தமிழக கிறித்தவ திருச்சபை மக்கள் அரசுக்கு ஆன்லைன் சூதாட்டத்தை தடை செய்ய வேண்டி கருத்துக்களை பதிவு செய்ய உலக தமிழ் கிறித்தவ சம்மேளனம் தலைமை செய்தி தொடர்பாளர் ஜெபசிங் வேண்டுகோள்!
தமிழக கிறித்தவ திருச்சபை மக்கள் அரசுக்கு ஆன்லைன் சூதாட்டத்தை தடை செய்ய வேண்டி கருத்துக்களை பதிவு செய்ய உலக தமிழ் கிறித்தவ சம்மேளனம் தலைமை செய்தி தொடர்பாளர் ஜெபசிங் வேண்டுகோள்!
தமிழக கிறித்தவ திருச்சபை மக்கள் அனைவரும் ஆன்லைன் சூதாட்டத்தை தடை செய்ய வேண்டி கருத்துக்களை பதிவு செய்ய உலக தமிழ் கிறித்தவ சம்மேளனம் தலைமை செய்தி தொடர்பாளர் ஜெபசிங் வேண்டுகோள்.
உலக தமிழ் கிறித்தவ சம்மேளனம் தலைமை செய்தி தொடர்பாளர் ஜெபசிங் அறிக்கையில் கூறியிருப்பதாவது.
தமிழகத்தில் ஆன்லைன் சூதாட்டத்தால் பல்வேறு தரப்பட்ட மக்கள் குறிப்பாக மாணவர்கள், இளைஞர்கள், அரசு ஊழியர்கள் பணத்தை இழந்து இதுவரை 28 பேருக்கு மேல் பாதிக்கப்பட்டு உயிர் இழந்து உள்ளனர்.
ஆன்லைன் சூதாட்டத்தை தடைசெய்ய தொடர்ந்து பல்வேறு அரசியல் கட்சிகள், பொது நல இயக்கங்கள் , பொதுமக்கள் மற்றும் உலக தமிழ் கிறித்தவ சம்மேளனம் தொடர்ந்து அரசுக்கு கோரிக்கை வைத்துள்ளனர்.
தமிழக அரசு சார்பாக ஆன்லைன் சூதாட்டத்தை தடைசெய்ய / ஒழுங்குபடுத்த தொடர்பாக கருத்துக்களை பகிர விரும்பும் பொதுமக்கள், பெற்றோர், ஆசிரியர்கள், மாணவர் மாணவிகள், சமூக ஆர்வலர்கள் தங்களது கருத்துக்களை தெரிவிக்க homesec@tn.gov.in என்ற மின் அஞ்சல் முகவரிக்கு 12.8.2022க்குள் தெரிவிக்க அரசு வேண்டுகோள் விடுத்துள்ளது.
எனவே தமிழகத்தில் உள்ள கிறித்தவ மக்கள் அனைவரும் இளைஞர்களையும், மாணவர்களையும், தவறான வழியில் மூளைச்சலவை செய்து, அதிக ஆசையை பொது மக்களிடம் தூண்டும் விதமாக விளம்பரங்கள் செய்து தீய வழியில் கொண்டு சென்று தங்களது வாழ்க்கையையே அழிவுப் பாதைக்கு கொண்டு சென்று இறுதியில் உயிரை மாய்க்கும் சூழ்நிலைக்கு தள்ளப்படும் ஆன்லைன் விளையாட்டை முற்றிலுமாக தடை செய்யப்பட வேண்டும் என்று தமிழக ஓட்டு மொத்த கிறித்தவ மக்கள் அனைவரும் தங்கள் கருத்துக்களை 12ந் தேதிக்குள் பதிவு செய்ய வேண்டும் என அறிக்கையில் கூறியுள்ளார்.


Don'inthe
ReplyDeleteRummy vendam and add close pannunke delete this add actor sarathkumar video and other actors videl
ReplyDelete