பாரதப் பிரதமர் நரேந்திர மோடியைப் பற்றி பொய்யான தகவல்களை சிலர் பரப்பி வருவதாக பிஜேபி கட்சியின் தேனி நகர தலைவர் இன்று மாலை தேனி காவல் நிலையத்தில் புகார்.
தேனி காவல் நிலையத்திற்கு இன்று மாலை பிஜேபி கட்சியின் தேனி நகர தலைவர் மதிவாணன் தலைமையிலான பிஜேபி கட்சியினர் புகார் மனு ஒன்று வழங்க வந்தனர்.
அப்போது இன்று மாலை தேனி பழைய பேருந்து நிலையத்தில் மதுரையைச் சேர்ந்த வழக்கறிஞர்கள் நந்தினி ஆனந்தன் மற்றும் நிரஞ்சனா ஆகிய இருவரும் சேர்ந்து,
காவல் துறையிடம் அனுமதி வாங்காமலும், பொது அமைதிக்கு பங்கம் விளைவிக்கும் வகையிலும் பாரதப் பிரதமர் நரேந்திர மோடியின் பெயருக்கும், புகழுக்கும் களங்கம் விளைவிக்கும் வகையில் உண்மைக்கு புறம்பான தகவல்களை தொடர்ந்து பேசி, அவதூறு பரப்பி வருகின்றனர்.
இதனால் தேச ஒற்றுமைக்கு ஆபத்து ஏற்படுத்தும் வகையில் செயல்பட்டு வரும் மேற்படி நந்தினி ஆனந்தன் மற்றும் நிரஞ்சனா ஆகியோர் மீது தக்க நடவடிக்கை எடுக்குமாறு வலியுறுத்தினர்.
இதனை அடுத்து புகார் மனுவினை தேனி காவல் நிலையத்தில் வழங்கினர்.
செய்தி & புகைப்படம்
கலாம் சரவணன்







Comments
Post a Comment