பத்திர பதிவிற்கு லஞ்சம் வாங்குவதாக ஆண்டிபட்டி சார் பதிவாளரை கண்டித்து போராட்டம்.
ஆண்டிபட்டி, மார்ச்.25
ஆண்டிபட்டி பத்திரப்பதிவு அலுவலகத்தை முற்றுகையிட்டு, கட்டாய லஞ்ச வசூல் செய்வதாக கூறி, ஆண்டிபட்டி சார் பதிவாளரை கண்டித்து, ஆண்டிபட்டி ரியல் எஸ்டேட் சங்கத்தினர் போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
தேனி மாவட்டம் ஆண்டிபட்டி முத்துகிருஷ்ணாபுரம் சாலையில் ஆண்டிப்பட்டி சார்பதிவாளர் அலுவலகம் செயல்பட்டு வருகிறது.இங்கு முத்துச்செல்வன் என்பவர் சார் பதிவாளராக இருந்து வருகிறார்.இங்கு பத்திரப்பதிவு செய்வதில் கட்டாய லஞ்ச வசூல் செய்வதாக பரவலாக புகார் எழுந்தது.ஆண்டிபட்டி பத்திரப்பதிவு அலுவலகத்தில் கடந்த சில மாதங்களாக பத்திரப்பதிவு செய்வதற்கு பட்டியல் போட்டு கட்டாய லஞ்ச வசூல் செய்வதாக ரியல் எஸ்டேட் உரிமையாளர்கள் சங்கம் புகார் தெரிவித்து வந்த நிலையில், ஆண்டிபட்டி சார்பதிவாளர் முத்துசெல்வன் பத்திரப்பதிவு செய்ய ஒரு சென்டிற்கு 25 ஆயிரம் ரூபாயும்,21 சென்ட் நிலம் பதிவு செய்ய 50 ஆயிரம் ரூபாயும் ,அப்ரூவல் பெறப்பட்ட ஒரு செண்டிற்கு ஐந்தாயிரம் ரூபாயும் என பட்டியல் போட்டு கட்டாய லஞ்சவசூல் செய்து வருகிறார்.
இதற்காக அலுவலகத்திற்கு வெளியே தனி நபர்களை நியமித்தும் வசூல் செய்வதாக புகார் எழுந்துள்ளது.இதைக் கண்டித்து இன்று சார்பதிவாளர் அலுவலகம் முன்பு கூடிய ஆண்டிபட்டி வட்டார ரியல் எஸ்டேட் சங்கத்தினர் தலைவர் ஷேட் .பரமேஸ்வரன், செயலாளர் கணேசன் ஆகியோர் முன்னிலையில் பத்திரப்பதிவு அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர்.கட்டாய லஞ்சம் பெறும் சார்பதிவாளர் முத்து செல்வன் மீது நடவடிக்கை எடுக்க கோரி கோஷங்களையும் எழுப்பினார்கள்.இதனால் ஆண்டிபட்டி சார்பதிவாளர் அலுவலகத்தில் பரபரப்பு நிலவியது. மேலும் கட்டாய லஞ்ச வசூல் செய்யும் சார்பதிவாளர் மீது தமிழக அரசு உரிய நடவடிக்கை எடுக்காத பட்சத்தில் அடுத்த கட்டமாக மாபெரும் உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட போவதாகவும் ரியல் எஸ்டேட் சங்கத்தினர் தெரிவித்தனர்.
செய்திகள் மற்றும் புகைப்படம்: மூத்த பத்திரிகையாளர் ஜான் தவமணி ஆண்டிப்பட்டி.

Comments
Post a Comment