பெரியகுளத்தில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சி சார்பில் தீர்மான விளக்க பொதுக்கூட்டம்.
செய்தியாளர் கார்த்திக்
தேனி மாவட்டம் பெரியகுளம் புதிய பேருந்து நிலைய சந்திப்பில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சி மாநில கட்சியாக அங்கிகாரம், வக்ஃபு திருத்தச் சட்டம் மற்றும் திருச்சியில் நடைபெற்ற பேரணி ஆகிவை குறித்த தீர்மான விளக்க பொதுக்கூட்டம் நடைபெற்றது.
பெரியகுளம் நகர செயலாளர் ஜோதிமுருகன் தலைமையில் நடைபெற்ற இந்தக் கூட்டத்தில் முதன்மை செயலாளர் ஏ.சி. பாவரசு விளக்கவுரையாற்றினார். மாவட்ட செயலாளர் ஜெ.ரபீக், சார்பு அணி நிர்வாகிகள் மது, தொல் தளபதி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
சட்ட மன்ற தொகுதி செயலாளர் சுசி தமிழ்பாண்டியன் அனைவரையும் வரவேற்றார். மாவட்ட மேலிட பொறுப்பாளர்கள் செல்வஅரசு, முன்னாள் தேனி கிழக்கு மாவட்ட செயலாளர் நாகரத்தினம், திண்டுக்கல்-தேனி மண்டல செயலாளர் தமிழ்வாணன் ஆகியோர் சிறப்புரையாற்றினர். கூட்டத்தில் பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப் பட்டன.
கட்சியின் சின்னமான பானை சின்னத்தை பொது மக்களிடம் கொண்டு சேர்க்கும் வகையில் பெரியகுளம் சட்டமன்ற தொகுதி செயலாளர் சுசி தமிழ்ப் பாண்டியன் தலைமையில் கூட்டத்தில் கலந்து கொண்ட பொதுமக்களுக்கு பானைகள் வழங்கப்பட்டது. தொழிலாளர் விடுதலை முன்னனி மாவட்ட துணை அமைப்பாளர் காளிதாஸ், பெரியகுளம் ஒன்றிய பொருளாளர் சையது, இஸ்லாமிய ஜனநாயக பேரவை மாவட்ட துணை அமைப்பாளர் தாரிக் மற்றும் இளஞ்சிறுத்தை எழுச்சி பாசறை மாவட்ட துணை அமைப்பாளர் பாலமுருகன் ஆகியோரது ஏற்பாட்டில் கூட்டத்தில் கலந்து கொண்ட மகளிருக்கு கட்சி கொடியுடன் கூடிய சேலைகள் வழங்கப்பட்டன.
இதில் மாவட்ட, நகர, ஒன்றிய நிர்வாகிகள், சார்பு அணி நிர்வாகிகள் உள்ளிட்ட ஏராளமானோர் கலந்து கொண்டனர். மகளிர் விடுதலை இயக்க நகர செயலாளர் ஈஸ்வரி நன்றி கூறினார்.

Comments
Post a Comment