இலங்கையில் கடலில் குளித்த திருநெல்வேலி இளைஞர் மரணம். உடலை நெல்லைக்கு கொண்டு வர அமைச்சர் செஞ்சி மஸ்தான் உறுதி!
இலங்கையில் கடலில் குளித்த திருநெல்வேலி இளைஞர் மரணம்.. உடலை நெல்லைக்கு கொண்டு வர அமைச்சர் செஞ்சி மஸ்தான் உறுதி!
அமைச்சருக்கு கிறித்தவ அமைப்பின் தலைவர்கள் நன்றி.
நெல்லை, மே, 18:
இலங்கையில் மரணம் அடைந்த ஜெயசூர்யாவின் தந்தை கஸ்தூரி ரெங்கன், கிறித்தவ அமைப்புகளின் பிரதிநிதிகள் செ.சா. ஜெபசிங், தென்னிந்திய திருச்சபை ஆயர் கிப்ஸன் ஜான்தாஸ், இரட்சணீய சேனை மக்கள் தொடர்பு அலுவலர் மேஜர் சீனிவாசன், ஆகியோரை சந்தித்து ஜெயசூர்யா உடலை விரைந்து தமிழ்நாடு கொண்டு வர வேண்டி நடவடிக்கை எடுக்க கோரிக்கை வைத்தார்.
சிறுபான்மையினர் நலன் மற்றும் வெளிநாடு வாழ் தமிழர்கள் நலத்துறை அமைச்சர் செஞ்சி மஸ்தானை சந்தித்த பின் செய்தியாளர்களை சந்தித்த சமூக செயற்பாட்டாளர் ஜெபசிங் தெரிவித்ததாவது.
திருநெல்வேலி மாவட்டம் பேட்டை பகுதியை சேர்ந்தவர் கஸ்தூரி ரெங்கன். இவர் திருவேங்கடநாதபுரம் கோவிலில் கணக்காளராக பணிபுரிந்து வருகிறார். பெங்களூர் ஐடியில் பணிபுரிந்து வரும் அவருடைய மகன் ஜெயசூர்யா (25) மற்றும் அவருடைய நண்பர்கள் இணைந்து இலங்கை நாட்டுக்கு சுற்றுலா சென்ற சமயத்தில் கடலில் குளித்தபோது அலையில் சிக்கி ஜெயசூர்யா மரணம் அடைந்தார். அவருடைய உடலை தமிழ் நாட்டிற்கு கொண்டு வர சிறுபான்மையினர் நலன் மற்றும் வெளிநாடு வாழ் தமிழர்கள் நலத்துறை அமைச்சர் செஞ்சி மஸ்தானை நேரில் சந்தித்து கோரிக்கை வைத்தோம். அமைச்சர் உயர் அதிகாரிகளை தொடர்பு கொண்டு தூதரகம் மூலம் உடனடியாக ஜெயசூர்யாவின் உடலை கொண்டு வர அனைத்து முயற்சிகளையும் மேற்கொண்டார்.
ஜெயசூர்யா உடலை நெல்லை கொண்டு வரும் அனைத்து செலவுகளையும் அரசே ஏற்றுக்கொள்ளும் என உறுதி அளித்தார். உடன் பாளையங்கோட்டை சட்டமன்ற உறுப்பினர் அப்துல்வகாப் ஜெயசூர்யா உடலை விரைந்து கொண்டு வர அனைத்து ஏற்பாடுகளையும் உடனடியாக செய்ய அமைச்சரிடம் வலியுறுத்தி கூறினார். செஞ்சி மஸ்தான், சட்டமன்ற உறுப்பினர் அப்துல்வகாப் ஆகியோர்க்கு ஜெயசூர்யாவின் தந்தை கஸ்தூரி ரெங்கன் மற்றும் உறவினர்கள், கிறித்தவ அமைப்பின் தலைவர்கள் நன்றி தெரிவித்துக் கொண்டனர் என கூறினார்.

Comments
Post a Comment