தாமரை குளத்தில் ஜடா முனீஸ்வரர் கோயில் கும்பாபிஷேகம் மற்றும் அன்னதானம்!
தேனி மாவட்டம் தாமரைக் குளம் பேரூராட்சிக்கு உட்பட்ட தாமரை குளத்தில் ஜடா முனீஸ்வரர் கோயில் கும்பாபிஷேகம் அன்னதானம் நடைபெற்றது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு முனீஸ்வரன் தரிசனம் பெற்றுச் சென்றனர். இதில் குறிப்பாக ஜடா முனிஸ்வரர் பூசாரி பாண்டி வெள்ளி, செவ்வாய் கிழமைகளில் அருள்வாக்கு கூறுவார். இதில் ஏராளமானவர்கள் பயன் பெற்று வருகின்றனர். தாங்கள் தங்களின் குறைகளை பூசாரியிடம் அருள்வாக்கு கொடுக்கும் போது கூறுகின்றனர். அவர்கள் குறைகள் நிவர்த்தி அடைவதாக பெண்களும்' குடும்பத்தினரும் கூறுகின்றனர். எனவே ஜடா முனீஸ்வரரை பக்தியோடு வணங்கி வருகின்றனர்.
ஆலயம் எழுப்பி ஏழு வருடங்கள் ஆகிறது. இந்த பூசாரியின் தந்தை பெரியசாமி, எட்டு தலைமுறையாக அந்த ஊரில் வசித்து வருகிறார். வெள்ளைக் கரட்டான் முனியாண்டி கோயிலில் பூசாரியாக இருந்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த ஜடாமுனிஸ்வரர் கோயிலில் கார்த்திகை மாதம் விழா சிறப்பாக நடைபெறும். இந்த ஜடாமுனிஸ்வரருக்கு பொதுமக்கள் சுருட்டு, கோழி, ஆடு போன்றவைகளை நேர்த்திக்கடனாக செலுத்துகின்றனர். அவ்வாறு வரும் கோழி ஆடுகளை பொது மக்களுக்கு அன்னதானம் வழங்குகின்றனர்.
ஜடாமுனிஸ்வரன் அருளை பெறுவதற்காக அருகில் உள்ள கிராமத்தினர் வெள்ளி செவ்வாய் அன்று பூஜை செய்வதற்கு வருவதுண்டு. ஆகவே நாம் சென்று விசாரித்ததில் பலதரப்பட்ட மக்கள் தங்களது குறைகளை ஜடாமுனிஸ்வரனிடம் விட்டுச் செல்வதாக கூறினர். அவரும் அதை நிறைவேற்றி தருவதாக நம்புகின்றனர்.
-கலாம் சரவணன்



ஜடாமுனிஸ்வரன் அருள் கிடைக்க வேண்டும்
ReplyDelete