Skip to main content

நாட்டாமை வீட்டில் தகராறில் ஈடுபட்ட பெண்கள் மீது நடவடிக்கை எடுக்க கோரி ஊர் பொதுமக்கள் டி.எஸ்.பி அலுவலகத்தில் புகார்.

கொண்டமநாயக்கன்பட்டியில் நாட்டாமை வீட்டில் தகராறில் ஈடுபட்ட பெண்கள் மீது நடவடிக்கை எடுக்க கோரி ஊர் பொதுமக்கள் டி.எஸ்.பி அலுவலகத்தில் புகார்.

ஆண்டிபட்டி, மார்ச், 21:

ஆண்டிபட்டி அருகே கொண்டமநாயக்கன்பட்டி பகுதியில் ஊழல் முறைகேடு செய்ததாக ஊர்தலைவர் பதவியில் இருந்து ஒருவரை அப்பகுதிமக்கள் நீக்கிவிட்டு புதிதாக ஒருவரை நியமித்த நிலையில் நீக்கப்பட்ட ஆத்திரத்தில் அந்த நபர் மற்றும் அவரது பெண்கள்  உள்ளிட்ட குடும்பத்தினர் புதிய தலைவரை நியமித்த ஊர் நாட்டாமையை வீடு புகுந்த தாக்கி தகாத வார்த்தைகளால் பேசி கொலைமிரட்டல் விடுத்ததாகவும், அதற்கு நடவடிக்கை எடுக்ககோரியும் துணை காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தை முற்றுகையிட்டு துணை காவல் கண்காணிப்பாளரிடம் மனு அளித்தனர்.

தேனி மாவட்டம் ஆண்டிபட்டி அருகே உள்ள கொண்டமநாயக்கன்பட்டியில் அனைத்து சமுதாயத்தையும் சேர்ந்த கிராமமக்கள் வசித்து வருகின்றனர். இங்கு ஆண்டுதோறும் பகவதி அம்மன் மற்றும் முத்தாலம்மன் கோவில் திருவிழாக்கள் பெரியதனம் மற்றும் நாட்டாண்மை தலைமையில் நடைபெறும். இந்நிலையில் கடந்த காலங்களில் நடைபெற்ற விழாக்களில் ஊர் தலைவராக இருக்கும் சக்திவேல் என்பவர் பந்தல் போடுவது, இன்னிசை கச்சேரி, நாடகம், ஆடல் பாடல் உள்ளிட்ட  பொழுதுபோக்கு அம்சங்களிலும், கொட்டு, மேளம் அன்னதானம், பூஜை பொருள்கள் வாங்குவது உள்ளிட்ட  அனைத்து பணிகளுக்கும் சம்பந்தப்பட்ட நபர்களிடம் கமிஷன் பெற்றுக்கொண்டு லட்சக்கணக்கான ரூபாய் அளவிற்கு முறைகேடு செய்ததாக புகார் எழுந்தது.

இதையடுத்து நேற்று முன்தினம் நடைபெற்ற ஊர் கூட்டத்தில் ஊர் தலைவராக இருக்கும் சக்திவேல் என்பவர் நீக்கம் செய்யப்பட்டு, அவருக்கு பதிலாக அவரது உடன்பிறந்த சகோதரர் சுப்புராஜ் என்பவர் ஊர் தலைவராக நியமிக்கப்பட்டார். இதனால் ஆத்திரம் அடைந்த முன்னாள் ஊர்  தலைவர் சக்திவேல் மற்றும் அவரது மகள்கள் பிரியா, வித்யா, சத்தியா, சுகன்யா ஆகிய நால்வரும் நேற்று நள்ளிரவில் புதிய ஊர் தலைவரை நியமித்த ஊர் நாட்டாமையாக இருக்கும் கண்ணபிரான் என்பவரது வீட்டிக்கு சென்று பூட்டியிருந்த  வீட்டின் கதவைத் தட்டி, அவரை அநாகரிமாகவும் ஆபாசமாகவும் பேசி, தனது தந்தை ஊர் தலைவர் பொறுப்பிலிருந்து நீக்கப்பட்டதற்கு நீ தான் காரணம் உன்னை கொல்லாமல் விடமாட்டோம் என்று கொலை மிரட்டல் விடுத்து அவரை தாக்க முற்பட்டுள்ளனர். 

இதையடுத்து கண்ணபிரான் தனது நண்பர்கள்  மூலம் காவல்துறைக்கு தகவல் கொடுத்தார். காவல்துறை வருவதை அறிந்து அங்கிருந்து கொலை மிரட்டல் விடுத்த முன்னாள்  ஊர்தலைவரின் மகள்கள் சென்றுவிட்டனர். இத்தகவல் அறிந்த  கொண்டமநாயக்கன்பட்டி  பெண்கள், உள்ளிட்ட ஊர் பொதுமக்கள் அனைவரும் கோபமடைந்து, நேற்று ஆண்டிபட்டி காவல்  துணை கண்காணிப்பளர் அலுவலகத்தில் முற்றுகையிட்டு ஊர் நாட்டாமை வீட்டிற்கு சென்று கொலை மிரட்டல் விடுத்து அவர் மீது தாக்குதல் நடத்த முயன்ற  முன்னாள் ஊர்தலைவர் சக்திவேல் மற்றும் அவரது  மகள்கள் மீது நடவடிக்கை எடுக்குமாறு கோரிக்கை வைத்தனர்.  ஆண்டிபட்டி துணை காவல்  கண்காணிப்பாளரிடம் புகார் மனு அளித்தனர்.  ஆண்டிப்பட்டி துணை காவல் கண்காணிப்பாளர் உரிய நடவடிக்கை எடுப்பதாக கூறியதையடுத்து கலைந்து சென்றனர்.

ஊர் பொதுமக்கள் அனைவரும் ஒன்று கூடி காவல்துறை கண்காணிப்பாளர் அலுவலகத்தை முற்றுகையிட்டதால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. 


Comments

Popular posts from this blog

தீண்டாமை கொடுமையில் இருந்து தங்களை காக்க வேண்டும் என்று தேனி கோட்டைப்பட்டி கிராம மக்கள் ஆட்சியரிடம் மனு!

தீண்டாமை கொடுமையில் இருந்து தங்களை காக்க வேண்டும் என்று தேனி கோட்டைப்பட்டி கிராம மக்கள் ஆட்சியரிடம் மனு! தேனி, மார்ச்., 07:  தீண்டாமை கொடுமையிலிருந்து மக்களை காப்பாற்றுங்கள், அரசு திட்டங்களை செயல்படுத்தவிடாமல் சாதிய வன்மத்துடன் தடுக்கும் நபர்கள் மீது நடவடிக்கை எடுங்கள் என்ற கோரிக்கையுடன் அரண்மனைபுதூர் ஊராட்சி கிராம கமிட்டி தலைவர் பாலசுந்தரராஜ் மற்றும் கோட்டைப்பட்டி கிராம பொதுமக்கள் ஆட்சியரிடம் மனு அளித்தனர். அந்த மனுவில் கூறியிருப்பதாவது:  இந்தியா நாடு சுதந்திரம் அடைந்து 75ஆண்டுகளுக்கு மேலாகியும், தீண்டாமை கொடுமை தலைவிரித்தாடுகிறது. தேனி மாவட்டம், தேனி வட்டம், அரண்மனை புதூர் ஊராட்சிக்குட்பட்ட கோட்டைப்பட்டி கிராமத்தில் ஜாதிய தீண்டாமை கொடுமை நடைபெறுகிறது. இங்கு வாழும் பட்டியல் பிரிவிலுள்ள தேவேந்திரகுல வேளாளர் சமூக மக்களுக்கு கிடைக்கக்கூடிய அடிப்படைவசதி திட்டங்களை தடுத்து வருகிறார்கள். கோட்டைப்பட்டி கிராமத்தில் வாழும் ராஜகம்பளத்து நாயக்கர் சமுதாயத்தைச்சேர்ந்த தங்கப்பாண்டி, சுந்தரவடிவேல், செல்வம் உட்பட பத்துபேர்கள் கொண்ட கும்பல் சேர்ந்து தேவேந்திரகுல வேளாளர் மக்கள் பொருளாதார ரீதிய...

காரைக்குடி சம்பவம்; அரசு ஊழியர்கள் கொதிப்பு!

காரைக்குடி சம்பவம்; அரசு ஊழியர்கள் கொதிப்பு! சிவகங்கை மாவட்டம், காரைக்குடி இராமசாமி தமிழ்க்கல்லூரியில் முத்துமாரி என்பவர் அலுவலக உதவியாளராகப் பணிபுரிந்து வருகிறார்.  நேற்று அவரை, கல்லூரி வளாகத்திற்கு உள்ளே வைத்து, கல்லூரியில் பணிபுரியும் தற்காலிக காவலர் பழனியப்பன் ஆபாசமாகப் பேசி, கொலைவெறித் தாக்குதல் நடத்தியதாக கூறப்படுகிறது. படுகாயம் அடைந்த அவர் மருத்துவமனையில் சிகிச்சைக்கு சேர்க்கப்பட்டுள்ளார்.  இதுகுறித்து அரசு ஊழியர்கள் சங்கம் சிவகங்கை மாவட்ட மையம் விடுத்துள்ள கண்டன அறிக்கையில்: சிவகங்கை மாவட்டம், காரைக்குடி ராமசாமி தமிழ்க்கல்லூரியில் அலுவலக உதவியாளராகப் பணிபுரியும் முத்துமாரி என்பவரை, கல்லூரி வளாகத்திற்கு உள்ளே வைத்து, ஆபாசமாகப் பேசி, கொலைவெறித் தாக்குதல் நடத்திய கொடுஞ்செயலை தமிழ்நாடு அரசு ஊழியர்கள் சங்கம் சிவகங்கை மாவட்ட மையம் வன்மையாக கண்டிக்கிறது. இக்கொடுஞ்செயலில் ஈடுபட்ட கல்லூரியில் பணிபுரியும் தற்காலிக காவலர் பழனியப்பன் என்பவரையும்,அதற்கு தூண்டுகோலாய் இருந்த கல்லூரியின் பொறுப்பு முதல்வர் நாகநாதனையும் வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின்கீழ் கொலைமுயற்சி, வழக்குப் பதிவுசெய்த...

தனித்தன்மையை இழந்து புள்ளி விபரம் கோரும் துறையாக மாறி வரும் கருவூலத்துறை!

தனித்தன்மையை இழந்து புள்ளி விபரம் கோரும் துறையாக மாறி வரும் கருவூலத்துறை!  தமிழ்நாடு கருவூல கணக்குத்துறை அலுவலர் சங்கம் வேதனை!! சென்னை: தமிழ்நாடு கருவூல கணக்குத்துறை அலுவலர் சங்க மாநிலத்தலைவர் ஜெ.மூர்த்தி மற்றும் பொதுச் செயலாளர் வெ.லெனின் ஆகியோர் கூட்டாக வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:               கருவூலத்துறையில் தற்போது கிட்டத்தட்ட 1600 க்கும் மேற்பட்ட பணியிடங்கள் காலியாக இருக்கும் சூழ்நிலையில் குறிப்பாக இந்த காலிப்பணியிடங்கள் மாவட்ட மற்றும் சார்நிலைக்கருவூலங்களில் அதிகமாக இருக்கும் நிலையில் தொடர்ச்சியாக தலைமை அலுவலகத்தின் வெவ்வேறு பிரிவுகளில் இருந்து பல்வேறு வகையான புள்ளி விபரங்கள் கோரப்படுவதோடு IFHRMSல் தரவுகளை மீண்டும் மீண்டும் பதிவேற்றம் செய்யவும் உயர் அலுவலர்களால் நெருக்கடி தரப்படுகிறது. கோரப்படுகின்ற புள்ளி விவரங்கள் அனைத்தும் 100% பணம் பெற்று வழங்கும் அலுவலர்களிடம் இருந்து பெறவேண்டிய தகவல்களாகும். ஒரு விபரம் முழுமை பெறுவதற்குள் அடுத்தடுத்த புள்ளி விபரங்கள் கோரப்படுவதால் பணம் பெற்று வழங்கும் அலுவலர்களுக்கும் கருவூல ஊழியர்கள...