👉 ATM கார்டு இல்லாமல்.. ATM-யில் பணம் எடுக்க முடியுமா? ஒரு சின்ன ட்ரிக்ஸ்...!!
👇 ATM கார்ட் இல்லாமல் போன் மூலம் நொடியில் பணம் எடுக்கலாம்..!
_🏧 பஸ் டிக்கெட் வாங்குவது முதல் மளிகை கடைக்கு சென்று பொருள் வாங்குவது வரை பணப்புழக்கம் அதிகம் இருந்த காலத்திலிருந்து சற்று விலகி தற்போது எங்கு சென்றாலும், என்ன வாங்கினாலும் பணப் பரிவர்த்தனை என்பது மிக எளிதாக மாறிவிட்டது._
🏧 இன்றைய டிஜிட்டல் யுகத்தில் கொடுக்கல், வாங்கல் என பணப் பரிவர்த்தனை அனைத்தும் டிஜிட்டல் மயமாகி உள்ளது. யுபிஐ மூலம் நொடி பொழுதில் ஒருவருக்கொருவர் பணம் அனுப்பியும், பெற்றும் வருகிறோம்.
🏧 இருந்தாலும் ஒரு சில இடங்களில், சில நேரங்களில் பணம் ரொக்கமாக தேவைப்படும். அது மாதிரியான சமயங்களில் ஏடிஎம் கார்டின் தேவை இருக்கிறது.
_🏧 நம்மிடம்தான் செல்போன் இருக்கிறதே... செல்போன் இருக்கும் தைரியத்தில் பணமும், கார்டுகளும் நம் கையில் இருக்க வேண்டும் என்ற எண்ணம் நமக்கு வருவதே இல்லை.
🏧 இந்த மாதிரி இக்கட்டான சூழ்நிலையில் நாம் அனைவரும் சிக்கியிருப்போம். பலர் கடந்தும் வந்திருப்போம். டிஜிட்டல் கட்டண முறைகள் எவ்வளவுதான் மேம்படுத்தப்பட்டு வந்தாலும், ஏடிஎம்-ல் பணம் எடுக்கும் தேவை இன்னும் குறையவில்லை.
🏧 இத்தகைய சூழலில் யுபிஐ மூலம் ஏடிஎம் இயந்திரங்களில் பணம் எடுக்க முடிந்தால் எவ்வளவு வசதியாக இருக்கும்!
🏧 ஆம் அப்படி ஒரு வசதியை தான் இந்த பதிவில் நாம் பார்க்க இருக்கிறோம.
🏧 ஏடிஎம் இயந்திரங்களில் பணம் எடுக்கும் போது 'Cardless Withdrawal' என இருப்பதை பார்த்திருப்போம். ஆனால், அதை பெரும்பாலும் பயன்படுத்தி இருக்க வாய்ப்பில்லை. கடந்த ஆண்டு இந்த அம்சத்தை இந்திய ரிசர்வ் வங்கி அறிமுகம் செய்தது. யுபிஐ சேவையை வழங்கி வரும் நேஷனல் பேமெண்ட்ஸ் கார்ப்பரேஷன் ஆப் இந்தியா இதனை செயல்படுத்தி வருகிறது. Interoperable Cardless Cash Withdrawal (ICCW) என இந்த அம்சம் அறியப்படுகிறது.
🏧 இதன் மூலம் டெபிட் கார்டுகள் இல்லாமல் ஏடிஎம் இயந்திரங்களில் பயனர்கள் பணம் எடுக்கலாம். இந்த அம்சத்தை செயல்படுத்துமாறு வங்கிகளுக்கு ரிசர்வ் வங்கி வலியுறுத்தி உள்ளது. இதன் மூலம் கார்டுகளை கொண்டு நடைபெறும் மோசடிகளை தடுக்க முடியும் எனவும் ரிசர்வ் வங்கி நம்புகிறது.
_🏧 யுபிஐ சேவையை வழங்கி வரும் கூகுள் பே, போன் பே, பேடிஎம், பாரத் பே போன்ற மொபைல் செயலிகள் மூலமாகவும் பயனர்கள் ஏடிஎம் இயந்திரங்களில் பணம் எடுக்கலாம். பல்வேறு வங்கிகள் மற்றும் ஒயிட் லேபிள் ஏடிஎம் மையங்களில் இது செயல்பாட்டில் உள்ளது.
🏧 ஏடிஎம் பின் இல்லாமல் பணத்தை எடுக்க முடியும். இதற்கு ஏடிஎம் கார்டு அருகில் இருக்க வேண்டிய அவசியமில்லை.
ஏடிஎம் கார்டு இல்லாமல் பணத்தை எடுப்பது எப்படி?
👉 முதலில் ATM இயந்திரத்தைப் பார்வையிடவும். அதன் பிறகு 'பணத்தை பெறு' (Withdraw Cash) விருப்பத்தைத் தேர்ந்தெடுக்கவும்.
👉 பின்னர் UPI பேமெண்ட் விருப்பத்தைத் தேர்ந்தெடுக்கவும்.
👉 பின் உங்கள் ATM திரையில் QR குறியீடு காட்டப்படும்.
👉 இதற்குப் பிறகு, போனில் UPI ஆப் திறந்து, QR குறியீட்டை ஸ்கேன் செய்ய வேண்டும்.
👉 பின் திரும்பப் பெற வேண்டிய தொகையை உள்ளிடவும். இந்த வழியில், நீங்கள் அதிகபட்சமாக 5,000 ரூபாய் எடுக்க முடியும்.
👉 இதற்குப் பிறகு UPI பின்னை உள்ளிட வேண்டும். பின்னர் 'ஹிட் ப்ரோசீட்' பட்டனைத் தட்டவும்.
👉 இதற்குப் பிறகு நீங்கள் பணத்தைப் பெறுவீர்கள்.
குறிப்பு:
🏧 UPIலிருந்து பணம் எடுப்பதற்கு கூடுதல் கட்டணம் ஏதும் இப்போதைக்கு வங்கி தரப்பில் வசூலிக்கப்படவில்லை. ஆனாலும் வழக்கமாக ஏடிஎம் கார்டுகளுக்கு உள்ள கட்டணங்கள் இதற்கும் பொருந்தும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
🏧 அதாவது, பயனர்கள் கணக்கு வைத்துள்ள வங்கிகளின் ஏடிஎம்களில் மாதத்திற்கு 5 முறை மற்றும் பிற வங்கி ஏடிஎம்களில் மாதத்திற்கு 3 முறையும் இலவசமாக பணம் எடுக்கலாம். அதற்கு மேல் பரிவர்த்தனை மேற்கொண்டால் ரூ.21 கட்டணமாக வசூலிக்கப்படும். இது யுபிஐ மூலம் ஏடிஎம்-ல் பணம் எடுப்பதற்கும் பொருந்தும்.
🏧 கார்டு இல்லாமல் ICCW பரிவர்த்தனைகள் மேற்கொண்டாலும், ஏடிஎம்-ல் பணம் எடுப்பதற்கு என்ன விதிமுறைகள் இருக்கிறதோ, அதே விதிமுறைகள் தான் இதற்கும் பொருந்தும்.
_🏧 ஒரு நபரின் கணக்கில் எவ்வளவு தொகை அதிகபட்சமாக எடுக்க முடியும் என்ற வரம்பும் கார்டு இல்லாமல் பணம் எடுப்பதற்கும் பொருந்தும். அதுமட்டுமல்லாமல் பணம் எடுப்பது தோல்வியடைந்தால் கணக்கிலிருந்து பணம் எடுக்கப்பட்டு, ஆனால் ஏடிஎம்-ல் பணம் கிடைக்கவில்லை என்றால், அதற்கும் ஏற்கனவே உள்ள வங்கி விதிகளின் படி, குறிப்பிட்ட நாட்களுக்குள் கணக்கிற்கு பணம் செலுத்தப்படும்.
நன்றி.. பிரவின் குமார் ..




6379292856
ReplyDelete