தேனியில் மாநில அளவில் தொழிற்பயிற்சி நிலையங்களுக்கான விளையாட்டுப் போட்டிகள்!
தேனி மாவட்ட விளையாட்டு அரங்கில் 24.03.2025 திங்கட்கிழமை அன்று தமிழ்நாடு அரசு வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சித்துறையின் கீழ் செயல்படும் அரசு மற்றும் தனியார் தொழிற்பயிற்சி நிலையங்களில் பயிற்சி பெறும் ஆடவர் மற்றும் மகளிர் பயிற்சியாளர்களுக்கு மாநில அளவிலான விளையாட்டுப் போட்டிகள் தொடங்கி நடைபெற்று வருகிறது. இந்நிகழ்வில் மதுரை மண்டல இணை இயக்குநர் ஆர்.மகேஸ்வரன், வரவேற்புரையாற்றினார். தேனி மாவட்ட வருவாய் அலுவலர் மகாலட்சுமி தலைமையேற்றார். மேலும் அவர் விளையாட்டு வீரர்களின் அணிவகுப்பு மரியாதையை ஏற்று போட்டியை துவக்கி வைத்து சிறப்புரையாற்றினார்.
இன்று (24.03.25) நடைபெற்ற ஆடவர் பயிற்சியாளர்களுக்கான குழு விளையாட்டு போட்டிகளில் மொத்தம் 286 விளையாட்டு வீரர்கள் கலந்து கொண்டனர். இதில் கைப்பந்து போட்டியில் சேலம் மற்றும் விழுப்புரம் மண்டல அணிகள் மோதின. இதில் விழுப்புரம் மண்டலத்தை சேர்ந்த கடலூர் அரசினர் தொழிற்பயிற்சி நிலைய அணி வெற்றி பெற்றது. Carrom (Double ) போட்டியில் சென்னை மற்றும் மதுரை மண்டலத்துக்கு இடையே போட்டி நடைபெற்றது. இதில் சென்னை மண்டலத்தை சேர்ந்த ஆர் கே நகர் தொழிற்பயிற்சி நிலைய பயிற்சியாளர்கள் C. நாகராஜ் மற்றும் S. தினேஷ் வெற்றி பெற்றனர்.
சதுரங்க போட்டியில் கோவை மற்றும் மதுரை மண்டலங்கள் போட்டியிட்டன. இதில் கோவை மண்டலத்தை சேர்ந்த செம்போடை அரசினர் தொழிற்பயிற்சி நிலைய பயிற்சியாளர் P. சிநேகன் வெற்றி பெற்றார். Ball Badmiton விளையாட்டு விழுப்புரம் மற்றும் சென்னை மண்டல அணிகளுக்கிடையே நடைபெற்றது. இதில் விழுப்புரம் மண்டலத்தைச் சார்ந்த ஆண்டிமடம் அரசினர் தொழிற்பயிற்சி நிலைய பயிற்சியாளர்கள் வெற்றி பெற்றனர்.
கால்பந்து போட்டியில் மதுரை மற்றும் கோவை மண்டல அணிகள் மோதின. இதில் கோவை மண்டலத்தை சார்ந்த கூடலூர் அரசினர் தொழிற்பயிற்சி நிலைய பயிற்சியாளர்கள் வெற்றி பெற்றனர்.
அதனைத் தொடர்ந்து, ஆடவர் குழு விளையாட்டுப் போட்டிகளுக்கான பரிசளிப்பு விழா மாலை 5 மணி அளவில் நடைபெற்றது. இந்நிகழ்வில் தேனி அரசினர் தொழிற்பயிற்சி நிலைய முதல்வர் சேகரன் வரவேற்புரை ஆற்றினார். மதுரை மண்டல பயிற்சி இணை இயக்குனர் மகேஸ்வரன், திருச்சி மண்டல பயிற்சி இணை இயக்குநர் ஜான் போஸ்கோ, ஆண்டிபட்டி மகளிர் அரசினர் தொழிற் பயிற்சி நிலைய முதல்வர் சரவணன், போடி அரசினர் தொழிற்பயற்சி நிலைய முதல்வர் சதீஷ் குமார் மற்றும் தேனி அரசினர் தொழிற்பயிற்சி நிலைய மேலாண்மை குழு தலைவர் முனைவர் அரவிந்த் ஆகியோர் வெற்றி பெற்ற பயிற்சியாளர்களுக்கு பரிசு மற்றும் கேடயம் வழங்கி பாராட்டினார்கள்.
தேனி அரசினர் தொழிற்பயிற்சி நிலைய பயிற்சி அலுவலர் எம்.அன்பரசன் நன்றியுரை ஆற்றினார்.
அனைத்து ஏற்பாடுகளையும் தேனி அரசு தொழில் பயிற்சி நிலைய ஆசிரியர்கள், அலுவலர்கள் மற்றும் மாணவர்கள் சிறப்பாக செய்திருந்தனர்.
மேலும் படங்களுக்கு கீழே உள்ள லிங்கை கிளிக் செய்யவும்
https://drive.google.com/drive/folders/1F5VVlyk0GgNWWXd95eYnP0981UTr-Wtk






Comments
Post a Comment