்ச்சி தெரிவித்தனர். புஞ்சைபுளியம்பட்டி காவல்துறையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர். இந்நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை விடியல் சமூக நல அறக்கட்டளை தலைவர் எஸ். ஜெயகாந்தன் தலைமையில் நிர்வாகிகள் ஒருங்கிணைத்தனர்.

வீடியோ👇
















Comments

Popular posts from this blog

தீண்டாமை கொடுமையில் இருந்து தங்களை காக்க வேண்டும் என்று தேனி கோட்டைப்பட்டி கிராம மக்கள் ஆட்சியரிடம் மனு!

தீண்டாமை கொடுமையில் இருந்து தங்களை காக்க வேண்டும் என்று தேனி கோட்டைப்பட்டி கிராம மக்கள் ஆட்சியரிடம் மனு! தேனி, மார்ச்., 07:  தீண்டாமை கொடுமையிலிருந்து மக்களை காப்பாற்றுங்கள், அரசு திட்டங்களை செயல்படுத்தவிடாமல் சாதிய வன்மத்துடன் தடுக்கும் நபர்கள் மீது நடவடிக்கை எடுங்கள் என்ற கோரிக்கையுடன் அரண்மனைபுதூர் ஊராட்சி கிராம கமிட்டி தலைவர் பாலசுந்தரராஜ் மற்றும் கோட்டைப்பட்டி கிராம பொதுமக்கள் ஆட்சியரிடம் மனு அளித்தனர். அந்த மனுவில் கூறியிருப்பதாவது:  இந்தியா நாடு சுதந்திரம் அடைந்து 75ஆண்டுகளுக்கு மேலாகியும், தீண்டாமை கொடுமை தலைவிரித்தாடுகிறது. தேனி மாவட்டம், தேனி வட்டம், அரண்மனை புதூர் ஊராட்சிக்குட்பட்ட கோட்டைப்பட்டி கிராமத்தில் ஜாதிய தீண்டாமை கொடுமை நடைபெறுகிறது. இங்கு வாழும் பட்டியல் பிரிவிலுள்ள தேவேந்திரகுல வேளாளர் சமூக மக்களுக்கு கிடைக்கக்கூடிய அடிப்படைவசதி திட்டங்களை தடுத்து வருகிறார்கள். கோட்டைப்பட்டி கிராமத்தில் வாழும் ராஜகம்பளத்து நாயக்கர் சமுதாயத்தைச்சேர்ந்த தங்கப்பாண்டி, சுந்தரவடிவேல், செல்வம் உட்பட பத்துபேர்கள் கொண்ட கும்பல் சேர்ந்து தேவேந்திரகுல வேளாளர் மக்கள் பொருளாதார ரீதிய...

காரைக்குடி சம்பவம்; அரசு ஊழியர்கள் கொதிப்பு!

காரைக்குடி சம்பவம்; அரசு ஊழியர்கள் கொதிப்பு! சிவகங்கை மாவட்டம், காரைக்குடி இராமசாமி தமிழ்க்கல்லூரியில் முத்துமாரி என்பவர் அலுவலக உதவியாளராகப் பணிபுரிந்து வருகிறார்.  நேற்று அவரை, கல்லூரி வளாகத்திற்கு உள்ளே வைத்து, கல்லூரியில் பணிபுரியும் தற்காலிக காவலர் பழனியப்பன் ஆபாசமாகப் பேசி, கொலைவெறித் தாக்குதல் நடத்தியதாக கூறப்படுகிறது. படுகாயம் அடைந்த அவர் மருத்துவமனையில் சிகிச்சைக்கு சேர்க்கப்பட்டுள்ளார்.  இதுகுறித்து அரசு ஊழியர்கள் சங்கம் சிவகங்கை மாவட்ட மையம் விடுத்துள்ள கண்டன அறிக்கையில்: சிவகங்கை மாவட்டம், காரைக்குடி ராமசாமி தமிழ்க்கல்லூரியில் அலுவலக உதவியாளராகப் பணிபுரியும் முத்துமாரி என்பவரை, கல்லூரி வளாகத்திற்கு உள்ளே வைத்து, ஆபாசமாகப் பேசி, கொலைவெறித் தாக்குதல் நடத்திய கொடுஞ்செயலை தமிழ்நாடு அரசு ஊழியர்கள் சங்கம் சிவகங்கை மாவட்ட மையம் வன்மையாக கண்டிக்கிறது. இக்கொடுஞ்செயலில் ஈடுபட்ட கல்லூரியில் பணிபுரியும் தற்காலிக காவலர் பழனியப்பன் என்பவரையும்,அதற்கு தூண்டுகோலாய் இருந்த கல்லூரியின் பொறுப்பு முதல்வர் நாகநாதனையும் வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின்கீழ் கொலைமுயற்சி, வழக்குப் பதிவுசெய்த...

தனித்தன்மையை இழந்து புள்ளி விபரம் கோரும் துறையாக மாறி வரும் கருவூலத்துறை!

தனித்தன்மையை இழந்து புள்ளி விபரம் கோரும் துறையாக மாறி வரும் கருவூலத்துறை!  தமிழ்நாடு கருவூல கணக்குத்துறை அலுவலர் சங்கம் வேதனை!! சென்னை: தமிழ்நாடு கருவூல கணக்குத்துறை அலுவலர் சங்க மாநிலத்தலைவர் ஜெ.மூர்த்தி மற்றும் பொதுச் செயலாளர் வெ.லெனின் ஆகியோர் கூட்டாக வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:               கருவூலத்துறையில் தற்போது கிட்டத்தட்ட 1600 க்கும் மேற்பட்ட பணியிடங்கள் காலியாக இருக்கும் சூழ்நிலையில் குறிப்பாக இந்த காலிப்பணியிடங்கள் மாவட்ட மற்றும் சார்நிலைக்கருவூலங்களில் அதிகமாக இருக்கும் நிலையில் தொடர்ச்சியாக தலைமை அலுவலகத்தின் வெவ்வேறு பிரிவுகளில் இருந்து பல்வேறு வகையான புள்ளி விபரங்கள் கோரப்படுவதோடு IFHRMSல் தரவுகளை மீண்டும் மீண்டும் பதிவேற்றம் செய்யவும் உயர் அலுவலர்களால் நெருக்கடி தரப்படுகிறது. கோரப்படுகின்ற புள்ளி விவரங்கள் அனைத்தும் 100% பணம் பெற்று வழங்கும் அலுவலர்களிடம் இருந்து பெறவேண்டிய தகவல்களாகும். ஒரு விபரம் முழுமை பெறுவதற்குள் அடுத்தடுத்த புள்ளி விபரங்கள் கோரப்படுவதால் பணம் பெற்று வழங்கும் அலுவலர்களுக்கும் கருவூல ஊழியர்கள...