தேனியில் தமிழ்நாடு கலை இலக்கிய பெருமன்றத்தின் மாவட்ட மாநாடு!
தேனியில் தமிழ்நாடு கலை இலக்கிய பெருமன்றத்தின் தேனி மாவட்ட மாநாடு செப்டம்பர் 16 அன்று சென்ட் டெக்ட் வளாகத்தில் நடைபெற்றது. சென்ட் டெக்ட் இயக்குனர் முனைவர் பச்சை மால் தலைமையில் நடைபெற்ற இந்த மாநாட்டில் நாட்டுப்புற கலைகளை நினைவு கூறும் வகையில் கலை நிகழ்ச்சியுடன் இனிதே துவங்கியது. மாநாட்டில் பரிசளிப்பு விழா மற்றும் புத்தக வெளியீட்டு விழா கலை இலக்கிய மன்ற பொறுப்பாளர் பழனிச்சாமி தலைமையில் நடைபெற்றது.
இந்த நிகழ்வில் சிறப்பு விருந்தினராக வழக்கறிஞர் எம்.கே.எம் முத்துராமலிங்கம் கலந்து கொண்டார். அவருடன் கவிஞர் ஞானபாரதி, வழக்கறிஞர் பாலமுருகன் மற்றும் நாட்டுப்புற இசை கலைஞர்கள், பரதநாட்டிய மாணவிகள், தெம்மாங்கு பாடகர்கள், அரசியல் பிரமுகர்கள் சமூக ஆர்வலர்கள் அரசு ஊழியர்கள் ஆகியோர் கலந்து கொண்டனர்.
மாநாட்டில் சிறந்த சாதனையாளர்களுக்கு பரிசளிப்பு நிகழ்வு நடைபெற்றது. இந்த மாநாட்டில் நூற்றுக்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர். அனைவருக்கும் அறுசுவை மதிய உணவு பரிமாறப்பட்டது. மாநாட்டு ஏற்பாடுகளை மன்ற பொறுப்பாளர் பழனிச்சாமி சிறப்பாக செய்திருந்தார்.



Comments
Post a Comment