தேனி ஆட்சியர் அலுவலகத்தில் டாக்பியா அனைத்து பணியாளர்கள் சங்கம் கோரிக்கை ஆர்பாட்டம்! தமிழ்நாடு முழுவதும் உள்ள தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கங்கள் மற்றும் நகர கூட்டுறவு கடன் சங்கங்களின் கீழ் இயங்கி வரும் நியாயவிலைக்கடைகளில் பணிபுரியும் நியாயவிலைக்கடை விற்பனையாளர்கள் சந்தித்து வரும் பல்வேறு இடர்பாடுகளை களைவது தொடர்பாக அரசின் கவனத்தை ஈர்க்கும் பொருட்டு தமிழ்நாடு முழுவதும் மாவட்ட தலைநகரங்களில் கோரிக்கை ஆர்பாட்டம் நடத்தி இதன் இறுதியில் தமிழ்நாடு முதலமைச்சருக்கு கோரிக்கை மனு அனுப்பும் வகையில் மாவட்ட ஆட்சித்தலைவரிடம் கோரிக்கை மனு வழங்கிட முடிவு செய்யப்பட்டது. இதன் அடிப்படையில் 27.06.2025 வெள்ளிக்கிழமை 11.00 மணி அளவில் தேனி மாவட்டத்தில் மாவட்ட தலைவர் K.அருணகிரி தலைமையிலும், மாவட்ட செயலாளர் P.காமராஜபாண்டியன் மற்றும் மாவட்ட பொருளாளர் K. சரவணன் முன்னிலையிலும் மாபெரும் கோரிக்கை ஆர்பாட்டம் நடத்தி தேனி மாவட்ட ஆட்சித்தலைவர் வாயிலாக தமிழ்நாடு முதலமைச்சருக்கு அனுப்பும் வகையில் கோரிக்கை மனு வழங்கப்பட்டது. இந்த ஆர்பாட்டத்தில் மாவட்ட துணைத்தலைவர்கள் M.காளிப்பாண்டியன், S.செல்லாண்டி, மாவட்ட இ...
உலகம் முழுவதும் உள்ள தமிழ் செய்திகளை தெரிந்து கொள்ள