Skip to main content

கோயிலுக்கு சொந்தமான வீட்டுக்கு வாடகை செலுத்தாததால் வீடு மீட்கப்பட்டு சீல் வைப்பு!

ஆண்டிபட்டியில் மீனாட்சியம்மன் கோயிலுக்கு சொந்தமான வீட்டுக்கு வாடகை செலுத்தாததால் வீடு மீட்கப்பட்டு சீல் வைப்பு!

ஆண்டிபட்டி, நவ., 29:

தேனி மாவட்டம் ஆண்டிபட்டி கடைவீதியில் பல நூற்றாண்டுகளுக்கு முந்தைய மீனாட்சி சுந்தரேஸ்வரர் கோவில் உள்ளது. இந்த கோவிலுக்கு சொந்தமாக பல ஏக்கர் விவசாய நிலங்களும், ஆண்டிபட்டியை ஒட்டிய பல இடங்களில் வீடுகள், கடைகள், உள்ளிட்டவைகளும் அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் உள்ளது .

இந்நிலையில் தமிழக அரசு இந்து சமய அறநிலையத்துறை மூலம் தமிழக முழுவதும் உள்ள கோயில்களில் புனரமைப்பு பணிகள் மேற்கொண்டு, பல நூறு கோவில்களில் கும்பாபிஷேகம் நடத்தி வருகிறது. மேலும் இந்து சமய அறநிலையத் துறை கட்டுப்பாட்டில் உள்ள நிலம் மற்றும் இடங்களுக்கு முறையான வாடகை வசூல் செய்ய வேண்டும் என்றும் ஆக்கிரமிப்புகளை அகற்றும் நடவடிக்கைகளும் மேற்கொண்டு வருகிறது.

 இந்நிலையில் தேனி மாவட்டம் ஆண்டிபட்டியில் உள்ள மீனாட்சி சுந்தரேஸ்வரர் கோவிலுக்கு சொந்தமான ரயில்வே பீடர் ரோட்டில், மேற்கு பகுதியில் 50 லட்சம் மதிப்பிலான மூன்று சென்ட் இடம் உள்ள வீட்டில் தனியார் ஒருவர் வசித்து வந்தார். அவர் கடந்த பல வருடங்களாக வாடகை செலுத்தாத காரணத்தினால், மதுரை உயர்நீதிமன்ற உத்தரவின் அடிப்படையில், திண்டுக்கல் அறநிலையத்துறை இணை ஆணையர் அறிவுறுத்தலின்படி, தேனி உதவி ஆணையர் ஜெயதேவி முன்னிலையில் , நேற்று அந்த வீட்டிற்கு சென்று சீல் வைத்து சுவாதீனம் எடுக்கப்பட்டது. இந்த நிகழ்வின் போது செயல் அலுவலர் ஹரிஷ் குமார், அறநிலையத்துறை நில அளவை தாசில்தார் சுருளி, இன்ஸ்பெக்டர் தனலட்சுமி மற்றும் காவல் துறையினர், மின்சாரத்துறையினர்,தீயணைப்புத் துறையினர், வருவாய்த்துறையினர் ஆகியோரின் பாதுகாப்புடன் அந்த வீடு மீனாட்சி அம்மன் கோவிலுக்கு சுவாதீனம் எடுக்கப்பட்டதாக அறிவிக்கப்பட்டது. 



Comments

Popular posts from this blog

தீண்டாமை கொடுமையில் இருந்து தங்களை காக்க வேண்டும் என்று தேனி கோட்டைப்பட்டி கிராம மக்கள் ஆட்சியரிடம் மனு!

தீண்டாமை கொடுமையில் இருந்து தங்களை காக்க வேண்டும் என்று தேனி கோட்டைப்பட்டி கிராம மக்கள் ஆட்சியரிடம் மனு! தேனி, மார்ச்., 07:  தீண்டாமை கொடுமையிலிருந்து மக்களை காப்பாற்றுங்கள், அரசு திட்டங்களை செயல்படுத்தவிடாமல் சாதிய வன்மத்துடன் தடுக்கும் நபர்கள் மீது நடவடிக்கை எடுங்கள் என்ற கோரிக்கையுடன் அரண்மனைபுதூர் ஊராட்சி கிராம கமிட்டி தலைவர் பாலசுந்தரராஜ் மற்றும் கோட்டைப்பட்டி கிராம பொதுமக்கள் ஆட்சியரிடம் மனு அளித்தனர். அந்த மனுவில் கூறியிருப்பதாவது:  இந்தியா நாடு சுதந்திரம் அடைந்து 75ஆண்டுகளுக்கு மேலாகியும், தீண்டாமை கொடுமை தலைவிரித்தாடுகிறது. தேனி மாவட்டம், தேனி வட்டம், அரண்மனை புதூர் ஊராட்சிக்குட்பட்ட கோட்டைப்பட்டி கிராமத்தில் ஜாதிய தீண்டாமை கொடுமை நடைபெறுகிறது. இங்கு வாழும் பட்டியல் பிரிவிலுள்ள தேவேந்திரகுல வேளாளர் சமூக மக்களுக்கு கிடைக்கக்கூடிய அடிப்படைவசதி திட்டங்களை தடுத்து வருகிறார்கள். கோட்டைப்பட்டி கிராமத்தில் வாழும் ராஜகம்பளத்து நாயக்கர் சமுதாயத்தைச்சேர்ந்த தங்கப்பாண்டி, சுந்தரவடிவேல், செல்வம் உட்பட பத்துபேர்கள் கொண்ட கும்பல் சேர்ந்து தேவேந்திரகுல வேளாளர் மக்கள் பொருளாதார ரீதிய...

காரைக்குடி சம்பவம்; அரசு ஊழியர்கள் கொதிப்பு!

காரைக்குடி சம்பவம்; அரசு ஊழியர்கள் கொதிப்பு! சிவகங்கை மாவட்டம், காரைக்குடி இராமசாமி தமிழ்க்கல்லூரியில் முத்துமாரி என்பவர் அலுவலக உதவியாளராகப் பணிபுரிந்து வருகிறார்.  நேற்று அவரை, கல்லூரி வளாகத்திற்கு உள்ளே வைத்து, கல்லூரியில் பணிபுரியும் தற்காலிக காவலர் பழனியப்பன் ஆபாசமாகப் பேசி, கொலைவெறித் தாக்குதல் நடத்தியதாக கூறப்படுகிறது. படுகாயம் அடைந்த அவர் மருத்துவமனையில் சிகிச்சைக்கு சேர்க்கப்பட்டுள்ளார்.  இதுகுறித்து அரசு ஊழியர்கள் சங்கம் சிவகங்கை மாவட்ட மையம் விடுத்துள்ள கண்டன அறிக்கையில்: சிவகங்கை மாவட்டம், காரைக்குடி ராமசாமி தமிழ்க்கல்லூரியில் அலுவலக உதவியாளராகப் பணிபுரியும் முத்துமாரி என்பவரை, கல்லூரி வளாகத்திற்கு உள்ளே வைத்து, ஆபாசமாகப் பேசி, கொலைவெறித் தாக்குதல் நடத்திய கொடுஞ்செயலை தமிழ்நாடு அரசு ஊழியர்கள் சங்கம் சிவகங்கை மாவட்ட மையம் வன்மையாக கண்டிக்கிறது. இக்கொடுஞ்செயலில் ஈடுபட்ட கல்லூரியில் பணிபுரியும் தற்காலிக காவலர் பழனியப்பன் என்பவரையும்,அதற்கு தூண்டுகோலாய் இருந்த கல்லூரியின் பொறுப்பு முதல்வர் நாகநாதனையும் வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின்கீழ் கொலைமுயற்சி, வழக்குப் பதிவுசெய்த...

தனித்தன்மையை இழந்து புள்ளி விபரம் கோரும் துறையாக மாறி வரும் கருவூலத்துறை!

தனித்தன்மையை இழந்து புள்ளி விபரம் கோரும் துறையாக மாறி வரும் கருவூலத்துறை!  தமிழ்நாடு கருவூல கணக்குத்துறை அலுவலர் சங்கம் வேதனை!! சென்னை: தமிழ்நாடு கருவூல கணக்குத்துறை அலுவலர் சங்க மாநிலத்தலைவர் ஜெ.மூர்த்தி மற்றும் பொதுச் செயலாளர் வெ.லெனின் ஆகியோர் கூட்டாக வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:               கருவூலத்துறையில் தற்போது கிட்டத்தட்ட 1600 க்கும் மேற்பட்ட பணியிடங்கள் காலியாக இருக்கும் சூழ்நிலையில் குறிப்பாக இந்த காலிப்பணியிடங்கள் மாவட்ட மற்றும் சார்நிலைக்கருவூலங்களில் அதிகமாக இருக்கும் நிலையில் தொடர்ச்சியாக தலைமை அலுவலகத்தின் வெவ்வேறு பிரிவுகளில் இருந்து பல்வேறு வகையான புள்ளி விபரங்கள் கோரப்படுவதோடு IFHRMSல் தரவுகளை மீண்டும் மீண்டும் பதிவேற்றம் செய்யவும் உயர் அலுவலர்களால் நெருக்கடி தரப்படுகிறது. கோரப்படுகின்ற புள்ளி விவரங்கள் அனைத்தும் 100% பணம் பெற்று வழங்கும் அலுவலர்களிடம் இருந்து பெறவேண்டிய தகவல்களாகும். ஒரு விபரம் முழுமை பெறுவதற்குள் அடுத்தடுத்த புள்ளி விபரங்கள் கோரப்படுவதால் பணம் பெற்று வழங்கும் அலுவலர்களுக்கும் கருவூல ஊழியர்கள...