ஆண்டிபட்டி அருகே அழகாபுரி அரசு பள்ளியில் 72 வது ஆண்டு விழா.
ஆண்டிபட்டி, மார்ச், 21:
தேனி மாவட்டம் ஆண்டிபட்டி ஒன்றியம் வேலப்பர் கோயில் அருகே உள்ள தெ. அழகாபுரியில் உள்ள ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் 72 ஆவது ஆண்டு விழா சிறப்பாக கொண்டாடப்பட்டது. விழாவிற்கு முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர் ஜெகதா ஜெயக்குமார் தலைமை தாங்கினார். முன்னாள் மாவட்ட கவுன்சிலர் ராஜ்குமார் முன்னிலை வகித்தார். பள்ளி தலைமை ஆசிரியர் ஜெயா வரவேற்று பேசினார்.
விழாவில் மாணவ மாணவிகளின் பரதநாட்டியம், கும்மி, கோலாட்டம் உள்ளிட்ட ஆடல், பாடல் கலை நிகழ்ச்சிகள் சிறப்பாக நடைபெற்றது. விழாவில் பள்ளியில் நடந்த விளையாட்டு போட்டி மற்றும் பள்ளி விழாக்களில் வெற்றி பெற்ற மாணவ மாணவிகளுக்கும், கலை நிகழ்ச்சிகள் பங்கேற்ற மாணவர்களுக்கும் பரிசுகள் வழங்கப்பட்டது.
நிகழ்ச்சியில் பள்ளி மாணவர்கள், ஆசிரியர்கள், பள்ளி மேலாண்மை குழுவினர், பெற்றோர்கள், கிராம பொதுமக்கள் திரளாக கலந்து கொண்டனர். ஆசிரியை ராதா நன்றி கூறினார்.
செய்திகள் மற்றும் புகைப்படம்: மூத்த பத்திரிகையாளர் ஜான் தவமணி ஆண்டிப்பட்டி.



Comments
Post a Comment