தேனி மாவட்ட பாரா மெடிக்கல் லேப் கல்வி நலச்சங்கம் சார்பில் லேப் டெக்னீசியன் நாள் கொண்டாட்டம்:
ஆய்வக தொழில்நுட்ப வல்லுநர் தினம்
Laboratory technician Day
தேனி:
இந்தியாவில் மார்ச் 13 ஆம் தேதி ஆய்வக தொழில்நுட்ப வல்லுநர்கள் தினம் கொண்டாடப்படுகிறது.
ஆய்வக தொழில்நுட்ப வல்லுநர்கள் தினத்தின் தொடக்கமானது, சுகாதாரத் துறையில் ஆய்வக தொழில்நுட்ப வல்லுநர்கள் ஆற்றும் முக்கிய பங்கை அங்கீகரிப்பதை நோக்கமாகக் கொண்டது.
இந்தியாவில் ஆண்டுதோறும் மார்ச் 13 ஆம் தேதி கொண்டாடப்படும் இந்த நாள், அவர்களின் துல்லியம், அர்ப்பணிப்பு மற்றும் அயராத உழைப்பை அங்கீகரித்து பாராட்டுவதற்கான ஒரு தளமாக முக்கியத்துவம் வாய்ந்ததாக வளர்ந்துள்ளது.
பல ஆண்டுகளாக, திரைக்குப் பின்னால் விடாமுயற்சியுடன் செயல்படும் இந்த அறியப்படாத சுகாதாரப் பாதுகாப்பு வீரர்களின் பங்களிப்புகளை எடுத்துக்காட்டுவதற்காக இது அங்கீகாரத்தைப் பெற்றுள்ளது.
துல்லியமான நோயறிதல் முடிவுகளை வழங்குவதன் மூலம் நோயாளி பராமரிப்பில் ஆய்வக தொழில்நுட்ப வல்லுநர்கள் வகிக்கும் முக்கிய பங்கை வலியுறுத்தி, ஆய்வக தொழில்நுட்ப வல்லுநர்கள் தினம் நன்றியுணர்வு நாளாக பரிணமித்துள்ளது.
இது அவர்களின் பணியின் முக்கியத்துவத்தை நினைவூட்டுவதாகவும், சுகாதார சுற்றுச்சூழல் அமைப்பில் அவற்றின் முக்கியத்துவம் குறித்த விழிப்புணர்வைத் தொடர்ந்து ஏற்படுத்துவதாகவும் செயல்படுகிறது.
இந்த சிறப்பு நாள், ஆய்வக வல்லுநர்கள் தங்கள் நோயறிதல் நடைமுறைகளில் மிக உயர்ந்த தர துல்லியம் மற்றும் நம்பகத்தன்மையைப் பராமரிப்பதில் கொண்டுள்ள உறுதிப்பாட்டைக் காட்டுகிறது.
ஆய்வக தொழில்நுட்ப வல்லுநர் தினம் அவர்களின் அசைக்க முடியாத அர்ப்பணிப்பு மற்றும் நோயாளிகளின் நல்வாழ்வை உறுதி செய்வதில் அவர்கள் வகிக்கும் முக்கிய பங்கிற்கு அஞ்சலி செலுத்துவதாகும்.
தேனியில் லேப் டெக்னீசியன் டே கொண்டாட்டம்
லேப் டெக்னீசியன் நாளை முன்னிட்டு மார்ச் 13 ம் தேதி தேனி பேரா மெடிக்கல் லேப் கல்வி நலச்சங்கம் சார்பாக கொடியேற்றி அனைவருக்கும் இனிப்பு வழங்கி விழா இனிதாகக் கொண்டாடப்பட்டது.
மாநில துணைத் தலைவர் ரஞ்சித், தேனி மாவட்டச் செயலாளர் சுந்தரமூர்த்தி, மாவட்ட பொருளாளர் சத்யாவேல், மாவட்டத் தலைவர் சிக்கந்தர் ஒலி, மற்றும் மாவட்ட துணைச் செயலாளர் சுருளிநாதன் ஆகியோர் முன்னிலையில் நடைபெற்ற விழாவில், சங்க உறுப்பினர்கள் அனைவரும் கலந்து கொண்டார்கள்.
அதனைத் தொடர்ந்து வடபுதுப்பட்டி
அன்பு இல்ல ஆசிரமத்திற்கு சென்று அங்கு அவர்களுக்கு தேவையான அரிசி, பருப்பு மற்றும் இதர பொருட்கள் வழங்கப்பட்டது. விழாவில் கலந்து கொண்ட உறுப்பினர்கள் அனைவருக்கும் சிற்றுண்டி வழங்கப்பட்டது. இந்த வருடம் 2025 மார்ச் 13 லேப் டெக்னீசியன் நாள் இனிதாக கொண்டாட தேனி மாவட்ட சங்க உறுப்பினர்கள் அனைவரும் தங்கள் பங்களிப்பை மிகச் சிறப்பாக செய்ததற்காக. பொறுப்பாளர்கள் அனைவருக்கும் தங்கள் நன்றியை தெரிவித்துக் கொண்டனர்.
மேலும் தேனி மாவட்ட இந்திய மருத்துவர் சங்க தலைவர் மருத்துவர் ராஜ்குமாரை சங்கத்தின் சார்பாக சந்தித்து அவருக்கு வாழ்த்துக்கள் தெரிவித்து பொன்னாடை அணிவித்து மரியாதை செய்தனர்.
தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பு, தேனி மாவட்ட தலைவர் செல்வகுமாரை தேனி மாவட்ட சங்கம் சார்பாக பொறுப்பாளர்கள் சென்று லேப் டெக்னீசியன் டே அன்று மரியாதை நிமித்தமாக சந்தித்து பொன்னாடை அணிவித்தனர்.
Comments
Post a Comment