தேனி:
தமிழக அரசின் வருவாய்த்துறையின் கையில் இருக்கும் நில அளவை பதிவேடுகள் துறையை தனியாருக்கு தாரை வார்க்கும் அரசாணை 297-யை ரத்து செய்து, மூன்று ஆண்டுகளுக்கு நிர்வாக அனுமதி அளிக்கும் அரசாணை 420 ஐம் திரும்ப பெற வலியுறுத்தி மாநிலம் தழுவிய கண்டன ஆர்ப்பாட்டத்தை கருப்பு பட்டை அணிந்து தமிழ்நாடு நில அளவை அலுவலர்கள் ஒன்றிப்பு இன்று நடத்தியது. அதை ஒட்டி தேனி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தின் முன்பு தமிழ்நாடு நில அளவை அலுவலர்கள் ஒன்றிப்பு சங்கத்தின் தேனி மாவட்ட தலைவர் வேல்முருகன் தலைமையில் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. நிகழ்வில் செல்வராஜ் மாவட்ட துணை தலைவர், கார்த்திகேயன் உத்தமபாளையம் கோட்டத் தலைவர் முன்னிலை வகிக்க மாவட்டச் செயலாளர் சேதுபதி ராஜா விளக்க உரை ஆற்றினார்.
நிகழ்வில் தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கத்தின் மாவட்ட தலைவர் தாஜுதீன், கிராம நிர்வாக அலுவலர் முன்னேற்ற சங்கத்தின் மாவட்ட தலைவர் கவிதா ஆகியோர் சிறப்புரை ஆற்றினர். முடிவில் மாவட்ட பொருளாளர் வைரமுத்து நன்றி கூறினார். ஏராளமான உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.
செய்திகள்: பாலகுரு
சிறப்பு செய்தியாளர்,
தேனி .


Comments
Post a Comment