ஓடைப்பட்டியில் பி.எம்.டி மக்கள் பாதுகாப்பு இயக்கத்தின் சார்பில் நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா!
பி.எம்.டி மக்கள் பாதுகாப்பு இயக்கத்தின் சார்பில் ஏழை எளிய குழந்தைகளுக்கு உதவித்தொகை மற்றும் நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்வு 28.01.2025 அன்று ஓடைப்பட்டியில் நடைபெற்றது.
தேனி மாவட்டம், உத்தமபாளையம் தாலுகா ஓடைப்பட்டியில் பசும்பொன் முத்துராமலிங்க தேவர் மக்கள் பாதுகாப்பு இயக்கத்தின் நிறுவன தலைவர் டாக்டர் கே.என் இசக்கி ராஜா நேற்று ஓடைப்பட்டியில் ஏழை எளிய மாணவ மாணவியருக்கு ரூ.2000 வீதம் கல்வி உதவித்தொகை வழங்கும் நிகழ்வு நடைபெற்றது. முன்னதாக ஓடைப்பட்டியில் உள்ள தேவர் சிலைக்கு தலைவர் தலைமையில் மாலை அணிவித்து மரியாதை செய்யப்பட்டது. நாட்டா கள்ளர் சமூகப் பெரியோர்களை மரியாதை நிமித்தமாக சந்தித்து விட்டு ஓடைப்பட்டி பேருந்து நிலையம் அருகில் சமூக மாணவ மாணவியர்களுக்கு கல்வி உதவித் தொகையினை டாக்டர் கே என் இசக்கி ராஜா வழங்கினார். அதனைத் தொடர்ந்து அவர் சிறப்புரையாற்றினார். இந்நிகழ்வில் தேனி மாவட்ட செயலாளர் ஜெயக்குமார், ஓடைப்பட்டி பேரூராட்சி பொதுச்செயலாளர் அஜித்குமார், மாவட்ட மாணவரணி முரளி கண்ணன், மாவட்ட பொதுச் செயலாளர் மணிகண்டன், இளைஞர் அணி செயலாளர் நாகராஜ், சின்னமனூர் நகர் ஒன்றிய செயலாளர் அருண் பிரசாத், சின்னமனூர் நகர தலைவர் தங்கமுத்து உட்பட மற்றும் பலர் கலந்து கொண்டனர்.
நிகழ்வின் புகைப்படங்கள் மற்றும் ஒளிப்பதிவு 👇
வலைப்பதிவு: காட்வின் ஜெபினேசர் மில்ராய், தேனி
நிழல் படங்கள் & ஒளிப்பதிவு: வெங்கட் சின்னமனூர்.





Comments
Post a Comment