தேனி பூதிபுரம் ஶ்ரீநஞ்சுண்டேஸ்வரர் கோவில் அஷ்டபந்தன மஹா கும்பாபிஷேக விழா!
சிறப்புச் செய்தியாளர்
சரவணன்..
தேனி அருகே பூதிபுரத்தில் 300 ஆண்டுகள் பழமையான ஶ்ரீநஞ்சுண்டேஸ்வரர் கோவில் அஷ்டபந்தன மஹா கும்பாபிஷேக விழா, வெகு விமர்சையாக நடைபெற்றது. 1000 த்திற்கும் மேற்பட்ட பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம்..
உடன் பரிவார தெய்வங்களான ஶ்ரீஆதிபராசக்தி உடனுறை, ஶ்ரீசெல்வவிநாயகர், ஶ்ரீவள்ளி தெய்வானை சமேத சுப்ரமணியர், ஶ்ரீசப்தகன்னிமார், ஶ்ரீகாலபைரவர், நவகிரகங்கள் உள்ளிட்ட பரிவார தெய்வங்களுக்கும் கும்பாபிஷேகம் செய்யபட்டது.
மூன்று நாள் திருவிழாவாக நடைபெற்ற இந்த அஷ்டபந்தன மஹா கும்பாபிஷேக திருவிழாவில் மூன்றாம் நாள் அதிகாலை பூஜையான கணபதி ஹோமம், கோபூஜை நடத்தபட்டு பின்னர் சாஸ்திரிகள் சார்பாக யாகம் வளர்க்கபட்டு தொடர்ந்து கோபுரங்களின் கலசங்களுக்கு 108 புண்ணியதீர்த்தங்களில் இருந்து கொண்டு வரபட்ட புனிதநீர் சாஸ்திரிகளால் கலசங்களுக்கு ஊற்றபட்டது. பின்னர் பக்தர்கள் மேல் புனித நீர் தெளிக்கபட்டது. இந்த கும்பாபிஷேக பெருவிழா நிகழ்ச்சியில் 1000 த்திற்கும் மேற்பட்ட பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.




Comments
Post a Comment