மாநில அளவில் தேனியில் நடைபெற்று வரும் தொழிற்பயிற்சி நிலையங்களுக்கான விளையாட்டுப் போட்டிகளின் இரண்டாம் நாள் நிகழ்வுகள்
மாநில அளவில் தேனியில் நடைபெற்று வரும் தொழிற்பயிற்சி நிலையங்களுக்கான விளையாட்டுப் போட்டிகளின் இரண்டாம் நாள் நிகழ்வுகள்.
தேனி, மார்ச், 25:
தேனி மாவட்ட விளையாட்டு அரங்கில் கடந்த திங்கட்கிழமை முதல் தமிழ்நாடு அரசு வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சித்துறையின் கீழ் செயல்படும் அரசு மற்றும் தனியார் தொழிற்பயிற்சி நிலையங்களில் பயிற்சி பெறும் ஆடவர் மற்றும் மகளிர் பயிற்சியாளர்களுக்கு மாநில அளவிலான விளையாட்டுப் போட்டிகள் தொடங்கி நடைபெற்று வருகிறது.
இன்று (25.03.25) நடைபெற்ற ஆடவர் தடகள போட்டியில் மொத்தம் 171 விளையாட்டு வீரர்கள் கலந்து கொண்டனர். இதில் 100 மீட்டர் தடகள போட்டியில் ஓசூர் அரசினர் தொழிற்பயிற்சி நிலையத்தை சார்ந்த பயிற்சியாளர் J. நவீன் குமார் முதலிடம் பெற்றார். நீளம் தாண்டுதல், 200 மீட்டர், 400 மீட்டர் தடகள பிரிவில் போடி அரசினர் தொழிற்பயிற்சி நிலைய பயிற்சியாளர் A.சுகுமாறன் முதலிடம் பிடித்தார். 800 மீட்டர் ஓட்டப்பந்தயத்தில் சேரன்மாதேவி, SCAD தனியார் தொழிற்பயிற்சி நிலைய பயிற்சியாளர் S. சிவபாஸ்கர் முதலிடம் பிடித்து வெற்றி பெற்றார். 1500 மீட்டர் தடகள போட்டியில் ராஜபாளையம் ராம்கோ தனியார் தொழிற்பயிற்சி நிலையம் பயிற்சியாளர் R. ராமசந்திரன் முதலிடம் பெற்றார்.
4x 100 மீட்டர் Relay போட்டியில் நாமக்கல் அரசினர் தொழிற்பயிற்சி நிலைய பயிற்சியாளர்கள் குழு வெற்றி பெற்றனர்.
ஈட்டி எறிதல் போட்டியில் பண்ருட்டி, சக்தி தனியார் தொழிற்பயிற்சி நிலையம் சேர்ந்த பயிற்சியாளர் M. தணிகை செல்வன் முதலிடம் பெற்றார். குண்டு எறிதல் போட்டியில் போடி அரசினர் தொழிற்பயிற்சி நிலைய பயிற்சியாளர் R. சரவணன் முதலிடம் பெற்றார். தட்டு எறிதல் போட்டியில் எரக்குடி ராமசாமி செல்லப்பு தனியார் தொழிற்பயிற்சி நிலையத்தை சார்ந்த பயிற்சியாளர் S. குமரன் முதலிடம் பெற்றார். மேலும் தனி நபர் வாகை பட்டத்தை போடி அரசினர் தொழிற்பயிற்சி நிலையத்தை சார்ந்த பயிற்சியாளர் A சுகுமாறன் பெற்றார். ஆடவர் குழு மற்றும் தனிநபர் விளையாட்டுப் போட்டிகளின் முடிவில் 29 புள்ளிகளை பெற்று overall Champion பட்டத்தை மதுரை மண்டல அணி பெற்றது.
அரசு மற்றும் தனியார் தொழிற் பயிற்சி நிலையங்களுக் இடையேயான ஆடவர் விளையாட்டுப் போட்டிகளின் நிறைவு விழாவில் மதுரை மண்டல பயிற்சி இணை இயக்குனர் மகேஸ்வரன், தேனி அரசினர் தொழிற்பயிற்சி முதல்வர் சேகரன், ஆண்டிபட்டி மகளிர் அரசினர் தொழிற் பயிற்சி நிலைய முதல்வர் சரவணன், போடி அரசினர் தொழிற்பயற்சி நிலைய முதல்வர் சதீஷ் குமார் மற்றும் தேனி அரசினர் தொழிற்பயிற்சி நிலைய மேலாண்மை குழு தலைவர் முனைவர் அரவிந்த், தேனி மாவட்ட திறன் பயிற்சி அலுவலக உதவி இயக்குனர் பாஸ்கரன், தேனி அரசினர் தொழிற்பயிற்சி நிலைய நிர்வாக அலுவலர் சிவகாமி ஆகியோர் வெற்றி பெற்ற பயிற்சியாளர்களுக்கு பரிசு மற்றும் கேடயம் வழங்கி பாராட்டினார்கள். ஏற்பாடுகளை தேனி அரசினர் தொழிற்பயிற்சி பள்ளி பயிற்றுநர்கள் அலுவலர்கள் மற்றும் மாணவர்கள் சிறப்பாக செய்திருந்தனர்.




Comments
Post a Comment