தமிழ்நாடு அரசால் ஏற்படுத்தப்பட்டுள்ள கிறித்தவ உபதேசியார்கள் மற்றும் பணியாளர்கள் நல வாரியம் திருச்சபைகளுக்கு பயன் உள்ளதா? ஆபத்தானதா?
தமிழ்நாடு அரசால் ஏற்படுத்தப்பட்டுள்ள கிறித்தவ உபதேசியார்கள் மற்றும் பணியாளர்கள் நல வாரியம் திருச்சபைகளுக்கு பயன் உள்ளதா? ஆபத்தானதா? உலக தமிழ் கிறித்தவ சம்மேளனம் பொருளாளர் & தலைமை செய்தி தொடர்பாளர் ஜெபசிங் விளக்கம். தமிழ்நாடு அரசிடம் கடந்த 2019ம் ஆண்டே கிறித்தவ சமூக செயற்பாட்டாளர்களால் 15 அம்ச கோரிக்கை அடங்கிய மனு (முதல் கோரிக்கையாக உலமாக்கள் நல வாரியம் இருப்பது போன்று திருச்சபை பணியாளர்கள் வாரியம் அமைப்பது, இரண்டாவது 2008ம் ஆண்டே துவங்கப்பட்டு தமிழகத்தில் சிறப்பாக செயல்பட்டு வருகிற முஸ்லிம் மகளிர் உதவும் சங்கத்தை போன்று கிறித்தவ மகளிர் உதவும் சங்கம் அமைப்பது) அப்போதைய சிறுபான்மை நலத்துறை இயக்குநர் வள்ளலாரிடம் வழங்கப்பட்டது. அதன் தொடர்ச்சியாக கடந்த ஆட்சியின் போது 2019 ம் ஆண்டு கிறித்தவ மகளிர் உதவும் சங்கத்தை அப்போதைய அதிமுக அரசு நிறைவேற்றிகொடுத்தது. அரசின் நிதி சுமை, சட்டமன்ற தேர்தல் போன்றவற்றின் காரணமாக பிறதிட்டங்கள் கிடப்பில் போடப்பட்டன. தற்போது திமுக அரசு பதவியேற்று சிறுபான்மை மக்களுக்கு பல்வேறு சலுகைகளை சட்டமன்றத்தில் 08.09.21 அன்று 2021 - 2022 மானியக் கோரிக்கையில் செ...